விளையாட்டு

அன்று பாகிஸ்தான்,இன்று ஆப்கானிஸ்தான்: கிரிக்கெட்டின் தலைநகரம் என்பதை மீண்டும் நிரூபித்த சென்னை ரசிகர்கள்!

சென்னை அணி ரசிகர்களின் அன்பால் நெகிழ்ந்த ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள் போட்டி முடித்த பின்னர் சேப்பாக்கம் மைதானத்தை வலம் வந்து ரசிகர்களின் அன்பை ஏற்றுக்கொண்டனர்.

அன்று பாகிஸ்தான்,இன்று ஆப்கானிஸ்தான்: கிரிக்கெட்டின் தலைநகரம் என்பதை மீண்டும் நிரூபித்த சென்னை ரசிகர்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் 1975ம் ஆண்டிலிருந்து நடைபெற்று வருகிறது. இந்த உலகக்கோப்பையை 1983ம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக கைப்பற்றியது. அதன்பின் 2011-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக்கோப்பையை தோனி தலைமையிலான அணி வென்றது.

தற்போது 2023ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், பாகிஸ்தான் -ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி சர்வதேச ஒருநாள் போட்டிகளில் பாகிஸ்தானை முதல் முறையாக வீழ்த்தி அசத்தியது.

இந்த போட்டிக்கு ஆரம்பத்தில் இருந்தே அதிகளவில் பாகிஸ்தான் ஜெர்சி அணிந்த இந்திய ரசிகர்கள் மைதானத்துக்கு வருகை தந்தனர். அவர்களிடம் தொலைக்காட்சி நிறுவனங்கள் பேட்டியெடுத்தபோது, அகமதாபாத் மைதானத்தில் பாகிஸ்தான் அணிக்கு நடந்த சம்பவத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்து நாங்கள் பாகிஸ்தானை ஆதரிப்போம் என்று தெரிவித்திருந்தனர்.

அன்று பாகிஸ்தான்,இன்று ஆப்கானிஸ்தான்: கிரிக்கெட்டின் தலைநகரம் என்பதை மீண்டும் நிரூபித்த சென்னை ரசிகர்கள்!

மேலும் போட்டியை காண வந்த பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் அஹமதாபாத் மைதானத்தில் பாகிஸ்தான் ஜெர்சியை கூட வாங்க முடியவில்லை. ஆனால், இங்கு ஏராளமான உள்ளூர் ரசிகர்கள் பாகிஸ்தான் ஜெர்சி அணிந்து வந்து பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள். தெற்கு எப்போதும் தெற்குதான் என கூறினார்.

போட்டி நடைபெற்றுக்கொண்டிருந்தபோது பாபர் ஆஸம் ஆட வந்த போது சென்னை ரசிகர்கள் பாபர் பாபர் என்று கூறி அவரை வரவேற்று கொண்டாடினர். அதே நேரம் பிற்பாதியில் ஆப்கானிஸ்தான் அணி சிறப்பான செயல்பட்டபோது அந்த அணியையும் சென்னை ரசிகர்கள் பாராட்டினர்.

சென்னை அணி ரசிகர்களின் அன்பால் நெகிழ்ந்த ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள் போட்டி முடித்த பின்னர் சேப்பாக்கம் மைதானத்தை வளம் வந்து ரசிகர்களின் அன்பை ஏற்றுக்கொண்டனர். இதற்கு முன்னர் 1999-ம் ஆண்டு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த இந்தியா - பாகிஸ்தான் டெஸ்ட் போட்டியில் பாக்கிஸ்தான் வெற்றிபெற்றது.

அன்று பாகிஸ்தான்,இன்று ஆப்கானிஸ்தான்: கிரிக்கெட்டின் தலைநகரம் என்பதை மீண்டும் நிரூபித்த சென்னை ரசிகர்கள்!

இந்தியா தோல்வியடைந்த அதிர்ச்சியில் இருந்த ரசிகர்கள் அடுத்த கணமே சிறப்பாக ஆடிய பாகிஸ்தான் அணிக்கு பாராட்டுகளை தெரிவிக்கத் தொடங்கினர்.

மைதானம் முழுக்க பாகிஸ்தான் வீரர்களுக்கு ஆதரவாக கரகோசங்கள் எழுந்தது. இந்தியாவுக்குள் தங்களுக்கு இந்த அளவு ஆதரவு கிடைக்கும் என்பதை எதிர்பார்க்காத பாகிஸ்தான் வீரர்கள், சென்னை ரசிகர்களின் ஆதரவால் நெகிழ்ந்து மைதானத்தை சுற்றி வலம் வந்து ரசிகர்களின் பாராட்டுகளை ஏற்றுக்கொண்டனர். அப்போது நடந்த சம்பவம் தற்போது மீண்டும் சென்னை சேப்பாக்கத்தில் அரங்கேறியுள்ளது.

banner

Related Stories

Related Stories