விளையாட்டு

பேட்டிங் மட்டுமே கிரிக்கெட் அல்ல : சென்னை மைதானம் குறித்த ICC -யின் விமர்சனம் சரியா ? தவறா ?

பேட்டிங் மட்டுமே கிரிக்கெட் அல்ல : சென்னை மைதானம் குறித்த ICC -யின் விமர்சனம் சரியா ? தவறா ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் உலகக்கோப்பை தொடர் தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி 4 வெற்றிகளை பெற்று புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. இதில் சென்னை மற்றும் அஹமதாபாத் ஆகிய நகரங்களில் பந்துவீச்சுக்கு சாதகமான மைதானத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

ஆனால், அந்த இரண்டு மைதானங்களுக்கும் ஐசிசி சார்பில் சராசரி மைதானம் என புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் பாரம்பரியமாக சில மைதானங்கள் பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும். அதில் சென்னை மைதானம் முதன்மையானது.

பிற மைதானங்களை போல அல்லாமல் பேட்டிங், வேகப்பந்து வீச்சு, சுழற்பந்து என அனைத்துக்கும் சென்னை மைதானம் ஒத்துழைக்கும். இதே மைதானத்தில்தான் ஆஸ்திரேலிய அணி இந்திய சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 199 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதே மைதானத்தில்தான் இந்தியா அணியின் தொடக்க வீரர்களும் ஆஸ்திரேலிய வேகத்துக்கு பலியாகினர்.

பேட்டிங் மட்டுமே கிரிக்கெட் அல்ல : சென்னை மைதானம் குறித்த ICC -யின் விமர்சனம் சரியா ? தவறா ?

இதே மைதானத்தில், அதே போட்டியில்தான் விராட் கோலியும், கே.எல்.ராகுலும் அபாரமாக ஆடி அரை சதம் விளாசி அணியை வெற்றிபெற வைத்தனர். இவ்வாறு சுழற்பந்து, வேகப்பந்து வீச்சு, பேட்டிங் என அனைத்தும் துறையும் சென்னை மைதானத்தில் அதன் சாகசத்தை காட்டியது.

இப்படிப்பட்ட பேட்டிங், பௌலிங் என இரண்டுக்கும் சம அளவில் ஒத்துழைப்பு கொடுத்த மைதானத்துக்கு ஐசிசி முழு புள்ளிகளையும் அளித்து இருக்க வேண்டும். இதற்கு அடுத்து நடைபெற்ற போட்டிகளிலும் சென்னை மைதானம் பேட்டிங், பௌலிங் என இரண்டுக்கும் சம அளவில் ஒத்துழைப்பு கொடுத்தது. ஆனால், இந்த மைதானத்துக்கு ஐசிசி சராசரி மதிப்பு கொடுத்தது தற்போது சர்ச்சையாகியுள்ளது.

ஏற்கனவே லிமிடெட் ஓவர் போட்டிகள் வணிக காரணங்களுக்காக பேட்டிங்க்கு சாதகமாக மாறி வருகிறது. ஐசிசி-யும் அவர்களுக்கு சாதகமாகவே விதிகளை கொண்டு வருகிறது. இப்படி பட்ட நிலையில், ஒவ்வொரு போட்டியிலும் 300+, 350 + என்று எடுத்தால் மட்டுமே நல்ல மைதானம் என ஐசிசி வெளிப்படையாக நினைக்கிறதா என்ற கேள்வியும் எழுகிறது.

பேட்டிங் மட்டுமே கிரிக்கெட் அல்ல : சென்னை மைதானம் குறித்த ICC -யின் விமர்சனம் சரியா ? தவறா ?

இதே வெளிநாடுகளில் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக அமைக்கப்படும் மைதானத்தில் குறைந்த ரன்கள் மட்டுமே அடிக்கப்பட்டாலும், அதற்கு ஐசிசி நல்ல மதிப்பெண்களையே வழகுகிறது. அதுவே துணைக்கண்ட நாடுகளில் சுழற்பந்து வீச்சுக்கு ஏற்ப மைதானங்கள் அமைக்கப்பட்டு, அங்கு குறைந்த ரன்கள் எடுக்கப்பட்டால் அந்த மைதானத்துக்கு குறைவான புள்ளிகளை ஐசிசி வழங்குவதும் தொடர்கதையாகி வருகிறது.

துணைக்கண்ட நாடுகளை சேராத விமர்சகர்கள் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான துணைக்கண்ட மைதானத்தில் இங்கிலாந்து, தென்னாபிரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் திணறினால் உடனடியாக மைதானத்தை குழி பிட்சுகள் என குறை சொல்வதும், அதே துணைக்கண்ட அணிகள் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான மைதானத்தில் திணறினால் உடனே துணைக்கண்ட அணிகளின் பேட்டிங் திறனை விமர்சிப்பதும் வாடிக்கையாகி வருகிறது. இது அதோடு நிற்காமல் நமது நாடுகளை சேர்ந்த விமர்சகர்களும் வெளிநாட்டு விமர்சகர்களுடன் சேர்ந்து துணைக்கண்ட அணிகளை விமர்சிப்பதும் தொடர்ந்து வருகிறது.

சுழற்பந்து என்பது கிரிக்கெட்டில் ஒரு கலை. அதனை போற்றிப்பாதுகாக்க வேண்டிய ஐசிசி அமைப்பும் சுழற்பந்துக்கு சாதகமான மைதானத்துக்கு பாகுபாடு காட்டி வருவது விமர்சனத்தை ஏற்படுத்தி வருகிறது. இங்கிலாந்தில் கடந்த சில ஆண்டுகளாக தார் ரோடு போல வேகப்பந்து வீச்சு, சுழற்பந்து வீச்சு என எதற்கும் ஒத்துழைக்காத மைதானங்கள் மட்டுமே அமைக்கப்பட்டு வருகிறது.

பேட்டிங் மட்டுமே கிரிக்கெட் அல்ல : சென்னை மைதானம் குறித்த ICC -யின் விமர்சனம் சரியா ? தவறா ?

முழுக்க முழுக்க பேட்டிங்க்கு சாதகமான இந்த மைதானங்களில் ஒவ்வொரு போட்டியிலும் 350+, 400+ என அடிக்கப்படும்போது அந்த மைதானத்துக்கு எல்லாம் நல்ல மைதிபெண்களை ஐசிசி வழங்கி வந்ததும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் மும்பை, டெல்லி, பெங்களூரு போன்ற மைதானங்கள் பேட்டிங்க்கு நன்கு ஒத்துழைக்க கூடியது. அதே நேரம் தரம்சாலா, கொல்கத்தா, மொஹாலி மைதானங்கள் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமானது. சென்னை, லக்னோ போன்ற மைதானங்கள் சூழலுக்கு ஒத்துழைக்க கூடியது. இப்படி பலதரப்பட்ட விளையாட்டு மைதானங்கள் இந்தியாவில் இருக்கும் நிலையில், பேட்டிங் மைதானம் மட்டுமே சிறந்தது, மற்றது எல்லாம் சுமார் அல்லது மோசமானது என ஐசிசி நினைத்தால் அது கிரிக்கெட்டின் அழிவுக்கு மட்டுமே வழிவகுக்கும்.

உலகக்கோப்பையில் சென்னை, அஹமதாபாத் மைதானத்தை குறித்த ஐசிசி-யின் மதிப்பீட்டுக்கு பதலித்த இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் கருத்து இங்கு முக்கியமானது. " 300, 350 ரன்கள் குவிக்கும் பிட்ச் தான் நல்ல பிட்ச் என்றால் எதற்காக இங்கே பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். ஸ்பின்னர்கள் ஏன் இருக்கிறார்கள்? 6, 4 மட்டுமே அடிக்க வேண்டும் என்றால் டி20 பிட்ச்கள் இருக்கின்றன. சில பிட்ச்கள் ஸ்பின் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும். சில பிட்ச்கள் வேகப் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும். ஆனால், வெறும் பவுண்டரி மட்டுமே அடிக்கப்பட வேண்டும் என்றால் அதை தான் முற்றிலும் ஒப்புக் கொள்ள மாட்டேன்" என்று கூறியது மட்டுமே சரியானது.

Related Stories

Related Stories