விளையாட்டு

பாகிஸ்தான் பத்திரிகையாளர், ரசிகர்களுக்கு விசா மறுப்பு - ICC-யிடம் புகார்.. அடுத்த சர்ச்சையில் BCCI !

பாகிஸ்தான் தங்களது நாட்டைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் மற்றும் ரசிகர்களுக்கு விசா வழங்குவதில் பிரச்சனை இருப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது.

பாகிஸ்தான் பத்திரிகையாளர், ரசிகர்களுக்கு விசா மறுப்பு - ICC-யிடம் புகார்..  அடுத்த சர்ச்சையில் BCCI !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கடந்த 2008-ம் ஆண்டு மும்பை தாக்குதலுக்கு பின்னர் இந்தியா பாகிஸ்தான் இடையே மோதல்போக்கு நிலவி வருகிறது. அதன்பின்னர் இந்திய அணி பாகிஸ்தான் சென்று விளையாட தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது. அதேபோல அரசியல் காரணங்களுக்காக இரு நாடுகள் இடையே எந்த தொடரும் நடைபெறவில்லை. ஐசிசி நடத்தும் தொடரில் மட்டுமே இரு அணிகளும் விளையாடி வருகிறது.

இந்த சூழலில் இந்த ஆண்டுக்கான ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெறுகிறது.ஆசிய கோப்பை சர்ச்சை காரணமாக இந்த தொடரில் பங்கேற்க முதலில் மறுத்த பாகிஸ்தான் பின்னர் விளையாட சம்மதம் தெரிவித்தது.

இந்த உலககோப்பைக்கு முன்னர் துபாய் சென்று அங்கு பயிற்சியில் ஈடுபட்டு பின்னர் இந்தியா செல்ல பாகிஸ்தான் வாரியம் திட்டமிட்டிருந்தது. ஆனால், உலகக்கோப்பை தொடருக்காக இந்தியா வர பாகிஸ்தான் வீரர்களுக்கு விசா கிடைப்பதில் சிக்கல் எழுந்தது. இதனால் அந்த அணியின் துபாய் பயணம் ரத்தானது.

பாகிஸ்தான் பத்திரிகையாளர், ரசிகர்களுக்கு விசா மறுப்பு - ICC-யிடம் புகார்..  அடுத்த சர்ச்சையில் BCCI !

அதனைத் தொடர்ந்து பிற அணிகளுக்கு விசா வழங்கப்பட்ட பல நாட்களுக்கு பின்னர் பாகிஸ்தானுக்கு இந்திய அரசு விசா வழங்கியது. இந்த நிலையில். பாகிஸ்தான் தங்களது நாட்டைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் மற்றும் ரசிகர்களுக்கு விசா வழங்குவதில் பிரச்சனை இருப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது.

இதுதொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் செய்தித் தொடர்பாளர் உமர் ஃபாரூக் பேசுகையில், பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் மற்றும் ரசிகர்களுக்கு விசா வழங்குவதில் பிரச்சனை இருக்கிறது. இது குறித்து பாகிஸ்தான் வாரியத்தின் நிர்வாகக் குழுத் தலைவர் ஜகா அஷ்ரஃப் வெளியுறவுச் செயலர் சைரஸ் சஜ்ஜத்தை சந்தித்து பேசியுள்ளார்" என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories