விளையாட்டு

"ஒருநாள் கிரிக்கெட்டை உதிர்ந்த பூவாக்கி விட்ட வீரர்களும் குற்றவாளிகளே !" - முன்னாள் ஆஸ். வீரர் காட்டம் !

டி20 கிரிக்கெட்டால் ஒருநாள் கிரிக்கெட் இன்று வாடி உதிர்ந்தப் பூவாக்கி விட்டது என முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் இயன் சாப்பல் வேதனை தெரிவித்துள்ளார்.

"ஒருநாள் கிரிக்கெட்டை உதிர்ந்த பூவாக்கி விட்ட வீரர்களும் குற்றவாளிகளே !" - முன்னாள் ஆஸ். வீரர் காட்டம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கிரிக்கெட்டின் பரிமாணம் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடங்கி பின்னர் அது 60 ஓவர் கொண்ட போட்டி, 50 ஓவர் கொண்ட போட்டி என சுருக்கப்பட்டு அதன் பின்னர் 20 ஓவர்கள் போட்டி என சுறுக்கப்பட்டுள்ளது. ஆனால், அதன் பின்னர் சில லீக் போட்டிகள் 100 பந்துகள் கொண்ட போட்டி, 10 ஓவர்கள் கொண்ட போட்டி என சுருங்கிக்கொண்டே வருகிறது.

அதிலும் இந்த காலத்தில் அனைத்து நாடுகளிலும் டி20 போட்டிக்கே அதிக ஆதரவு கிடைத்து வருகிறது. இதன் காரணமாக தேசிய அணிகள் அதிகளவில் டி20 போட்டிகளில் ஆடி வருகின்றன. இதன் காரணமாக டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகள் மிகக்குறைந்த அளவே நடைபெற்று வருகிறது.

இதனை பல்வேறு வீரர்களும் பல்வேறு தருணங்களில் விமர்சித்து வந்தனர். மேலும், டி20 போட்டிகளில் அதிக வருவாய் கிடைப்பதால்தான் வாரியங்கள் அந்த வகை போட்டிகளை அதிகளவில் நடத்தி வருகிறது என்றும் விமர்சனம் வைக்கப்பட்டு வந்தது.

"ஒருநாள் கிரிக்கெட்டை உதிர்ந்த பூவாக்கி விட்ட வீரர்களும் குற்றவாளிகளே !" - முன்னாள் ஆஸ். வீரர் காட்டம் !

இந்த நிலையில், டி20 கிரிக்கெட்டால் ஒருநாள் கிரிக்கெட்டை இன்று வாடி உதிர்ந்தப் பூவாக்கி விட்டது என முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் இயன் சாப்பல் வேதனை தெரிவித்துள்ளார். இது குறித்து ஆங்கில நாளிதழ் ஒன்றில் எழுதியுள்ள அவர், " டி20 கிரிக்கெட்டுக்கு பெரியளவில் ஆதரவு இருப்பதால் தேசிய அணிகளின் வாரியங்களுக்கு அதிகளவில் நிதி ஆதாரம் கிடைக்கிறது. இதனால் வாரியங்கள் டி20 கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்ற்ன. ஆனால், ஒருநாள் கிரிக்கெட்டை ஒதுக்கியதால் அந்த வடிவமே வாடி உதிர்ந்தப் பூவாக்கி விட்டது.

60 ஓவர்களாக தொடங்கிய உலகக்கோப்பையில் 1975-ல் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவின் போராட்ட குணத்தை மீறியும் வெஸ்ட் இண்டீஸ் அருமையாக ஜெயித்தது. அதன் பிறகே 50 ஓவர் கிரிக்கெட்டாக மாறியது. அதன் பின்னர் ஒருநாள் தொடரில் சிறப்பான பல போட்டிகள் நடந்துள்ளது. ஷார்ஜாவில்நடைபெறும் முத்தரப்பு ஒருநாள் கிரிகெட் தொடர் வரவேற்பைப் பெற்றிருந்தது. இன்று முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் என்னும் கருத்தாக்கமே காணாமல் போய் விட்டது.

இதற்கு முக்கிய காரணம் கிரிக்கெட் வாரியங்கள். ஐசிசி முத்தரப்பு தொடரை நடத்த விரும்பினாலும் வாரியங்கள் அதனை விரும்புவதில்லை. நிர்வாகிகள் டி20 கிரிக்கெட்டை பெரிய அளவுக்கு ஆதரித்து ஒருநாள் கிரிக்கெட்டை காலி செய்து விட்டனர், இப்படி காலியாவதற்கு அனுமதித்த வீரர்களும் குற்றவாளிகளே" என்று கூறியுள்ளனர்.

banner

Related Stories

Related Stories