விளையாட்டு

இரண்டு இன்னிங்ஸ்களிலும் அபாரம்.. தனியாளாக போராடிய சாய் சுதர்சன்.. இங்கிலாந்திலும் அசத்தும் தமிழக வீரர் !

இங்கிலாந்து மண்ணில் பந்துவீச்சுக்கு சாதகமான மைதானத்தில் சிறப்பாக ஆடிய சாய் சுதர்சனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

இரண்டு இன்னிங்ஸ்களிலும் அபாரம்.. தனியாளாக போராடிய சாய் சுதர்சன்.. இங்கிலாந்திலும் அசத்தும் தமிழக வீரர் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

உள்நாட்டு தொடர்களில் கலக்கி வந்த தமிழக வீரர் சாய் சுதர்சன் ஐபிஎல் தொடரில் கடந்த முறை சாம்பியன் பட்டம் வென்ற குஜராத் அணியில் கடந்த ஆண்டு இடம்பிடித்தார். அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டும் அந்த அணி சாய் சுதர்சனை தக்கவைத்தது.

அதன்பின் ஐபிஎல் தொடரின் ஆரம்ப கட்டத்தில் குஜராத் அணி சாய் சுதர்சனுக்கு வாய்ப்புகள் வழங்கியது. அதன்பின்னர் இரண்டாவது குவாலிபையர் போட்டியில் 43 ரன்கள் குவித்து ரிடையர்ட் கட் முறையில் ஆட்டமிழந்தார். அதனைத் தொடர்ந்து இறுதிப்போட்டியில் 47 பந்துகளில் 6 சிக்சர், 8 பவுண்டரிகள் என 96 ரன்கள் விளாசி இறுதி ஓவரில் ஆட்டமிழந்தார். ஆட்டமிழந்து ஓய்வறைக்கு சென்ற அவருக்கு குஜராத் வீரர்கள் அனைவரும் எழுந்து நின்று வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

அதன் பின்னர், ஐபிஎல் தொடரில் தான் காட்டிய அதிரடியை அவர் டி.என்.பி.எல் தொடரிலும் தொடர்ந்தார். இதன் காரணமாக அவருக்கு இலங்கையின் கொழும்பு நகரில் ஆசிய கண்டத்தைச் சேர்ந்த 5 ஏ அணிகள் பங்கேற்கும் எமர்ஜிங் ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய ஏ அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டது.

இரண்டு இன்னிங்ஸ்களிலும் அபாரம்.. தனியாளாக போராடிய சாய் சுதர்சன்.. இங்கிலாந்திலும் அசத்தும் தமிழக வீரர் !

இந்த தொடரில் இந்திய அணி பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அபாரமாக ஆடி சதம் விளாசினார். மேலும் அந்த தொடரில் தனது சிறப்பான செயல்பாட்டை வெளிக்காட்டி கவனிக்கத்தக்க வீரராக உறுவெடுத்தார். இதன் காரணமாக இங்கிலாந்து கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் சர்ரே அணி சாய் சுதர்சனை ஒப்பந்தம் செய்தது.

இந்த அணிக்காக முதல் போட்டியில் ஆடிய சாய் சுதர்சன் முதல் இன்னிங்சில் 3 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் இரண்டாவது இன்னிங்சில் அவருக்கு பேட்டிங் ஆட வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த நிலையில், ஹம்ஷைர் அணிக்கு எதிரான போட்டியில் முதல் இன்னிங்ஸில் 73 ரன்களை விளாசினார். இதன் மூலம் மோசமான நிலையில் இருந்து சர்ரே அணியை காப்பாற்றினார்.

பின்னர் இரண்டாவது இன்னிங்சில் அணியை தோல்வியில் இருந்த காக்க இறுதிவரை போராடினார். ஆனால், எந்த வீரர்களின் ஒத்துழைப்பும் கிடைக்காத நிலையில், கடைசி வீரராக 40 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். எனினும் இந்த போட்டியில் சர்ரே அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. அதே நேரம், பந்துவீச்சுக்கு சாதகமான மைதானத்தில் இரண்டு அணிகளை சேர்ந்த வீரர்களும் சொதப்பிய நிலையில், அங்கு சிறப்பாக ஆடிய சாய் சுதர்சனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

banner

Related Stories

Related Stories