விளையாட்டு

குணமடையாத அக்சர் படேல்.. உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் அஸ்வின் சேர்ப்பு.. ரசிகர்கள் கொண்டாட்டம் !

இந்தியாவில் நடைபெறும் 50 ஓவர் உலககோப்பைக்கான இந்திய அணியில் தமிழ்நாடு வீரர் அஸ்வின் சேர்க்கப்பட்டுள்ளார்.

குணமடையாத அக்சர் படேல்.. உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் அஸ்வின் சேர்ப்பு.. ரசிகர்கள் கொண்டாட்டம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் 1975ம் ஆண்டிலிருந்து நடைபெற்று வருகிறது. இந்த உலகக்கோப்பையை 1983ம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக கைப்பற்றியது. அதன்பின் 2011-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக்கோப்பையை தோனி தலைமையிலான அணி வென்றது.

தற்போது 2023ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெறுகிறது. பொதுவாக அனைத்து உலகக்கோப்பை தொடர்களிலும் குறைந்தது ஒரு தமிழ்நாடு வீரராவது அணியில் இடம்பிடிப்பர். ஆனால், இந்த உலகக்கோப்பைக்காக அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் ஒரு தமிழ்நாடு வீரர் கூட இடம்பிடிக்காதது சோகத்தை ஏற்படுத்தியது.

குணமடையாத அக்சர் படேல்.. உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் அஸ்வின் சேர்ப்பு.. ரசிகர்கள் கொண்டாட்டம் !

இந்த சூழலில், ஆசியக்கோப்பை போட்டியின்போது உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருந்த அக்சர் படேல் காயம் காரணமாக பாதியிலேயே விலகினார். இதனால் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் அணிக்கு அழைக்கப்பட்ட ஆசியக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கான இந்திய அணியிலும் இடம்பிடித்தார்.

அதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் தமிழக வீரர்கள் அஸ்வின் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இடம்பிடித்தனர். அதில் ஆடும் 11 வீரர்கள் கொண்ட பட்டியலில் இடம்பிடித்த அஸ்வின் முதல் போட்டியில் 1 விக்கெட் இரண்டாவது போட்டியில் 3 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். இதன் காரணமாக உலகக்கோப்பை அணியில் அஸ்வின் சேர்க்கப்படுவர் என எதிர்பார்க்கப்பட்டது.

குணமடையாத அக்சர் படேல்.. உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் அஸ்வின் சேர்ப்பு.. ரசிகர்கள் கொண்டாட்டம் !

இந்த நிலையில், அக்சர் படேலின் காயம் இன்னும் முழுமையாக குணமடையாத நிலையில், அவருக்கு பதில் உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் அஸ்வின் சேர்க்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இந்திய மண்ணில் அஸ்வின் மிகவும் அபாயகரமாக வீரர் என்பதால் அவர் ஆடும் 11 வீரர்கள் கொண்ட பட்டியலிலும் இடம்பெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

சுழற்பந்துக்கு ஏற்ற இந்திய மண்ணில் நடைபெறும் இந்த் உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் ஏற்கனவே இடதுகை சுழற்பந்து வீச்சாளரான ஜடேஜா மற்றும் மணிக்கட்டு சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் இருக்கும் நிலையில், முறையான ஆஃப் ஸ்பின் பந்துவீச்சாளர் இல்லாதது குறையாக பார்க்கப்பட்டது. மேலும், பல்வேறு அணிகளில் இடதுகை வீரர்கள் அதிக அளவில் இருக்கும் நிலையில், ஆஃப் ஸ்பின் பந்துவீச்சாளர் ஒருவர் அணியில் இடம்பெற வேண்டும் என பல்வேறு வீரர்களும் கூறி வந்தனர்,

தற்போது இந்திய அணியில் ஏற்பட்டுள்ள அந்த குறையை போக்கும் வகையில் அஸ்வின் அணியில் இடம்பெற்றுள்ளது இந்திய அணிக்கு வலுவானதாக பார்க்கப்படுகிறது. அதோடு, இதுவரை அனைத்து உலகக்கோப்பை தொடரிலும் இந்திய அணியில் ஒரு தமிழக வீரராவது இருந்த நிலையில், தற்போது அணியில் தமிழக வீரர் இல்லாதது தமிழக ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது. ஆனால், தற்போது அணியில் அஸ்வின் இடம்பெற்றுள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories