விளையாட்டு

மீண்டும் அஸ்வினின் கம்பேக் .. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இரு தமிழக வீரர்களுக்கு வாய்ப்பு

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான அணியில் தமிழக வீரர்கள் அஸ்வின் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

மீண்டும் அஸ்வினின் கம்பேக் .. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இரு தமிழக வீரர்களுக்கு வாய்ப்பு
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் 1975ம் ஆண்டிலிருந்து நடைபெற்று வருகிறது. இந்த உலகக்கோப்பையை 1983ம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக கைப்பற்றியது. அதன்பின் 2011-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக்கோப்பையை தோனி தலைமையிலான அணி வென்றது.

தற்போது 2023ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெறுகிறது. பொதுவாக அனைத்து உலகக்கோப்பை தொடர்களிலும் குறைந்தது ஒரு தமிழ்நாடு வீரராவது அணியில் இடம்பிடிப்பர். ஆனால், இந்த உலகக்கோப்பைக்காக அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் ஒரு தமிழ்நாடு வீரர் கூட இடம்பிடிக்காதது சோகத்தை ஏற்படுத்தியது.

மீண்டும் அஸ்வினின் கம்பேக் .. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இரு தமிழக வீரர்களுக்கு வாய்ப்பு

இந்த சூழலில், ஆசியக்கோப்பை போட்டியின்போது உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருந்த அக்சர் படேல் காயம் காரணமாக பாதியிலேயே விலகினார். இதனால் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் அணிக்கு அழைக்கப்பட்ட ஆசியக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கான இந்திய அணியிலும் இடம்பிடித்தார்.

தற்போதுவரை அக்சர் படேலின் காயம் குறித்த விவரம் வெளிவராத நிலையில், அவருக்கு பதில் தமிழக வீரர்கள் வாஷிங்டன் சுந்தர், அஸ்வின் ஆகியோரில் ஒருவர் உலககோப்பை அணியில் இடம்பிடிக்கலாம் என கூறப்பட்டது. மேலும், கேப்டன் ரோஹித் சர்மாவும் இந்த கணிப்பை உறுதிப்படுத்தி பேட்டியளித்தார்.

இந்த நிலையில், உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை சந்திக்கிறது. 3 போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடருக்கான அணியை பிசிசிஐ நேற்று அறிவித்தது. இதில் தமிழக வீரர்கள் அஸ்வின் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். மேலும், முதல் இரண்டு போட்டிகளில் ரோஹித், விராட் கோலி, ஹர்திக் பாண்டியா, குலதீப் யாதவ் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு 3-வது ஒருநாள் போட்டிக்கான அணியில் அவர்கள் இடம்பிடித்துள்ளனர்.

மீண்டும் அஸ்வினின் கம்பேக் .. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இரு தமிழக வீரர்களுக்கு வாய்ப்பு

முதல் இரண்டு போட்டிக்கான அணி விபரம்:ராகுல் (கேப்டன்), ஜடேஜா (துணைக் கேப்டன்), ருதுராஜ், சுப்மன் கில், ஸ்ரேயாஸ், சூர்யகுமார், திலக் வர்மா, இஷான் கிஷான், ஷர்துல் தாகூர், வாஷிங்டன் சுந்தர், அஷ்வின், பும்ரா, ஷமி, சிராஜ், பிரசித் கிருஷ்ணா.

மூன்றாவது போட்டிக்கான அணி விபரம்: ரோகித் சர்மா (கேப்டன்), ஹர்திக் பாண்ட்யா (துணைக் கேப்டன்), சுப்மன் கில், கோஹ்லி, ஸ்ரேயாஸ், இஷான் கிஷான், ராகுல், சூர்யகுமார், ஜடேஜா, அக்சர் படேல், ஷர்துல் தாகூர், பும்ரா, ஷமி, சிராஜ், குல்தீப், அஷ்வின், வாஷிங்டன் சுந்தர்.

banner

Related Stories

Related Stories