விளையாட்டு

பாகிஸ்தான் அணியால் நெதர்லாந்து அணியை கூட வீழ்த்த முடியாது - காட்டமாக விமர்சித்த பாக்.முன்னாள் வீரர் !

இந்த அணியை வைத்துக்கொண்டு நெதர்லாந்து போன்ற சிறிய அணிகளை கூட வீழ்த்த முடியாது என பாகிஸ்தான் முன்னாள் வீரர் கம்ரான் அக்மல் விமர்சித்துள்ளார்.

பாகிஸ்தான் அணியால் நெதர்லாந்து அணியை கூட வீழ்த்த முடியாது - காட்டமாக விமர்சித்த பாக்.முன்னாள் வீரர் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

பல்வேறு சர்ச்சைகளுக்கு பின்னர் ஆசியக்கோப்பை தொடர் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெற்றுவருகிறது. இந்தத் தொடரில் பாகிஸ்தான் அணி சிறப்பாக செயல்படும் என எதிர்பார்க்கப்பட்டது. அதே போல குரூப் சுற்றில் பாகிஸ்தான் அணி நேபாள அணியை நொறுக்கி அபாரவெற்றிபெற்றது.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான போட்டியிலும் பாகிஸ்தான் அணி சிறப்பாக செயல்பட்டது. அந்த போட்டியில் மழை மட்டும் பெய்யாமல் இருந்தால் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றிருக்கும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. இந்த போட்டி முடிவு கிடைக்கவில்லை என்றாலும் குரூப் பிரிவில் முதல் இடம் பிடித்து சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியது.

சூப்பர் 4 சுற்றின் முதல் போட்டியில், வங்கதேச அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அணி அபார வெற்றிபெற்றது. ஆனால், அடுத்து நடைபெற்ற போட்டியில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் மோசமாக செயல்பட்ட பாகிஸ்தான் அணி 228 வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

பாகிஸ்தான் அணியால் நெதர்லாந்து அணியை கூட வீழ்த்த முடியாது - காட்டமாக விமர்சித்த பாக்.முன்னாள் வீரர் !

பின்னர் நேற்று நடைபெற்ற முக்கியமான போட்டியில் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில், கடைசி பந்தில் வெற்றியை இழந்தது. இதன் காரணமாக ஆசியக்கோப்பை தொடரில் இருந்து பரிதாபமாக வெளியேறியது. இந்த வெளியேற்றத்தைத் தொடர்ந்து அந்த அணியை அந்நாட்டு ரசிகர்கள் கடுமையான விமர்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இந்த அணியை வைத்துக்கொண்டு நெதர்லாந்து போன்ற சிறிய அணிகளை கூட வீழ்த்த முடியாது என பாகிஸ்தான் முன்னாள் வீரர் கம்ரான் அக்மல் விமர்சித்துள்ளார். இது குறித்துப் பேசிய அவர், " நமது அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தால் மட்டும் போதாது. பேட்ஸ்மேன்களும் அணிக்கு தேவையான பங்களிப்பினை வழங்க வேண்டும். வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் கூட 190 ரன்களை 40 ஓவர்கள் வரை சென்று தான் சேசிங் செய்தார்கள்.

இதுபோன்ற பேட்டிங்கை வைத்துக்கொண்டு உங்களால் நெதர்லாந்து போன்ற சிறிய அணியை கூட வீழ்த்த முடியாது. இந்தியா போன்ற அணியோடு விளையாடும் போது எந்த ஒரு திட்டமும் இல்லாமல் பாகிஸ்தான் அணி விளையாடியது. ஏதோ வந்தோம் ஆடினோம் சென்றோம் என்பது போல வீரர்கள் விளையாடுகின்றனர். பாகிஸ்தான் அணி நிர்வாகம் என்ன செய்கிறது என்பது எனக்கு புரியவில்லை" என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories