விளையாட்டு

"டிக்கெட் வெளியீடு என்ற பெயரில் BCCI கண்துடைப்பு நடத்துகிறது" -முன்னாள் இந்திய வீரர் விமர்சனம் !

டிக்கெட் வெளியிடுகிறோம் என்ற பெயரில் நடைபெறும் பிசிசிஐ கண்துடைப்பு நடத்துகிறது என முன்னாள் இந்திய வீரர் வெங்கடேஷ் பிரசாத் கூறியுள்ளார்.

"டிக்கெட் வெளியீடு என்ற பெயரில் BCCI கண்துடைப்பு நடத்துகிறது" -முன்னாள் இந்திய வீரர் விமர்சனம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் 1975ம் ஆண்டிலிருந்து நடைபெற்று வருகிறது. இந்த உலகக்கோப்பையை 1983ம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக கைப்பற்றியது. அதன்பின் 2011-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக்கோப்பையை தோனி தலைமையிலான அணி வென்றது.

தற்போது 2023ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெறுகிறது. இதனால் இப்போட்டி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் உலகக் கோப்பைக்கான போட்டி அட்டவணையை ஐசிசி வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த தொடர் அக்டோபர் 5ம் தேதி தொடங்கி நவம்பர் 19ம் தேதி வரை போட்டிகள் நடைபெறுகிறது.

முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இப்போட்டி குஜராத் மாநிலம் அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. அதேபோல் இறுதிப்போட்டியும் இதே மைதானத்தில்தான் நடைபெறுகிறது. அதோடு முக்கியமாக இந்தியா-பாகிஸ்தான் மோதலும் இதே மைதானத்தில்தான் நடைபெறுகிறது.இந்த தொடரில் இந்தியா ஆடும் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது.

"டிக்கெட் வெளியீடு என்ற பெயரில் BCCI கண்துடைப்பு நடத்துகிறது" -முன்னாள் இந்திய வீரர் விமர்சனம் !

ஆனால், இந்த போட்டிகளுக்காக டிக்கெட்டுகளை ஆன்லைனில் பெற்றவர்கள் போட்டிக்கு முன்னதாகவே அகமதாபாத்துக்கு வந்து ஆன்லைன் டிக்கெட்டுகளை அசல் டிக்கெட்டுகளாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர். மேலும், ரசிகர்களுக்காக போதிய டிக்கெட்டுகள் ஒதுக்கப்படவில்லை, பெரும்பாலான டிக்கெட்டுகளை ஸ்பான்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு ஒதுக்கப்படுகிறது என ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

இந்த சர்ச்சையை தொடர்ந்து 4 லட்சம் டிக்கெட்களை விற்பனை செய்வதற்கான அறிவிப்பை பிசிசிஐ வெளியிட்டு, நேற்று இந்த டிக்கெட்கள் ஆன்லைனில் வெளியிடப்பட்டது. ஆனால், ரசிகர்கள் பலர் டிக்கெட்டுகள் போதிய அளவில் கிடைக்கவில்லை எனக் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், டிக்கெட் வெளியிடுகிறோம் என்ற பெயரில் நடைபெறும் பிசிசிஐ கண்துடைப்பு நடத்துகிறது என முன்னாள் இந்திய வீரர் வெங்கடேஷ் பிரசாத் கூறியுள்ளார். இது குறித்துப் கூறியுள்ள அவர், " பிசிசிஐ-யின் இந்த போக்கு நல்லதுக்கு அல்ல. டிக்கெட் விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு இணையவழியில் டிக்கெட் விற்பனையை முறையாக கையாளத் தெரியவில்லை . இல்லையெனில் டிக்கெட் வெளியிடுகிறோம் என்ற பெயரில் நடைபெறும் மற்றொரு கண்துடைப்பு இது என்றும் சொல்லலாம். எந்த தளத்தில், யாருக்கு, டிக்கெட் விற்பனை செய்யப்பட்டது என்பது குறித்த முறையான தணிக்கை மேற்கொள்ளப்படும் என நம்புகிறேன். ரசிகர்களுக்கு தவறான உத்தரவாதம் அளிக்க வேண்டாம்" எனக் கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories