விளையாட்டு

"முழுசா 10 ஓவர் போடமாட்டார், 50 ரன் அடிக்கமாட்டார்; இவர் ஆல் ரௌண்டரா?" -இந்திய வீரரை விமர்சித்த பத்ரிநாத்

உலகக்கோப்பை அணியில் இடம்பெற்றுள்ள இந்திய ஆல் ரௌண்டரை இந்திய முன்னாள் வீரர் பத்ரிநாத் விமர்சித்துள்ளார்.

"முழுசா 10 ஓவர் போடமாட்டார், 50 ரன் அடிக்கமாட்டார்; இவர் ஆல் ரௌண்டரா?" -இந்திய வீரரை விமர்சித்த பத்ரிநாத்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் 1975ம் ஆண்டிலிருந்து நடைபெற்று வருகிறது. இந்த உலகக்கோப்பையை 1983ம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக கைப்பற்றியது. அதன்பின் 2011-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக்கோப்பையை தோனி தலைமையிலான அணி வென்றது.

தற்போது 2023ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெறுகிறது. இதனால் இப்போட்டி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தொடர் அக்டோபர் 5ம் தேதி தொடங்கி நவம்பர் 19ம் தேதி வரை நடைபெறுகிறது.

"முழுசா 10 ஓவர் போடமாட்டார், 50 ரன் அடிக்கமாட்டார்; இவர் ஆல் ரௌண்டரா?" -இந்திய வீரரை விமர்சித்த பத்ரிநாத்

இந்த உலகக்கோப்பையை இந்திய அணி வெல்லும் என ரசிகர்கள் எதிர்பார்த்த வண்ணம் உள்ள நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ரோஹித் சர்மா தலைமையிலான இந்த அணியில், ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால், ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடித்த திலக் வர்மா, பிரசீத் கிருஷ்ணா ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

மேலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு வழங்கப்படாத நிலையில், சூரியகுமார் யாதவ் இந்த அணியில் இடம்பிடித்துள்ளார். அதோடு, இந்திய அணியின் முக்கிய சுழற்பந்து வீச்சாளரான யுஸ்வேந்திர சாஹலுக்கு அணியில் இடம்வழங்கப்படாத நிலையில், ஷர்துல் தாகூர் அணியில் இடம்பிடித்துள்ளார்.

"முழுசா 10 ஓவர் போடமாட்டார், 50 ரன் அடிக்கமாட்டார்; இவர் ஆல் ரௌண்டரா?" -இந்திய வீரரை விமர்சித்த பத்ரிநாத்

இந்த நிலையில், ஷர்துல் தாகூர் உலகக்கோப்பை அணியில் இடம்கிடைத்துள்ளதை இந்திய அணியின் முன்னாள் வீரர் பத்ரிநாத் விமர்சித்துள்ளார். இது குறித்துப் பேசிய அவர், "2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை அணியில் இடம்பிடித்த ஆல் ரவுண்டரான சச்சின், சேவாக், ரெய்னா, யுவராஜ் சிங் ஆகியோர் ஒரு துறையில் சிறப்பான செயல்பாட்டை கொண்டவர்கள்.

அதே போல தற்போதைய இந்திய அணியை எடுத்துக் கொண்டால் அதில் இருக்கும் ஆல் ரௌண்டரான ஹர்திக் பாண்டியா சிறப்பாக பேட்டிங் செய்வார். ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல் ஆகியோர் பந்துவீச்சில் சிறப்பாக செயல்படக்கூடியவர்கள். ஆனால், இதே அணியில் இருக்கும் ஷர்துல் தாகூர் பந்துவீச்சாளராகவும் 10 ஓவர்கள் முழுமையாக வீசமாட்டார். அதேபோல் பேட்டிங்கிலும், 50 ரன்கள் அடிப்பார் என்று அவரை நம்ப முடியாது. இது ஆல் ரௌண்டருக்கான திறன் கிடையாது. இதனால் அவரை அணியில் சேர்த்திருக்கக் கூடாது" என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories