விளையாட்டு

தமிழ்நாடு வீரரை ஒப்பந்தம் செய்த இங்கிலாந்து கவுண்டி அணி.. இளம் வயதில் கிடைத்த அரிய வாய்ப்பு !

இங்கிலாந்து கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் சர்ரே அணி தமிழ்நாடு வீரரான சாய் சுதர்சனை ஒப்பந்தம் செய்துள்ளது.

தமிழ்நாடு வீரரை ஒப்பந்தம் செய்த இங்கிலாந்து கவுண்டி அணி.. இளம் வயதில் கிடைத்த அரிய வாய்ப்பு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

உள்நாட்டு தொடர்களில் கலக்கி வந்த தமிழக வீரர் சாய் சுதர்சன் ஐபிஎல் தொடரில் கடந்த முறை சாம்பியன் பட்டம் வென்ற குஜராத் அணியில் கடந்த ஆண்டு இடம்பிடித்தார். அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டும் அந்த அணி சாய் சுதர்சனை தக்கவைத்தது.

அதன்பின் ஐபிஎல் தொடரின் ஆரம்ப கட்டத்தில் குஜராத் அணி சாய் சுதர்சனுக்கு வாய்ப்புகள் வழங்கியது. அதன்பின்னர் இரண்டாவது குவாலிபையர் போட்டியில் 43 ரன்கள் குவித்து ரிடையர்ட் கட் முறையில் ஆட்டமிழந்தார். அதனைத் தொடர்ந்து இறுதிப்போட்டியில் 47 பந்துகளில் 6 சிக்சர், 8 பவுண்டரிகள் என 96 ரன்கள் விளாசி இறுதி ஓவரில் ஆட்டமிழந்தார். ஆட்டமிழந்து ஓய்வறைக்கு சென்ற அவருக்கு குஜராத் வீரர்கள் அனைவரும் எழுந்து நின்று வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

தமிழ்நாடு வீரரை ஒப்பந்தம் செய்த இங்கிலாந்து கவுண்டி அணி.. இளம் வயதில் கிடைத்த அரிய வாய்ப்பு !

அதன் பின்னர், ஐபிஎல் தொடரில் தான் காட்டிய அதிரடியை அவர் டி.என்.பி.எல் தொடரிலும் தொடர்ந்தார். இதன் காரணமாக அவருக்கு இலங்கையின் கொழும்பு நகரில் ஆசிய கண்டத்தைச் சேர்ந்த 5 ஏ அணிகள் பங்கேற்கும் எமர்ஜிங் ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய ஏ அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டது.

இந்த தொடரில் இந்திய அணி பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அபாரமாக ஆடி சதம் விளாசினார். மேலும் அந்த தொடரில் தனது சிறப்பான செயல்பாட்டை வெளிக்காட்டி கவனிக்கத்தக்க வீரராக உறுவெடுத்தார். இந்த சூழலில் அவருக்கு மற்றொரு வாய்ப்பும் கிடைத்துள்ளது.

தமிழ்நாடு வீரரை ஒப்பந்தம் செய்த இங்கிலாந்து கவுண்டி அணி.. இளம் வயதில் கிடைத்த அரிய வாய்ப்பு !

இங்கிலாந்து கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் சர்ரே அணி தமிழ்நாடு வீரரான சாய் சுதர்சனை ஒப்பந்தம் செய்துள்ளது. அந்த அணியில் ஏற்கனவே ஆடி வந்த ஷேன் அப்பாட் மற்றும் டாம் லேதன் ஆகியோர் தேசிய அணிகளுக்கு திரும்பியுள்ளதால் கடைசி 3 போட்டிகளில் விளையாட சாய் சுதர்சனை அந்த அணி ஒப்பந்தம் செய்துள்ளது.

இது குறித்து பேசிய சர்ரே அணியின் இயக்குநர் அலெக் ஸ்டீவர்ட் , நான் மதிக்கும் இந்திய ஜாம்பவான் வீரர்கள் சிலர், சாய் சுதர்சனை பற்றி பெரியளவில் பேசியதால் அவரை எங்கள் அணிக்காக ஒப்பந்தம் செய்துள்ளோம் என்று கூறியுள்ளார். நாளை நடக்கும் வார்விக்‌ஷையர் அணிக்கு எதிராக போட்டியில் சாய் சுதர்சன் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

banner

Related Stories

Related Stories