விளையாட்டு

அமர்க்களமாக தொடங்கிய ஆசிய கோப்பை.. முதல் போட்டியிலேயே இமாலய வெற்றிபெற்ற பாகிஸ்தான் !

ஆசிய கோப்பை போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 238 ரன்கள் வித்தியாசத்தில் நேபாளம் அணி மோசமான தோல்வியை சந்தித்துள்ளது.

அமர்க்களமாக தொடங்கிய ஆசிய கோப்பை.. முதல் போட்டியிலேயே இமாலய வெற்றிபெற்ற பாகிஸ்தான் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் சில வாரங்களுக்கு முன்னர் ஆசிய கோப்பைக்கான அட்டவணை வெளியானது. அதில், ஒன்பது ஆட்டங்கள் இலங்கையில் நடத்தப்பட உள்ள நிலையில், வெறும், நான்கு ஆட்டங்கள் மட்டுமே பாகிஸ்தானில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டது சர்சையானது.

அதனைத் தொடர்ந்து நேற்று 16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது நேற்று பாகிஸ்தான் நாட்டின் முல்தான் நகரில் தொடங்கியது. இதன் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியும் நேபாளம் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி களமிறங்கிய அந்த அணி ஆரம்பத்தில் சற்று தருமாறினாலும் அந்த அணியின் கேப்டன் பாபர் அசாம் ஒரு முனையில் சிறப்பாக ஆடினார். மேலும்,அவருக்கு ஒத்துழைக்கும் வகையில், ரிஸ்வான் 44 ரன்களும், இப்திகார் அகமது 109 ரன்களும் விளாசினார்.

அமர்க்களமாக தொடங்கிய ஆசிய கோப்பை.. முதல் போட்டியிலேயே இமாலய வெற்றிபெற்ற பாகிஸ்தான் !

இந்த போட்டியில் மிகவும் சிறப்பாக ஆடிய பாபர் அசாம், 151 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இவரின் இந்த ஆட்டம் காரணமாக பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில், 6 விக்கெட் இழப்புக்கு 342 ரன்கள் குவித்தது. இந்த இமாலய இலக்கை எட்டமுடியாமல் நேபாளம் அணி நிச்சயம் தோல்வியை சந்திக்கும் என்றே எதிர்பார்க்கப்பட்டது.

அதற்கு ஏற்ப ஆரம்பத்தில் இருந்தே நேபாள வீரர்கள் பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து தங்கள் விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் 23.4 ஓவர்களில் 104 ரன்களுக்கு நேபாளம் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 238 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்தது.

banner

Related Stories

Related Stories