விளையாட்டு

ஒரே போட்டியில் உலக சாதனை செய்த இந்திய வீரர்.. மோசமான சாதனை படைத்த இந்திய வீரர்கள்.. முழு விவரம் என்ன ?

மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி மோசமான சாதனை ஒன்றை படைத்துள்ளது.

ஒரே போட்டியில் உலக சாதனை செய்த இந்திய வீரர்.. மோசமான சாதனை படைத்த இந்திய வீரர்கள்.. முழு விவரம் என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஏற்பட்ட தோல்வியைத் தொடர்ந்து இந்திய அணி மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக டெஸ்ட், ஒருநாள். டி20 தொடரில் பங்கேற்க அந்த நாட்டுக்கு சென்றுள்ளது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றிபெற்றது.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றியை நோக்கி சென்றுகொண்டிருந்தபோது திடீரென பெய்த மழை காரணமாக அந்த போட்டி டிராவில் முடிவடைந்தது. இதனால் டெஸ்ட் தொடரை இந்திய அணி 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

அதனைத் தொடர்ந்து ஒருநாள் தொடர் நடைபெற்றது. இதில் முதலில் நடைபெற்ற போட்டியில், இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து நேற்று இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெற்றது. இதில் இந்திய அணியில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு ஹர்திக் பாண்டியா அணியை தலைமை தாங்கினார்.

ஒரே போட்டியில் உலக சாதனை செய்த இந்திய வீரர்.. மோசமான சாதனை படைத்த இந்திய வீரர்கள்.. முழு விவரம் என்ன ?

இதில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியாவை பேட்டிங் செய்ய சொல்ல இந்திய அணி களமிறங்கியது. தொடக்க வீரர்கள் இஷான் கிஷன், கில் 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து, இஷான் கிஷான் 55 ரன்களுக்கும், சுப்மன் கில் 34 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.

ஆனால், இந்திய நடுவரிசை வீரர்கள் கடுமையாக சொதப்பியதால் இந்திய அணி 181 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதன்பின்னர் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி தொடக்கத்தில் தடுமாறினாலும், அந்த அணியின் கேப்டன் ஷாய் ஹோப் (63 )மற்றும் கார்ட்டி (48 ) ஆகியோர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் மேற்கிந்திய தீவுகள் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தனர். இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடர் 1க்கு 1 என்ற கணக்கில் சம நிலையில் உள்ளது.

இந்த நிலையில், இந்த போட்டியில் இந்தியா ஒரு மோசமான சாதனை ஒன்றை படைத்துள்ளது. இந்திய அணியில் மூன்றாவதாக களமிறங்கிய சாம்சன் 9 ரன்களுக்கும், நான்காவதாக களமிறங்கிய அக்சர் படேல் 1 ரன்னுக்கும் , ஐந்தாவதாக களமிறங்கிய ஹர்திக் பாண்டியா 7 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.

ஒரே போட்டியில் உலக சாதனை செய்த இந்திய வீரர்.. மோசமான சாதனை படைத்த இந்திய வீரர்கள்.. முழு விவரம் என்ன ?

இதன் மூலம் 36 ஆண்டுகளுக்குப் பிறகு மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியில் மூன்றாவது, நான்காவது, ஐந்தாவது இடத்தில களமிறங்கிய வீரர்கள் ஒற்றை இலக்கில் ஆட்டமிழந்து அந்த மோசமான சாதனையை மீண்டும் படைத்துள்ளனர்.

அதே நேரம் இந்த போட்டியில் 34 ரன்கள் குவித்த கில், உலக சாதனை ஒன்றையும் படைத்துள்ளார். இதுவரை முதல் ஒருநாள் போட்டிகளில் முதல் 26 இன்னிங்ஸ்களில் அதிக ரன் குவித்த வீரர்கள் பட்டியலில் பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் முதலிடத்தில் இருந்த நிலையில், தற்போது அவரை விட அதிக ரன் குவித்து முதல் 26 இன்னிங்ஸ்களில் அதிக ரன் குவித்த வீரர்கள் பட்டியலில் இந்திய வீரர் கில் முதலிடம் பிடித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories