விளையாட்டு

3 நாடுகள் கோரிக்கை.. உலகக்கோப்பையில் வரும் மாற்றங்கள்.. பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அறிவிப்பு !

உலகக்கோப்பை அட்டவணையில் சில மாற்றங்களை கொண்டுவர முடிவு செய்துள்ளதாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கூறியுள்ளார்

3 நாடுகள் கோரிக்கை.. உலகக்கோப்பையில் வரும் மாற்றங்கள்.. பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அறிவிப்பு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் 1975ம் ஆண்டிலிருந்து நடைபெற்று வருகிறது. இந்த உலகக்கோப்பையை 1983ம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக கைப்பற்றியது. அதன்பின் 2011-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக்கோப்பையை தோனி தலைமையிலான அணி வென்றது.

தற்போது 2023ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெறுகிறது. இதனால் இப்போட்டி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் உலகக் கோப்பைக்கான போட்டி அட்டவணையை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. அக்டோபர் 5ம் தேதி தொடங்கி நவம்பர் 19ம் தேதி வரை போட்டிகள் நடைபெறுகிறது.

முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இப்போட்டி குஜராத் மாநிலம் அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. அதேபோல் இறுதிப்போட்டியும் இதே மைதானத்தில்தான் நடைபெறுகிறது. அதோடு முக்கியமாக இந்தியா-பாகிஸ்தான் மோதலும் இதே மைதானத்தில்தான் நடைபெறுகிறது.

3 நாடுகள் கோரிக்கை.. உலகக்கோப்பையில் வரும் மாற்றங்கள்.. பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அறிவிப்பு !

இந்த தொடரில் இந்தியா ஆடும் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த நிலையில், இந்த அட்டவணையில் சில மாற்றங்களை கொண்டுவர முடிவு செய்துள்ளதாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கூறியுள்ளார், இது குறித்து பேசிய அவர், உலகக்கோப்பையில் பங்கேற்கும் சில அணிகள் போட்டிக்கான தேதிகளை மாற்றிக் கொடுக்கும்படி கடிதம் அனுப்பியதாகவும், இதன் காரணமாக சில அணிகளுக்கு போதிய இடைவெளியில் மற்றொரு போட்டியில் விளையாடும் வகையில் அட்டவணை திருத்தப்படவுள்ளதாகவும் கூறியுள்ளார்.

இதனால் திருத்தப்பட்ட அட்டவணை விரைவில் வெளியாகும் என்றும், இந்த அட்டவணையில், போட்டிக்கான நாள், நேரம் மட்டுமே மாறும். மைதானங்களில் மாற்றம் இருக்க வாய்ப்பு இல்லை என்றும் கூறியுள்ளார். ஐசிசி உலகக்கோப்பைக்காக டிக்கெட் முன்பதிவு இன்னும் தொடங்காத நிலையில், இந்த சர்ச்சை காரணமாகவே இதுவரை டிக்கெட் முன்பதிவு தொடங்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது.

banner

Related Stories

Related Stories