விளையாட்டு

அமெரிக்காவிலும் மும்பையை வீழ்த்திய சென்னை.. சரவெடியாக வெடித்த கான்வே.. முதலிடத்துக்கு முன்னேறி அசத்தல்!

டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணி, 17 ரன்கள் வித்தியாசத்தில் MI அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

அமெரிக்காவிலும் மும்பையை வீழ்த்திய சென்னை.. சரவெடியாக வெடித்த கான்வே.. முதலிடத்துக்கு முன்னேறி அசத்தல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

உலக அளவில் பிரபலமான கிரிக்கெட் தொடர் என்றால் அது இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் தொடர்தான். ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கும் வரை சாதாரண கிரிக்கெட் அமைப்பாக இருந்த பிசிசிஐ இதன்பின்னர் பெரும் வலிமை வாய்ந்த பணக்கார கிரிக்கெட் அமைப்பாக மாறியது.ஆரம்பத்தில் லாபம் கிடைக்குமா? என தயங்கி ஐ.பி.எல்.லில் முதலீடு செய்த அணி உரிமையாளர்கள் இப்போது போட்டதை விட பல மடங்கு லாபம் பார்த்துள்ளனர். அதோடு இதில் முதலீடு செய்யும் ஸ்பான்சர்களும் வணிக ரீதியாக லாபம் அடைந்து வருகின்றனர்.

ஐபிஎல் தொடரின் வெற்றியைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை,வங்கதேசம் போன்ற பல்வேறு நாடுகளில் ஐபிஎல் பாணியில் கிரிக்கெட் தொடர்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அங்கும் அவை வணிக ரீதியாக வெற்றியை பெற்றுவருகின்றன.

அதைத் தொடர்ந்து தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் நிர்வாகமும், ஐபிஎல் பாணியிலான தொடரை ஆரம்பித்தது. 6 அணிகள் கொண்ட இந்த தொடரிலும் ஐபிஎல் அணிகள் களமிறங்கி 6 அணிகளையும் வாங்கின. இதனைத் தொடர்ந்து அமெரிக்காவிலும் ஐபிஎல் அணிகள் களமிறங்கியுள்ளன. அங்கு நடைபெறவுள்ள 'மேஜர் லீக் கிரிக்கெட் டி20' என்ற டி20 லீக் போட்டியில் 6 அணிகள் பங்குபெற்று விளையாடுகின்றன.

இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் டெக்சாஸ் அணியை வாங்கி அதற்கு டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் (TSK) என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு CSK அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், கேப்டனாக CSK அணியின் முன்னாள் வீரர் டுபிளசிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், CSK அணியின் வீரர்களான டெவான் கான்வே, மிட்சல் சாண்ட்னர் மற்றும் CSK அணியில் பயிற்சியாளராக இருக்கும் பிராவோ வீரராக அணியில் இடம்பிடித்துள்ளனர். மேலும் டேவிட் மில்லரும் அணியில் இடம்பெற்றுள்ளார்.

அமெரிக்காவிலும் மும்பையை வீழ்த்திய சென்னை.. சரவெடியாக வெடித்த கான்வே.. முதலிடத்துக்கு முன்னேறி அசத்தல்!

இது தவிர மும்பை அணி நிர்வாகம் நியூயார்க் அணியையும்,கொல்கத்தா அணி நிர்வாகம் லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் டெல்லி அணி நிர்வாகம் சியாட்டில் அணியையும் வாங்கி உள்ளது. இந்த தொடர் தொடங்கி நடைபெற்றுவரும் நிலையில், இன்று நடைபெற்ற போட்டியில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணியும், MI நியூயார்க் அணியும் மோதின.

இதில் முதலில் ஆடிய டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக தொடக்க வீரராக களமிறங்கிய டெவன் கான்வே, 74 ரன்கள் விளாசினார். பின்னர் ஆடிய MI நியூயார்க் அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து இறுதியில் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் மூலம் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணி, 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியை CSK ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories