விளையாட்டு

இதுதான் கிரிக்கெட்டின் நேர்மையா? -ஆஸ்திரேலியாவை பலரும் விமர்சிக்கும் நிலையில் ஆதரவு கரம் நீட்டிய அஸ்வின்!

பேர்ஸ்டோ விக்கெட் குறித்து சர்ச்சையில் சிக்கிய ஆஸ்திரேலிய அணிக்கும், விக்கெட் கீப்பர் கேரிக்கும் இந்திய வீரர் அஸ்வின் ஆதரவு தெரிவித்துள்ளார்.

இதுதான் கிரிக்கெட்டின் நேர்மையா? -ஆஸ்திரேலியாவை பலரும் விமர்சிக்கும் நிலையில் ஆதரவு கரம் நீட்டிய அஸ்வின்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

டெஸ்ட் அரங்கில் பழமையானதும், மதிப்புமிக்கதுமான ஆஷஸ் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதன் முதல் போட்டியில் இறுதி நாளில் இறுதி கட்டத்தில் 2 விக்கெட்டுகள் மீதான இருந்த நிலையில், 54 ரன்கள் தேவைப்பட ஆட்டத்தில் இங்கிலாந்து வெற்றிபெற அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது.

ஆனால், கேப்டன் கம்மின்ஸ் மற்றும் லயான் ஆகியோர் எதிர்பாராத இடத்தில இருந்து தங்கள் விக்கெட்களை இழக்காமல் திரில் வெற்றியை பதிவு செய்தது. கமின்ஸ் 4 பவுண்டரி 2 சிக்சருடன் 44 ரன்கள் எடுக்க அவருக்கு துணையாக நேதன் லயன் 2 பவுண்டரிகளுடன் 16 ரன்கள் குவித்தார். இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி 1-0 என்ற கணக்கில் ஆஷஸ் தொடரில் முன்னிலை பெற்றது.

இந்த நிலையில், 5 நாட்களுக்கு முன்னர் ஆஷிஷ் தொடரின் இரண்டாவது போட்டி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. பின்னர் ஆடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 416 ரன்களும், இங்கிலாந்து அணி 325 ரன்களும் குவித்தது. பின்னர் தனது இரண்டாவது இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 279 ரன்களுக்கு ஆட்டமிழக்க இங்கிலாந்து அணி வெற்றிபெற 371 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், இங்கிலாந்து அணி 327 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

இதுதான் கிரிக்கெட்டின் நேர்மையா? -ஆஸ்திரேலியாவை பலரும் விமர்சிக்கும் நிலையில் ஆதரவு கரம் நீட்டிய அஸ்வின்!

இந்த தொடரில் ஜானி பேர்ஸ்டோ ஆட்டமிழந்த விதம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 4-வது இன்னிங்சின் முக்கிய கட்டத்தில் ஆஸ்திரேலிய வீரர் க்ரீன் பந்து வீசினார். அந்த ஓவரின் இறுதிப்பந்தை பேர்ஸ்ட்டோ அடிக்காமல் விட்ட நிலையில்,பந்து கீப்பர் அலெக்ஸ் கேரியிடம் சென்றது, உடனே ஓவர் முடிந்துவிட்டதாக கருதிய பேர்ஸ்ட்டோ க்ரீஸை விட்டு வெளியே வந்தார். அந்த நேரத்தில் அலெக்ஸ் கேரி சமயோஜிதமாக பந்தை ஸ்டம்பில் வீச ரன் அவுட்க்கு அப்பீல் செய்யப்பட்டது.

முடிவு மூன்றாம் நடுவருக்கு சென்ற நிலையில், ஐசிசி விதிமுறையின்படி மூன்றாம் நடுவர் அவுட் என தீர்ப்பு வழங்கினார். இந்த விக்கெட் கிரிக்கெட் அரங்கில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து ரசிகர்கள், 'Same Old Aussie' என மைதானத்திலேயே கூச்சலிட்டனர். அதோடு இங்கிலாந்து ஊடகங்களும் இந்த விவகாரத்தில் ஆஸ்திரேலிய அணி மீது கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இந்த விவகாரத்தில் சர்ச்சையில் சிக்கிய ஆஸ்திரேலிய அணிக்கும், விக்கெட் கீப்பர் கேரிக்கும் இந்திய வீரர் அஸ்வின் ஆதரவு தெரிவித்துள்ளார். இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், "ஒரு விஷயத்தை நாம் அனைவரும் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். ஒரு விக்கெட் கீப்பர் ஸ்டெம்பில் இருந்து அதிக தூரம் நின்று கொண்டு பந்தை எரிந்து சும்மா ஆட்டம் இழக்க செய்திருக்க மாட்டார். ஒரு பேட்ஸ்மேன் தொடர்ந்து பந்து முடிவதற்குள் கிரீசை விட்டு வெளியே செல்வதை கவனித்து இருந்தால் மட்டுமே இப்படி பேர்ஸ்டோ கிரிசை விட்டு வெளியேறிய உடன் அவரை ஆட்டம் இழக்க வைத்திருக்கக்கூடும். இந்த தருணத்தில் அலெக்ஸ் கேரியின் புத்திக் கூர்மையை நாம் பாராட்ட வேண்டுமே தவிர இது நன்னடத்தை விதிகளுக்கு எதிரானது. இது நல்ல கிரிக்கெட் கிடையாது என்றெல்லாம் திட்டக்கூடாது" என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories