விளையாட்டு

"இதற்கு மேல் இழக்க என்ன இருக்கிறது?" - மேற்கிந்திய தீவுகள் அணிகள் அணியை விமர்சித்த வீரேந்திர சேவாக் !

மேற்கிந்திய தீவுகள் அணிகள் அணியை இந்திய முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் விமர்சித்துள்ளார்.

"இதற்கு மேல் இழக்க என்ன இருக்கிறது?" - மேற்கிந்திய தீவுகள் அணிகள் அணியை விமர்சித்த வீரேந்திர சேவாக் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

2023ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெறுகிறது. இதனால் இப்போட்டி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தொடரில் முதல் முறையாக மேற்கிந்திய தீவுகள் அணிகள் அணி உலககோப்பைக்கு நேரிடையாக தகுதிபெறும் வாய்ப்பை இழந்தது.

இதனால் அந்த அணி ஜிம்பாப்பேயில் நடைபெற்று வரும் தகுதிச்சுற்றுப்போட்டியில் விளையாடி வருகிறது. ஆனால், இந்தத் தொடரில் ஏ பிரிவில் இருந்த மேற்கிந்திய தீவுகள் அணி ஜிம்பாப்வே, நெதர்லாந்து அணிகளுக்கு எதிராக அதிர்ச்சி தோல்வி அடைந்தது. எனினும் அந்த பிரிவில் மூன்றாம் இடம் பிடித்து சூப்பர் 6 சுற்றுக்கு முன்னேறியது.

ஏற்கனவே இரண்டு போட்டிகளில் தோல்வியைத் தழுவியதால் போனஸ் புள்ளிகள் ஏதும் இல்லாமல் சூப்பர் 6 சுற்றுக்கு மேற்கிந்திய தீவுகள் அணி முன்னேறியதால் அந்த தொடரில் ஒரு தோல்வியை சந்தித்தால் கூட தொடரில் இருந்து வெளியேறும் நிலை இருந்தது. அந்த நிலையில், நேற்று முன்தினம் மேற்கிந்திய தீவுகள் அணி சூப்பர் 6 சுற்றில் ஸ்காட்லாந்து அணியை சந்தித்தது.

"இதற்கு மேல் இழக்க என்ன இருக்கிறது?" - மேற்கிந்திய தீவுகள் அணிகள் அணியை விமர்சித்த வீரேந்திர சேவாக் !

இந்த போட்டியில் முதலில் ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி 181 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பின்னர் ஆடிய ஸ்காட்லாந்து அணி, 43.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 185 எடுத்து அபார வெற்றிபெற்றது. இதன் மூலம் மேற்கிந்திய தீவுகள் அணி உலககோப்பை தொடருக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்து வெளியேறியது.

1975,1979ம் ஆண்டுகளில் உலகக்கோப்பையை வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக உலககோப்பைக்கு தகுதி பெரும் வாய்ப்பை இழந்துள்ளது கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு காலத்தில் உலகே அஞ்சி நடுங்கும் அணியாக இருந்த மேற்கிந்திய தீவுகள் அணி சமீபத்திய ஆண்டுகளில் தடுமாறி வரும் நிலையில், அதன் உச்சமாக உலகக்கோப்பைக்கே தகுதி பெற முடியாமல் போயுள்ளதற்கு பல்வேறு தரப்பினர் வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் முன்னாள் இந்திய அணி வீரர் வீரேந்தர் சேவாக் தனது ட்விட்டர் பதிவில், "உலகக்கோப்பை தொடரில் விளையாடும் தகுதியை மேற்கிந்திய தீவுகள் அணி இழந்துள்ளது என்னவொரு அவமானமான நிகழ்வு. வெறும் திறமையை மட்டும் வெளிப்படுத்தினால் போதாது. அணி நிர்வாகத்தின் மீதும் கவனம் செலுத்த வேண்டும். விளையாட்டில் அரசியல் இருக்க கூடாது. இதற்கு மேலும் மேற்கிந்திய தீவுகள் அணி இழப்பதற்கு ஏதுமில்லை"என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories