விளையாட்டு

ஆஷஸ் தொடரில் சர்ச்சைக்குள்ளான பேர்ஸ்ட்டோவின் விக்கெட்.. ஆஸ்திரேலியாவை மோசமாக விமர்சித்த கம்பீர் !

ஆஷஸ் தொடரில் ஜானி பேர்ஸ்டோ ஆட்டமிழந்த விதம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஆஷஸ் தொடரில் சர்ச்சைக்குள்ளான பேர்ஸ்ட்டோவின் விக்கெட்.. ஆஸ்திரேலியாவை மோசமாக விமர்சித்த கம்பீர் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

டி20, டி10 என கிரிக்கெட் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு பரிணாமம் அடைந்திருக்கிறது. ஆனால், இதற்கெல்லாம் ஆரம்பப்புள்ளி டெஸ்ட் போட்டிகள்தான். கிரிக்கெட்டின் 'ஆன்மா' குலையாமல் காத்து வருபவை டெஸ்ட் போட்டிகள் மட்டுமே. அப்பேற்பட்ட டெஸ்ட் போட்டிகளுக்கென உருவாக்கப்பட்ட 'உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்' கோப்பையை இந்த ஆண்டு ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியது.

அதனைத் தொடர்ந்து டெஸ்ட் அரங்கில் பழமையானதும், மதிப்புமிக்கதுமான ஆஷஸ் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதன் முதல் போட்டியில் இறுதி நாளில் இறுதி கட்டத்தில் 2 விக்கெட்டுகள் மீதான இருந்த நிலையில், 54 ரன்கள் தேவைப்பட ஆட்டத்தில் இங்கிலாந்து வெற்றிபெற அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது.

ஆனால், கேப்டன் கம்மின்ஸ் மற்றும் லயான் ஆகியோர் எதிர்பாராத இடத்தில இருந்து தங்கள் விக்கெட்களை இழக்காமல் திரில் வெற்றியை பதிவு செய்தது. கமின்ஸ் 4 பவுண்டரி 2 சிக்சருடன் 44 ரன்கள் எடுக்க அவருக்கு துணையாக நேதன் லயன் 2 பவுண்டரிகளுடன் 16 ரன்கள் குவித்தார். இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி 1-0 என்ற கணக்கில் ஆஷஸ் தொடரில் முன்னிலை பெற்றது.

ஆஷஸ் தொடரில் சர்ச்சைக்குள்ளான பேர்ஸ்ட்டோவின் விக்கெட்.. ஆஸ்திரேலியாவை மோசமாக விமர்சித்த கம்பீர் !

இந்த நிலையில், 5 நாட்களுக்கு முன்னர் ஆஷிஷ் தொடரின் இரண்டாவது போட்டி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. பின்னர் ஆடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 416 ரன்களும், இங்கிலாந்து அணி 325 ரன்களும் குவித்தது.

பின்னர் தனது இரண்டாவது இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 279 ரன்களுக்கு ஆட்டமிழக்க இங்கிலாந்து அணி வெற்றிபெற 371 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், இங்கிலாந்து அணி 327 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

இந்த தொடரில் ஜானி பேர்ஸ்டோ ஆட்டமிழந்த விதம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 4-வது இன்னிங்சின் முக்கிய கட்டத்தில் ஆஸ்திரேலிய வீரர் க்ரீன் பந்து வீசினார். அந்த ஓவரின் இறுதிப்பந்தை பேர்ஸ்ட்டோ அடிக்காமல் விட்ட நிலையில்,பந்து கீப்பர் அலெக்ஸ் கேரியிடம் சென்றது, உடனே ஓவர் முடிந்துவிட்டதாக கருதிய பேர்ஸ்ட்டோ க்ரீஸை விட்டு வெளியே வந்தார். அந்த நேரத்தில் அலெக்ஸ் கேரி சமயோஜிதமாக பந்தை ஸ்டம்பில் வீச ரன் அவுட்க்கு அப்பீல் செய்யப்பட்டது.

முடிவு மூன்றாம் நடுவருக்கு சென்ற நிலையில், ஐசிசி விதிமுறையின்படி மூன்றாம் நடுவர் அவுட் என தீர்ப்பு வழங்கினார். இந்த விக்கெட் கிரிக்கெட் அரங்கில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து ரசிகர்கள், 'Same Old Aussie' என மைதானத்திலேயே கூச்சலிட்டனர். அதோடு இங்கிலாந்து ஊடகங்களும் இந்த விவகாரத்தில் ஆஸ்திரேலிய அணி மீது கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் மூத்த வீரர்களும் இரண்டு தரப்பாக இருந்து இந்த அவுட்க்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதோடு இந்திய முன்னாள் வீரர் கவுதம் கம்பிரும், "ஏய் ஸ்லெட்ஜர்ஸ்.... விளையாட்டின் லாஜிக் உங்களுக்கு பொருந்துமா ? அல்லது அது எல்லாம் இந்தியர்களுக்கு மட்டும்தானா?" என காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

banner

Related Stories

Related Stories