விளையாட்டு

இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகளால் கிரிக்கெட்டே அழிந்துவிடும் -கிறிஸ் கெயில் எச்சரிக்கை !

இந்தியா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய மூன்று அணிகளால் கிரிக்கெட்டே அழிந்துவிடும் என மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் வீரர் கிறிஸ் கெயில் தெரிவித்துள்ளார்.

இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகளால் கிரிக்கெட்டே அழிந்துவிடும் -கிறிஸ் கெயில்  எச்சரிக்கை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

உலக கிரிக்கெட்டில் பல ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வந்த அணிகள் என்றால் அது இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள்தான். காரணம் இந்த அணிகளுக்கு இருந்த பணபலமும், ரசிகர்கள் பலமும்தான். அதன்பின்னர் இந்தியா 1983-ம் ஆண்டு உலகக்கோப்பையை வென்றதும் இந்தியா இந்த பட்டியலில் இடம்பெற்றது.

அதன்பின்னர் இந்த மூன்று அணிகள் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலை கட்டுப்படுத்தும் நாடுகளாக இருந்து வருகின்றன. அதிலும் ஐபிஎல் போட்டியின் வரவுக்கு பின்னர் இந்திய கிரிக்கெட் வாரியம் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளை கூட பின்னுக்கு தள்ளிவிட்டது. மேலும், ஐசிசியின் வருவாய் இந்த மூன்று நாடுகளை நம்பி இருக்கும் நிலையில், அனைத்து முடிவுகளும் இந்த நாடுகளுக்கு சாதகமாகவே எடுக்கப்படுகிறது.

அதோடு ஐசிசியின் வருவாய் பெரும் அளவில் இந்த மூன்று நாடுகளுக்கு கொடுக்கப்படுவதால் இதர கிரிக்கெட் வாரியங்கள் பெரும் நிதி பிரச்சனையில் சிக்கிவருகிறது. ஒரு காலத்தில் உலக கிரிக்கெட்டை கட்டிஆண்ட மேற்கு இந்திய தீவுகள் அணி, வீரர்களுக்கு சம்பளம் கூட கொடுக்கமுடியாது நிலையில் இருக்கிறது. ஒரு காலத்தில் இந்தியா போன்ற நாடுகளுக்கே சவாலான இருந்த ஜிம்பாப்பேயின் கிரிக்கெட் கட்டமைப்பே சிதைந்துவிட்டது.

இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகளால் கிரிக்கெட்டே அழிந்துவிடும் -கிறிஸ் கெயில்  எச்சரிக்கை !

இந்த நிலையில், இந்தியா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய மூன்று அணிகளால் கிரிக்கெட்டே அழிந்துவிடும் என மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் வீரர் கிறிஸ் கெயில் தெரிவித்துள்ளார். மூத்த வீரர்களுக்கான கிரிக்கெட் போட்டி நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் பேசியதாவது "மேற்கிந்தியத் தீவுகள் போன்ற சிறிய அணிகள் சிறப்பாக விளையாடுவதற்கு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பெரிய அணிகளுக்கு கொடுப்பதுபோல் அதிக அளவில் ஊதியம் கொடுக்க வேண்டும்.

ஆனால், சிறிய அணிகளை விட இந்தியா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய பெரிய நாடுகளுக்கு அதிக தொகை கொடுக்கப்படுகிறது. இதனால் கிரிக்கெட்டே அழிந்துவிடும். இந்தக் குறைகளை களைய சரியான வழிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும். அவ்வாறு செய்தால் அனைவரும் பயனடைவர். சிறிய அணிகள் தங்களது திறமைகளை வளர்த்துக் கொள்ள அதிக அளவிலான போட்டிகளில் விளையாட வேண்டியுள்ளது" எனக் கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories