விளையாட்டு

"IPL கோப்பையை வென்றதை அடுத்த நாள் காலை வரை கொண்டாடினோம்" -மனம் திறந்த CSK வீரர் டெவான் கான்வே !

"IPL கோப்பையை வென்றதை அடுத்த நாள் காலை வரை கொண்டாடினோம்" -மனம் திறந்த CSK வீரர் டெவான் கான்வே !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

சமீபத்தில் முடிவடைந்த 16-வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத் அணியும் 4 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. இதில் முதல் நாள் மழை பெய்ததால் போட்டி அடுத்த நாளுக்கு மாற்றி வைக்கப்பட்டது.

அதன்படி நடைபெற்ற போட்டியில் , டாஸ் வென்று சென்னை கேப்டன் தோனி பந்துவீச்சை தேர்வு செய்ய, குஜராத் அணி களமிறங்கியது. அதன்படி குஜராத் அணியில் சாஹா மற்றும் சாய் சுதர்ஷன் ஆகியோரின் அதிரடியால் குஜராத் அணி 20 ஓவர்களுக்கு 214 ரன்களை குவித்தது. அதிலும் ஆரம்பத்தில் மெதுவாக ஆரம்பித்த தமிழ்நாட்டை சேர்ந்த சாய் சுதர்ஷன் இறுதிக்கட்டத்தில் ருத்ரதாண்டவம் ஆடினார். சதமடிப்பார் என் எதிர்பாக்கப்பட்ட நிலையில் அவர் 96 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

"IPL கோப்பையை வென்றதை அடுத்த நாள் காலை வரை கொண்டாடினோம்" -மனம் திறந்த CSK வீரர் டெவான் கான்வே !

தொடர்ந்து 215 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடிய சென்னை அணி 4 ரன்கள் இருந்த நிலையில், மழை குறுக்கிட்டதால் போட்டி தடைபட்டது. பின்னர் டக்வொர்த் லூயிஸ் விதிப்படி 15 ஓவர்களுக்கு 171 ரன்கள் என்ற இலக்குடன் வெற்றியை நோக்கி களமிறங்கியது சென்னை அணி. தொடக்கத்தில் இருந்தே சென்னை அணி அதிரடியாக ஆட இறுதியில் 6 பந்துகளுக்கு 13 ரன்கள் தேவை என்ற சூழல் உருவானது.

அதில் மோஹித் சர்மா முதல் 4 பந்துகளை யார்க்கராக வீச அதில் 3 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் கடைசி இரண்டு பந்துகளுக்கு 10 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. மொஹித் சர்மா வீசிய 5வது பந்தை ஜடேஜா சிக்சரை நோக்கி பறக்க விட்டார். தொடர்ந்து கடைசி பந்துக்கு 4 ரன்கள் தேவைபட்ட நிலையில், அந்த பந்தை ஜடேஜா 4 ரன்கள் விளாச 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சென்னை அணி, 5வது முறையாக ஐபிஎல் சாம்பியன் கோப்பையை தட்டிச்சென்றது. இந்த போட்டியில் 25 பந்துகளில் 47 ரன்கள் எடுத்திருந்த சென்னை அணியின் வீரர் டெவான் கான்வே ஆட்டநாயகன் விருது பெற்றார்.

"IPL கோப்பையை வென்றதை அடுத்த நாள் காலை வரை கொண்டாடினோம்" -மனம் திறந்த CSK வீரர் டெவான் கான்வே !

இந்த நிலையில், தற்போது இந்த ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி குறித்து டெவான் கான்வே பேசியுள்ளார். அப்போது அவர் கூறியதாவது, " மழை காரணமாக இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்குவதில் தாமதமானதால் விழித்திருக்க வேண்டி பல கோப்பை தேநீர் குடித்தேன். நான் பேட் செய்ய களம் இறங்க இருந்த சூழலில் பேட்டிங் பயிற்சியாளர் ஹஸ்ஸி, ‘ரெட்புல்’ கொடுத்தார். அதை நான் குடித்தேன். அதன் பிறகு எதிர்கொண்ட முதல் பந்தில் இருந்தே எனது வேலையை செய்தேன்.

ஜடேஜா, 2 பந்துகளில் 10 ரன்கள் எடுத்து வெற்றி தேடி தந்தார். அந்த வெற்றியை மறுநாள் காலை வரை கொண்டாடினோம். இறுதிப் போட்டியில் சாய் சுதர்ஷன் அபாரமாக ஆடி இருந்தார். ஜடேஜா, பேட்டிங் மற்றும் பவுலிங்கில் அசத்தி இருந்தார். ராயுடு, அபாரமான கேமியோ இன்னிங்ஸ் ஆடி இருந்தார். ஆனாலும், எனக்கு ஆட்ட நாயகன் விருது கிடைத்தது சர்ப்ரைஸாக இருந்த்து” என கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories