விளையாட்டு

ஒரே பந்தில் இரண்டு முறை ரிவியூ.. அஸ்வினின் சேட்டையால் கலகலப்பான TNPL தொடர்.. நடந்தது என்ன ?

ஒரே பந்தில் இரண்டு முறை ரிவியூ செய்யப்பட்ட அரியநிகழ்வு டி.என்.பி.எல் நடைபெற்றுள்ளது.

ஒரே பந்தில் இரண்டு முறை ரிவியூ.. அஸ்வினின் சேட்டையால் கலகலப்பான TNPL தொடர்.. நடந்தது என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளில் 7வது சீசன் கடந்த ஜூன் 12-ம் தேதி தொடங்கியது. இந்த தொடரில். சேப்பாக் சூப்பர் கில்லிஸ் உட்பட எட்டு அணிகள் பங்கேற்கிறது, இந்த போட்டிகள் கோவை, திண்டுக்கல் சேலம் திருநெல்வேலி ஆகிய நான்கு நகரங்களில் நடைபெறுகிறது.

ஐபிஎல் போன்று இந்த ஆண்டு டி.என்.பி.எல் போட்டிகளிலும் டி.ஆர்.எஸ் முறை, இம்பேக்ட் பிளேயர், ரிசர்வ் பிளேயர், ரிசர்வ் டே வழிமுறைகள் கடைபிடிக்கப்படுவதால் ஆட்டம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் திண்டுக்கல் அணியும் திருச்சி அணியும் மோதின.

இதில் டாஸ் வென்ற திருச்சி அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். தொடக்க வீரராக களமிறங்கிய கேப்டன் கங்கா ஸ்ரீதர் ராஜு மட்டுமே அதிகபட்சமாக 48 ரன்கள் விலாச இதர வீரர்கள் குறைந்த ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இதனால் திருச்சி அணி 19.1 ஓவர்களில் 120 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்த போட்டியில் திண்டுக்கல் அணி சார்பில் வருண் சக்ரவர்த்தி 3 விக்கெட்டுகளை, அஸ்வின் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். பின்னர் களமிறங்கிய திண்டுக்கல் அணி 14.5 ஓவர்களில் இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

இந்த போட்டியின்போது திருச்சி அணி பேட்டிங் செய்துகொண்டிருந்தபோது அஸ்வின் பந்துவீச்சில் திருச்சி வீரர் ராஜ்குமாருக்கு நடுவர் என தீர்மானிக்க ராஜ்குமார் ரிவியூ செய்தார். அப்போது மூன்றாம் நடுவர் நாட் அவுட் என தீர்ப்பளிக்க, 3-ம் நடுவரின் தீர்ப்பில் அதிருப்தி அடைந்த திண்டுக்கல் அணி கேப்டன் அஸ்வின் மீண்டும் ரிவியூ செய்தார். எனினும் அதற்கும் 3-ம் நடுவர் நாட் அவுட் என தீர்ப்பளித்தார். இதன்மூலம் ஒரே பந்தில் இரண்டு முறை ரிவியூ செய்யப்பட்ட அரியநிகழ்வு நடைபெற்றுள்ளது.

banner

Related Stories

Related Stories