விளையாட்டு

"உலககோப்பை எல்லாம் பெரிதா என்ன ? அதை விட IPL கோப்பை வெல்வதுதான் பெரிது" -கங்குலியின் கருத்தால் சர்ச்சை !

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி உலகக்கோப்பையை வெல்வதை விட ஐபிஎல் கோப்பையை வெல்வதுதான் கடினமானது எனக் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

"உலககோப்பை எல்லாம் பெரிதா என்ன ? அதை விட IPL கோப்பை வெல்வதுதான் பெரிது" -கங்குலியின் கருத்தால் சர்ச்சை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

டி20, டி10 என கிரிக்கெட் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு பரிணாமம் அடைந்திருக்கிறது. ஆனால், இதற்கெல்லாம் ஆரம்பப்புள்ளி டெஸ்ட் போட்டிகள்தான். கிரிக்கெட்டின் 'ஆன்மா' குலையாமல் காத்து வருபவை டெஸ்ட் போட்டிகள் மட்டுமே. அப்பேற்பட்ட டெஸ்ட் போட்டிகளுக்கென உருவாக்கப்பட்ட 'உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்' ன் இறுதிப்போட்டிக்கு இரண்டாவது முறையாக இந்திய அணி முன்னேறியது.

கடந்த முறை முதல்முறை கடந்த முறை இறுதிப்போட்டியில் நியூஸிலாந்து அணியிடம் தோல்வியடைந்து சாம்பியன் பட்டத்தை இழந்த இந்திய அணி இந்த முறையும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியதால் இம்முறை இந்திய அணி கோப்பையை வெல்லும் என இந்திய ரசிகர்கள் பெரும் ஆவலோடு காத்திருந்தனர்.

"உலககோப்பை எல்லாம் பெரிதா என்ன ? அதை விட IPL கோப்பை வெல்வதுதான் பெரிது" -கங்குலியின் கருத்தால் சர்ச்சை !

ஆனால் இந்திய ரசிகர்களின் இந்த ஆசைக்கு ஆஸ்திரேலிய அணியின் அபார ஆட்டம் முடிவு கட்டியுள்ளது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 469 ரன்கள் குவிக்க இந்திய அணியோ 296 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அப்போதே இந்திய அணியின் வெற்றிவாய்ப்பு 50% முடிவுக்கு வந்தது. அதே போல இரண்டாவது இன்னிங்சிலும் ஆஸ்திரேலிய அணி 270 ரன்களுக்கு டிக்ளர் செய்ய இந்திய அணிக்கு 444 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது.

ஆனால், ஆரம்பத்தில் அபாரமாக தொடங்கிய இந்திய அணி பின்னர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 234 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 209 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்துள்ளது. இதன் மூலம் இந்திய அணியின் ஐசிசி கோப்பை கனவு 10 ஆண்டுகளுக்கு கானல் நீராகவே நீடிக்கிறது.

"உலககோப்பை எல்லாம் பெரிதா என்ன ? அதை விட IPL கோப்பை வெல்வதுதான் பெரிது" -கங்குலியின் கருத்தால் சர்ச்சை !

இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி உலகக்கோப்பையை வெல்வதை விட ஐபிஎல் கோப்பையை வெல்வதுதான் கடினமானது எனக் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பேசிய அவர், "விராட் கோலி இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து திடீரென விலகிய போது கட்டாயத்தால் அப்போது சிறந்த வீரராக இருந்த ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டார். அவர் ஐபிஎல் தொடரிலும் 5 கோப்பைகளை வென்றிருந்தார்.

ஐசிசி தொடர்களில் தொடர் தோல்வியை சந்தித்ததால் ஐபிஎல் கோப்பை வென்ற ரோகித் சர்மா சிறந்த வாய்ப்பாக தெரிந்தார். அதோடு உலகக்கோப்பை தொடரில் கோப்பையை வெல்வதை காட்டிலும், ஐபிஎல் தொடரில் கோப்பையை வெல்வது சவாலானது. ஏனென்றால் உலகக்கோப்பைத் தொடரில் 4 முதல் 5 போட்டிகளில் வென்றாலே அரையிறுதி அல்லது இறுதிப்போட்டியில் விளையாடலாம். ஆனால் ஐபிஎல் தொடரில் 14 போட்டிகளில் விளையாடி இருக்க வேண்டும். கிட்டத்தட்ட 17 போட்டிகளில் விளையாடினால் மட்டுமே கோப்பையை வெல்ல முடியும்" என்று கூறினார்.

banner

Related Stories

Related Stories