விளையாட்டு

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி தோல்விக்கு IPL தொடரே காரணம்- BCCI மீது டிராவிட் பகிரங்க குற்றச்சாட்டு!

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் தோல்விக்கு ஐபிஎல் தொடரே காரணம் என இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி தோல்விக்கு IPL தொடரே காரணம்- BCCI மீது டிராவிட் பகிரங்க குற்றச்சாட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

டி20, டி10 என கிரிக்கெட் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு பரிணாமம் அடைந்திருக்கிறது. ஆனால், இதற்கெல்லாம் ஆரம்பப்புள்ளி டெஸ்ட் போட்டிகள்தான். கிரிக்கெட்டின் 'ஆன்மா' குலையாமல் காத்து வருபவை டெஸ்ட் போட்டிகள் மட்டுமே. அப்பேற்பட்ட டெஸ்ட் போட்டிகளுக்கென உருவாக்கப்பட்ட 'உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்' ன் இறுதிப்போட்டிக்கு இரண்டாவது முறையாக இந்திய அணி முன்னேறியது.

கடந்த முறை முதல்முறை கடந்த முறை இறுதிப்போட்டியில் நியூஸிலாந்து அணியிடம் தோல்வியடைந்து சாம்பியன் பட்டத்தை இழந்த இந்திய அணி இந்த முறையும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியதால் இம்முறை இந்திய அணி கோப்பையை வெல்லும் என இந்திய ரசிகர்கள் பெரும் ஆவலோடு காத்திருந்தனர்.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி தோல்விக்கு IPL தொடரே காரணம்- BCCI மீது டிராவிட் பகிரங்க குற்றச்சாட்டு!

ஆனால் இந்திய ரசிகர்களின் இந்த ஆசைக்கு ஆஸ்திரேலிய அணியின் அபார ஆட்டம் முடிவு கட்டியுள்ளது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 469 ரன்கள் குவிக்க இந்திய அணியோ 296 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அப்போதே இந்திய அணியின் வெற்றிவாய்ப்பு 50% முடிவுக்கு வந்தது. அதே போல இரண்டாவது இன்னிங்சிலும் ஆஸ்திரேலிய அணி 270 ரன்களுக்கு டிக்ளர் செய்ய இந்திய அணிக்கு 444 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது.

ஆனால், ஆரம்பத்தில் அபாரமாக தொடங்கிய இந்திய அணி பின்னர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 234 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 209 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்துள்ளது. இதன் மூலம் இந்திய அணியின் ஐசிசி கோப்பை கனவு 10 ஆண்டுகளுக்கு கானல் நீராகவே நீடிக்கிறது.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி தோல்விக்கு IPL தொடரே காரணம்- BCCI மீது டிராவிட் பகிரங்க குற்றச்சாட்டு!

இந்த நிலையில், இந்த தோல்விக்கு ஐபிஎல் தொடரே காரணம் என இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போட்டி முடிந்த பின்னர் அணியின் இந்த மோசமான தோல்வி குறித்து பேசியுள்ள ராகுல் டிராவிட், " முதல் இன்னிங்ஸில் 469 ரன்கள் அடிக்கக் கூடிய வகையிலான பிட்ச் அல்ல இது. இந்திய அணி வீரர்களுக்கு என்ன லைன் மற்றும் லெந்த் வீச வேண்டும் என்பது நன்றாகவே தெரிந்து இருந்தாலும் சிறிது ஒய்டாக வீசி அடி வாங்கி இருக்கிறார்கள்.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி தோல்விக்கு IPL தொடரே காரணம்- BCCI மீது டிராவிட் பகிரங்க குற்றச்சாட்டு!

இந்திய அணியின் டாப் 5 வீரர்கள் மிகவும் அனுபவம் வாய்ந்தவர்கள். இதே வீரர்கள் தான் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மண்ணில் வென்றார்கள். ஆனால் இன்று அவர்களின் தரத்திற்கு பேட்டிங் செய்யவில்லை. ஒவ்வொரு முறையும் கோப்பைக்கு அருகில் வந்து முக்கிய ஆட்டத்தில் சொதப்புகிறோம். இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தயாராக இந்திய வீரர்களுக்கு போதுமான நேரம் கிடைக்கவில்லை. ஒரு பயிற்சியாளராக நிச்சயம் அதில் மகிழ்ச்சி இல்லை. மூன்று வாரங்களுக்கு முன்பாகவே இங்கிலாந்து வந்து, பயிற்சிப் போட்டிகளில் விளையாடி இருக்க வேண்டும் " என்று கூறியுள்ளார். ஐபிஎல் முடிந்து இந்திய அணி வீரர்கள் 7 நாட்களுக்கு முன்தான் இங்கிலாந்து சென்ற நிலையில், அதை குறிப்பிட்டே ட்ராவிட் இப்படி பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories