விளையாட்டு

"அப்போது வேறு கதை,, இப்போ சோடி போட்டு பார்ப்போமா" -முடி குறித்து கிண்டல் செய்த அக்தருக்கு சேவாக் பதிலடி !

தனக்கும் அக்தருக்கும் தனது முடி குறித்து நடைபெற்ற சுவாரசியமான சம்பவம் ஒன்றை சேவாக் ரசிகர்களுக்கு பகிர்ந்துள்ளார்.

"அப்போது வேறு கதை,, இப்போ சோடி போட்டு பார்ப்போமா" -முடி குறித்து கிண்டல் செய்த அக்தருக்கு சேவாக் பதிலடி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

நவீன இந்திய அணியை கட்டமைத்தவர் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலியை குறிப்பிடுவார்கள். அவர் கண்டெடுத்து இந்திய அணியில் அறிமுகப்படுத்திய சேவாக், யுவராஜ், தோனி,ஹர்பஜன் போன்ற வீரர்கள்தான் இந்திய அணியை அடுத்த கட்டத்துக்கு கொண்டுசெல்ல வைத்தனர்.

அதிலும் கங்குலியால் கண்டெடுக்கப்பட்ட முத்து என அதிரடி வீரர் வீரேந்திர சேவாக்கை சொல்லலாம். விவியன் ரிச்சர்ட் போல ஒரு ஆட்டக்காரர் நமக்கு கிடக்கமாட்டாரா என ஏங்கிக்கொண்டிருந்தபோது வந்தவர்தான் சேவாக். டெஸ்ட் போட்டிகளை கூட டி20 போல விறுவிறுப்பாகிய பெருமை சேவாக்குக்கு மட்டுமே உண்டு.

"அப்போது வேறு கதை,, இப்போ சோடி போட்டு பார்ப்போமா" -முடி குறித்து கிண்டல் செய்த அக்தருக்கு சேவாக் பதிலடி !

சச்சினுக்கே எட்டாக்கனியாக இருந்த டெஸ்ட் முச்சதத்தை இருமுறை எட்டி முச்சதம் அடித்த முதல் இந்தியவர் என்ற சாதனையை படைத்தார். அதோடு ஒருநாள் போட்டிகளில் சச்சினுக்கு பின்னர் இரட்டை சதத்தை அடித்த இரண்டாவது இந்தியர் என்ற சாதனையையும் படைத்தார். ஒருநாள் போட்டிகளில் சச்சின்-சேவாக் இணையை கண்டு உலகமே பயந்து நடுங்கிய காலம் ஒன்றும் இருந்தது.

அந்த வகையில் ஒரு காலத்தில் உலகமே அஞ்சிய வீரர் என்றால் அது பாகிஸ்தான் பந்துவீச்சாளர் சோயப் அக்தர்தான். ஆனால் சோயப் அக்தரே சச்சின்-சேவாக் இணையை கண்டு பயந்ததாக முன்னாள் வீரர்கள் பலர் கூறியுள்ளனர். அதே போல ஆரம்பத்தில் முறைத்துக்கொண்டு சேவாக் -அக்தர் பின்னர் நண்பர்களாக மாறினர்.

"அப்போது வேறு கதை,, இப்போ சோடி போட்டு பார்ப்போமா" -முடி குறித்து கிண்டல் செய்த அக்தருக்கு சேவாக் பதிலடி !

இந்த நிலையில், தனக்கும் அக்தருக்கும் தனது முடி குறித்து நடைபெற்ற சுவாரசியமான சம்பவம் ஒன்றை சேவாக் ரசிகர்களுக்கு பகிர்ந்துள்ளார். இது குறித்துப் பேசிய சேவாக் , " ஒரு சமயம் நாங்கள் இருவரும் சந்தித்தபோது சோயப் அக்தர் என்னிடம் உங்கள் தலையில் இருக்கும் முடிகளை விட என்னிடம் அதிகமான பண நோட்டுகள் இருக்கிறது என்று கூறினார். ஆனால், இப்போது ன்னுடைய தலையில் நிறைய முடிகள் இருக்கிறது. எனவே அக்தரிடம் இருக்கும் பண நோட்டுகளை விட என்னிடம் நிறைய முடிகள் இருக்கிறது. இதை வேண்டும் என்றால் உங்கள் நிகழ்ச்சியின் தலைப்பாக வையுங்கள்" என்று கலகலப்பா கூறியுள்ளார்.

ஒரு காலத்தில் வீரேந்திர சேவாக்கின் தலைமுடி உதிரத்தொடங்கியது என்பதும் அதன்பின்னர் சில சிகிச்சைகளுக்கு பின்னர் அவருக்கு இயல்பான வகையில் முடி இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனை குறிப்பிட்டே சேவாக் அக்தரை கலாய்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories