விளையாட்டு

"அவர் என் கைகளில் இருக்கிறார்.. அதனால் கவலை வேண்டாம்" - பதிரனா குறித்து தோனி கூறியது என்ன ?

பதிரனாவின் குடும்பத்தோடு தோனி எடுத்துக்கொண் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

"அவர் என் கைகளில் இருக்கிறார்.. அதனால் கவலை வேண்டாம்" - பதிரனா குறித்து தோனி கூறியது என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் நாயகனாக இலங்கையின் இளம் பந்துவீச்சாளர் பதிரனா உருவெடுத்துள்ளார். பிரபல இலங்கை வீரர் மலிங்காவை போலவே வித்தியாசமான முறையில் பந்துவீசும் இவர் அவரைப் போலவே தொடர்ந்து சிறப்பாகவும் பந்துவீசி வருகிறார்.

இந்த ஐபிஎல் தொடரில் இறுதிக்கட்டத்தில் சிக்கனமான பந்துவீச்சாளராக உருவெடுத்துள்ள அவர், இறுதிக்கட்டத்தில் தனது கூர்மையான யார்கர்களால் எதிரணி வீரர்களை திணறடித்து வருகிறார். இதன் காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி பதிரனா நிச்சயம் இலங்கை கிரிக்கெட்டுக்கு மிகப்பெரிய சொத்தாக இருக்கப்போகிறார் என புகழாரம் சூட்டியிருந்தார்.

"அவர் என் கைகளில் இருக்கிறார்.. அதனால் கவலை வேண்டாம்" - பதிரனா குறித்து தோனி கூறியது என்ன ?

பதிரனா குறித்துப் பேசிய தோனி, " பதிரானாவின்அவரின் வேகம், அவரது கன்சிஸ்டென்ஸி என அனைத்துமே அவர் பந்துவீச்சை எதிர்கொள்வதை மிகவும் கடினமான ஒன்றாக மாற்றுகிறது.அவரை ரெட் பால் கிரிக்கெட் போட்டிகளில் ஆட வைப்பதை இலங்கை நிர்வாகம் தவிர்க்க வேண்டும்.

மேலும் ஐசிசி தொடர்களுக்காக அவரை பாதுகாக்க வேண்டும்.கடைசியாகப் பார்க்கும்போது மிகவும் ஒல்லியாக இருந்தார். இப்போது தசைகளுக்கு இன்னும் வலுவேற்றியிருக்கிறார். அவர் நிச்சயம் இலங்கை கிரிக்கெட்டுக்கு மிகப்பெரிய சொத்தாக இருக்கப்போகிறார்" என்று புகழாரம் சூட்டியிருந்தார்.

இந்த நிலையில் தற்போது பதிரனாவின் குடும்பத்தோடு தோனி எடுத்துக்கொண் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. பதிரனாவின் குடும்பத்துடன் தோனி எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிரனாவின் சகோதரி விஷுகா பதிரனா இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார். அதில் "மதீஷா இப்போது தேர்ந்த கைகளில் இருக்கிறார். 'அவரைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். எப்போதும் அவருடன் நான் இருப்பேன்" என தோனி தங்களிடம் கூறியதாக அவர் கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories