விளையாட்டு

10-வது முறையாக இறுதிப்போட்டியில் களமிறங்கும் CSK.. சென்னையில் சூழலில் முதல்முறையாக சரிந்த குஜராத் அணி !

குஜராத் அணியுடனான போட்டியில் சென்னை அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்று ஐபிஎல் தொடரில் 10-வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

10-வது முறையாக இறுதிப்போட்டியில் களமிறங்கும் CSK.. சென்னையில் சூழலில் முதல்முறையாக சரிந்த குஜராத் அணி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இந்தாண்டுக்கான ஐ.பி.எல் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்றுகள் முடிந்து பிளே ஆஃப் சுற்றுக்கு குஜராத் டைட்டன்ஸ் , சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் முன்னேறின.

இதில் முதல் இரண்டு இடங்களை பிடித்த குஜராத் டைட்டன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் நேற்று சேப்பாக்கம் மைதானத்தில் முதலாவது குவாலிபையர் போட்டியில் மோதின. ஜராத் அணிக்கு எதிராக இதுவரை சென்னை அணி ஒரு முறை கூட வெற்றி பெற்றது இல்லை என்ற காரணத்தால் இந்த போட்டியில் குஜராத் அணியே வெல்லும் என கருதப்பட்டது.

10-வது முறையாக இறுதிப்போட்டியில் களமிறங்கும் CSK.. சென்னையில் சூழலில் முதல்முறையாக சரிந்த குஜராத் அணி !

அதன்படி டாஸை குஜராத் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா வெல்ல அவர் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார். அதன்படி களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக தொடக்க வீரர் ருத்துராஜ் 60 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

குஜராத் அணி இலக்கை விரட்டுவதில் வெற்றிகரமாக திகழ்ந்த காரணத்தால் சென்னை அணி நிர்ணயித்த 172 ரன்கள் போதாதோ என சென்னை ரசிகர்கள் கவலைப்பட அந்த கவலையை சென்னை அணி பந்துவீச்சாளர்கள் தொடக்கத்தில் இருந்தே போக்கினர். பவர்பிளேவில் 2 விக்கெட்டுகளை குஜராத் அணி இழக்க, அதன்பின்னர் சென்னையில் சுழற்பந்து வீச்சாளர்கள் ஆட்டத்தை முழுக்க தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தனர்.

10-வது முறையாக இறுதிப்போட்டியில் களமிறங்கும் CSK.. சென்னையில் சூழலில் முதல்முறையாக சரிந்த குஜராத் அணி !

அதன்பின்னர் அடுத்தடுத்து குஜராத் வீரர்கள் ஆட்டமிழக்க இறுதிக்கட்டத்தில் ரஷீத்கான் வந்து அதிரடி ஆட்டம் ஆடி ஆட்டமிழக்க சென்னை அணியில் வெற்றி உறுதியானது. இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 157 ரன்கள் மட்டுமே குவிக்க சென்னை அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்று ஐபிஎல் தொடரில் 10-வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

இந்த போட்டியில் தோல்வியைத் தழுவிய குஜராத் அணி லக்னோ -மும்பை அணிகள் இடையே நடக்கும் எலிமினேட்டர் போட்டியில் வெல்லும் அணியோடு மோதவுள்ளது. அந்த போட்டியில் வெல்லும் அணி அஹமதாபாத்தில் நடக்கும் இறுதிப்போட்டியில் சென்னை அணியோடு விளையாடும். அந்த போட்டியில் வென்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5-வது முறையாக கோப்பையை வெல்லும் என ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்தவண்ணம் உள்ளனர்.

banner

Related Stories

Related Stories