விளையாட்டு

தோனியிடம் ஆட்டோகிராப் கேட்ட ஜாம்பவான்.. அதிர்ந்த கிரிக்கெட் உலகம்.. சேப்பாக்கத்தில் நடந்தது என்ன ?

தோனியிடம் ஆட்டோகிராப் கேட்ட ஜாம்பவான்.. அதிர்ந்த கிரிக்கெட் உலகம்.. சேப்பாக்கத்தில் நடந்தது என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

நடப்பு ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் லீக் ஆட்டங்கள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளளது. இந்நிலையில் புள்ளிப்பட்டியலில் முதல் 4 அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற கொல்கத்தா அணிக்கு எதிரான லீக் போட்டியில் சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதனால், சென்னை அணியின் பிளே ஆஃப் வாய்ப்பு உறுதியாகாமல் அப்படியே நீடிக்கிறது.

டெல்லி அணியுடனான கடைசி போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே முதல் 4 இடத்தில் சென்னைக்கான வாய்ப்பு உறுதிசெய்யப்படும் என்ற நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. இதனிடையே சேப்பாக்கம் மைதானத்தில் கடைசி லீக் போட்டி நேற்று நடைபெற்றதையடுத்து ரசிகர்களுக்கு நன்றி சொல்லும் நிகழ்ச்சி சென்னை அணி நிர்வாகத்தால் நடத்தப்பட்டது.

தோனியிடம் ஆட்டோகிராப் கேட்ட ஜாம்பவான்.. அதிர்ந்த கிரிக்கெட் உலகம்.. சேப்பாக்கத்தில் நடந்தது என்ன ?

அப்போது மைதானத்தை சுற்றி சென்னை அணி வீரர்கள் வலம்வந்து ரசிகர்களின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்தனர். ஜடேஜா, ரஹானே, பென் ஸ்டோக்ஸ், மொயின் அலி, பிராவோ, நிர்வாக சிஇஓ காசி விஸ்வநாதன் என அணியை சேர்ந்தவர்கள் ”அனைவருக்கும் நன்றி” என தமிழில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

அப்போது அங்கு வர்ணனையாளராக இருந்த முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தோனியிடம் ஓடிச்சென்று தன்னுடைய ஆடியில் ஆட்டோகிராப் போடுமாறு அவரிடம் கேட்டநிலையில், சுனில் கவாஸ்கரின் உடையில் தோனி ஆட்டோகிராப் இட்டார். இந்தப் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தோனியிடம் ஆட்டோகிராப் கேட்ட ஜாம்பவான்.. அதிர்ந்த கிரிக்கெட் உலகம்.. சேப்பாக்கத்தில் நடந்தது என்ன ?

முன்னாள் இந்திய வீரரான சுனில் காவஸ்கர் டெஸ்ட் போட்டியில் முதல்முறையாக 10 ஆயிரம் ரன்களை குவித்த வீரராவார். மேலும், உலகளவில் மதிக்கப்படும் ஜாம்பவானாகவும், இந்திய கிரிக்கெட்டின் முகமாகவும் கருதப்படுகிறார். அத்தகைய வீரர் தோனியிடம் ஆட்டோகிராப் வாங்கியதை தோனியின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories