இந்தியா

50%-க்கும் குறைவாக பதிவாகும் முன்பதிவு.. வரவேற்பு இல்லாததால் நிறுத்தப்பட்ட வந்தே பாரத் ரயில் சேவை !

முதல் முறையாக போதிய பயணிகள் முன்பதிவு இல்லாததால் வந்தே பாரத் ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

50%-க்கும் குறைவாக பதிவாகும் முன்பதிவு.. வரவேற்பு இல்லாததால் நிறுத்தப்பட்ட வந்தே பாரத் ரயில் சேவை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இந்தியாவில் ரயில் சேவையை மேம்படுத்தும் வகையிலும் 75 நகரங்களை இணைக்கும் படி வந்தே பாரத் விரைவு ரயில் திட்டத்தை ஒன்றிய அரசு கொண்டு வந்தது. அதன்படி இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட டெல்லி - வாரணாசி இடையே இயங்கும் முதல் வந்தே பாரத் ரயிலின் தொடக்க ஓட்டத்தை கடந்த 2019ம் ஆண்டு ஜூன் மாதம் மோடி கொடியசைத்துத் துவக்கி வைத்தார். அப்போதே அந்த ரயில் விபத்துக்குள்ளானது.

மேலும், 3-வது வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி கடந்த ஆண்டு அக்டோபர் 30ம் தேதி தொடங்கி வைத்தார். மும்பையில் இருந்து குஜராத் காந்திநகர் இடையே இயக்கப்படும் இந்த ரயிலானது அதிவேகத்தில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென நான்கு எருமை மாடுகள் மீது மோதி வந்தே பாரத் ரயில் விபத்துக்கு உள்ளானது.

50%-க்கும் குறைவாக பதிவாகும் முன்பதிவு.. வரவேற்பு இல்லாததால் நிறுத்தப்பட்ட வந்தே பாரத் ரயில் சேவை !

அதனைத் தொடர்ந்து பசுமாடு அதன்படி கன்றுக்குட்டி மோதல் என வந்தே பாரத் ரயில் அடுத்தடுத்து சேதமடைந்தது. அதன்பின்னர் மும்பை-ஷீரடி வந்தே பாரத் ரயிலில் தானியங்கி கதவை திறக்காமல் பயணிகள் அவதியடைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சமீபத்தில் கூட, மோடி கேரளத்தில் தொடங்கி வைத்த முதல் வந்தே பாரத் ரயில் தனது முதல் பயணத்தை நிறைவு செய்த பிறகு ரயில் கண்ணூர் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. அப்போது திடிரென பெய்த மழையில் வந்தே பாரத் ரயிலின் உள் மழை நீர் ஒழுகியது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது.

50%-க்கும் குறைவாக பதிவாகும் முன்பதிவு.. வரவேற்பு இல்லாததால் நிறுத்தப்பட்ட வந்தே பாரத் ரயில் சேவை !

இந்த நிலையில், தற்போது முதல் முறையாக போதிய பயணிகள் முன்பதிவு இல்லாததால் வந்தே பாரத் ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிலாஸ்பூர் - நாக்பூர் இடையே வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வரும் நிலையில் இதில் தொடர்ந்து 50 % அளவுக்கும் குறைவாகவே தொடர்ந்து முன்பதிவு நடந்துள்ளது.

இதன் காரணமாக இந்த ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே வாரியம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. நிறுத்தப்பட்ட இந்த வந்தே பாரத் ரயிலானது செகந்திராபாத் - திருப்பதி இடையே இயக்கப்பட உள்ளதாகவும், இனி பிலாஸ்பூர் - நாக்பூர் இடையே வந்தே பாரத் ரயிலுக்கு பதிலாக தேஜஸ் விரைவு ரயில் இயக்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

banner

Related Stories

Related Stories