விளையாட்டு

ரசிகர்களுக்காக - ரசிகர்களின் - ரசிகர்களால்: சேப்பாக்கத்தில் நன்றி சொன்ன தல தோனி - CSK வீரர்கள்! (video)

சேப்பாக்கம் மைதானத்தில் கடைசி லீக் போட்டிக்கு பிறகு சி.எஸ்.கே அணி வீரர்கள் தமிழில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள வீடியோவை அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளாது.

ரசிகர்களுக்காக - ரசிகர்களின் -
ரசிகர்களால்: சேப்பாக்கத்தில் நன்றி சொன்ன தல தோனி - CSK வீரர்கள்! (video)
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நடப்பு ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் லீக் ஆட்டங்கள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளளது. இந்நிலையில் புள்ளிப்பட்டியலில் முதல் 4 அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இந்நிலையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற கொல்கத்தா அணிக்கு எதிரான கடைசி லீக்போட்டியில் சென்னை 6 விக்கெட் வித்தியாடத்தில் தோல்வியடைந்தது. இதனால், சென்னை அணியின் பிளே ஆஃப் வாய்ப்பு உறுதியாகாமல் அப்படியே நீடிக்கிறது.

டெல்லி அணியுடனான கடைசி போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே முதல் 4 இடத்தில் சென்னைக்கான வாய்ப்பு என்பது இருக்கும். சேப்பாக்கம் மைதானத்தில் கடைசி லீக் போட்டி நேற்று நடைபெற்றதையடுத்து. ரசிகர்களுக்கு தோனியின் கையெழுத்து பொறித்த பந்து மற்றும் டிசர்ட் ரசிகர்களுக்கு வழங்கப்பட்டது.

ரசிகர்களுக்காக - ரசிகர்களின் -
ரசிகர்களால்: சேப்பாக்கத்தில் நன்றி சொன்ன தல தோனி - CSK வீரர்கள்! (video)

தொடர்ந்து 7 லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில், சிஎஸ்கே வின் ட்விட்டர் பக்கத்தில் அணியினர் அனைவரும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளனர்.

ஜடேஜா, ரஹானே, பென் ஸ்டோக்ஸ், மொயின் அலி, பிராவோ, நிர்வாக சிஇஓ காசி விஸ்வநாதன் என அணியை சேர்ந்த வர்கள் ”அனைவருக்கும் நன்றி” என தமிழில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். இந்த வீடியோவை சி.எஸ்.கே நிர்வாகம் ட்விட்டரில் வெளியிட்டுள்ளது.

இதற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோக்களை சி.எஸ்.கே ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

சேப்பாக்கம் மைதானத்தில் தகுதிச்சுற்று, வெளியேற்றுதல் சுற்று என இரண்டு போட்டிகள் நடைபெற உள்ள நிலையில்,சென்னை அணி இதில் ஏதேனும் ஒன்றில் விளையாடும் வாய்ப்பை உறுதி செய்வது டெல்லி அணியுடனான போட்டியின் முடிவை பொறுத்தே அமையும் என்து குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories