விளையாட்டு

"CSK இத்தனை கோடிக்கு என்னை எடுக்கும் என தெரியும்" -IPL-ல் முதல்முறை கேப்டன் அனுபவம் குறித்து பேசிய தோனி !

ஐபிஎல் ஏலத்தில் நான் 1.5 மில்லியன் தொகைக்கு வாங்கப்பட்டதை ஏற்கனவே எதிர்பார்த்தேன் என தோனி கூறியுள்ளார்.

"CSK இத்தனை கோடிக்கு என்னை எடுக்கும் என தெரியும்" -IPL-ல் முதல்முறை கேப்டன் அனுபவம் குறித்து பேசிய தோனி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இந்திய கிரிக்கெட் அணியில் சச்சின், கங்குலி-க்கு பிறகு அடுத்து நட்சத்திர வீரராக யார் வருவார்கள் என்ற கேள்வி எழுந்தபோது தனது அமைதியாலும், அதிரடி ஆட்டத்தாலும் அந்த கேள்விகளுக்கு பதில் கொடுத்தவர்தான் எம்.எஸ்.தோனி. இந்திய அணியில் இப்படி ஒரு வீரரா என பலரும் வியந்து பார்க்கும் அளவுக்கு தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய இவர், சச்சின் அவுட் ஆனால், இந்திய அணி தோற்றுவிடும் என கருதப்பட்ட நிலையையம் மாற்றிக்காட்டினார்.

அதனால் எம்.எஸ்.தோனி களத்திலிருந்தால் அது எவ்வளவு பெரிய ரன்னாக இருந்தாலும் அடித்து இந்திய அணிக்கு வெற்றியைத் தேடி கொடுத்துவிடுவார் என்ற நம்பிக்கையைப் இந்திய ரசிகர்களுக்கு விதைத்தார். அதன்பின்னர் இந்திய அணிக்கு கேப்டனாகி முதல் டி20 உலகக்கோப்பை தொடரிலேயே இந்திய அணிக்கு கோப்பையை வென்று கொடுத்தார்.

"CSK இத்தனை கோடிக்கு என்னை எடுக்கும் என தெரியும்" -IPL-ல் முதல்முறை கேப்டன் அனுபவம் குறித்து பேசிய தோனி !

இவர் கேப்டனாக இருந்து மூன்று விதமான உலகக் கோப்பை வென்று இந்திய அணியின் கிரிக்கெட் வரலாற்றில் சரித்த சாதனையைப் படைத்தது. மேலும், மைதானத்தில் எந்தவித ஆக்ரோஷத்தையும் காட்டாமல் களத்தில் தனது பேட்டால் பதிலடி கொடுப்பார். இதனாலேயே இவரை இந்திய ரசிகர்களைத் தாண்டி உலகம் முழுவதும் ரசிகர்களை சம்பாதித்தார்.

அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்தும் ஓய்வு பெற்ற தோனி தற்போது ஐ.பி.எல் தொடரில் மட்டும் சென்னை அணியை வழிநடத்தி வருகிறார். கடந்த 12-ம் தேதி சேப்பாக்கத்தில் ராஜஸ்தான் அணிக்கு எதிரியாக நடைபெற்ற போட்டியில் சென்னை அணிக்கு கேப்டனாக 200-வது போட்டியில் விளையாடி சாதனை படைத்தார். துரதிஷ்டவசமாக அந்த போட்டியில் சென்னை அணி தோல்வியை சந்தித்தது.

"CSK இத்தனை கோடிக்கு என்னை எடுக்கும் என தெரியும்" -IPL-ல் முதல்முறை கேப்டன் அனுபவம் குறித்து பேசிய தோனி !

இந்த நிலையில், சென்னை அணியை முதல்முறையாக தலைமை தாங்கியது குறித்து தோனி கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், "முதல் முறையாக ஐபிஎல் தொடரில் நீங்கள் வெளிநாட்டு வீரர்களுடன் இணைந்து விளையாடும் சூழ்நிலை ஏற்பட்டபோது ஒரு பதற்றம் இருந்தது. அவர்கள் எங்கிருந்து வருகிறார்கள் என்பதும் உங்களுக்கு தெரியாது.

எடுத்துக்காட்டாக மேத்யூ ஹைடன் சென்னை அணிக்கு வந்ததும் என்னை இடது வலது மற்றும் நேராக நிற்க வைத்து கெட்ட வார்த்தைகளால் திட்டுவார் என்று நினைத்தேன். ஆனால் பஞ்சாப் அணிக்கு எதிராக நடைபெற்ற முதல் போட்டிக்கு முன்பாக அவர் அணியின் மீட்டிங்கிற்கு தலைமை தாங்கி முக்கியமான திட்டங்களை வகுத்துக் கொடுத்தார். குறிப்பாக பிரட் லீ’யை சமாளிப்பது குறித்து அனைவருக்கும் விளக்கினார்" என்று கூறினார்.

"CSK இத்தனை கோடிக்கு என்னை எடுக்கும் என தெரியும்" -IPL-ல் முதல்முறை கேப்டன் அனுபவம் குறித்து பேசிய தோனி !

மேலும், முதல் முறை ஏலத்தில் பங்கேற்றது குறித்து பேசிய அவர், "நான் ஏலத்தில் ரிஸ்க் எடுக்க விரும்பினேன். குறிப்பாக 3 அணிகளில் மார்க்கியூ வீரர்கள் இல்லாமல் இருந்ததால் 2 அணிகள் என்னை பெரிய தொகைக்கு வாங்கும் என்று நான் நினைத்தேன். அந்த நிலையில் நடைபெற்ற ஏலத்தில் நான் 1.5 மில்லியன் தொகைக்கு வாங்கப்பட்டதை ஏற்கனவே எதிர்பார்த்தேன்" என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories