விளையாட்டு

உச்சத்தில் இருந்து கீழே சரிந்த சூர்யகுமார்.. தொடரும் டக் அவுட் சோதனையால் அதிர்ச்சியில் ரசிகர்கள் !

இது வரை ஐபிஎல் தொடரில் 3 போட்டிகளில் விளையாடியுள்ள சூரியகுமார், 16 ரன்களை மட்டுமே எடுத்து அதிலும் ஒரு முறை டக் அவுட்டாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

உச்சத்தில் இருந்து கீழே சரிந்த சூர்யகுமார்.. தொடரும் டக் அவுட் சோதனையால்  அதிர்ச்சியில் ரசிகர்கள் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

சமீப காலமாக இந்திய அணியின் தவிர்க்கமுடியாத வீரராக முன்னேறியுள்ளார் சூரியகுமார் யாதவ். இந்தியாவின் 360 டிகிரி, இந்தியாவின் ஏபி டிவிலியர்ஸ் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் அளவு சிறப்பாக ஆடி வருகிறார். இந்திய அணியின் முக்கிய வெற்றிகளுக்கு காரணமாகவும் திகழ்ந்து வருகிறார்.

நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி சூரியகுமாரை நம்பியே களமிறங்கியது என்று சொல்லும் அளவு சிறப்பாக ஆடி வருகிறார். அவரும் விராட் கோலியும் இந்திய அணியின் நம்பிக்கையாக இருந்து வருகிறார்கள். இந்த தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலி முதல் இடத்திலும், சூரியகுமார் மூன்றாவது இடத்திலும் இருந்தனர்.

உச்சத்தில் இருந்து கீழே சரிந்த சூர்யகுமார்.. தொடரும் டக் அவுட் சோதனையால்  அதிர்ச்சியில் ரசிகர்கள் !

அதனைத் தொடர்ந்து தற்போது முடிந்த இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரின் மூன்றாவது போட்டியிலும் சூரியகுமார் யாதவ் ருத்ரதாண்டவம் ஆடினார். 51 பந்துகளின் 9 சிக்ஸர்களுடன் 112 ரன்கள் குவித்து இறுதிவரை களத்தில் இருந்தார். அவரின் அதிரடி காரணமாக அந்த போட்டியில் இந்திய அணி 91 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

ஆனால் அதன்பின்னர் சூரியகுமாருக்கு பெரும் சோதனை காலமாக அமைந்துள்ளார். ஒருநாள் போட்டியில் நியூஸிலாந்து அணிக்கு எதிராக திணறியவர் அடுத்து வந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஹாட் ட்ரிக் டக்அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். இதனால் சூரியகுமார் ஒருநாள் போட்டிகளில் இப்படிதான் சொதப்புவார் ஆனால் டி20 என வந்துவிட்டால் அதிரடியாக மாறிவிடுவார் எனக் கூறப்பட்டது.

உச்சத்தில் இருந்து கீழே சரிந்த சூர்யகுமார்.. தொடரும் டக் அவுட் சோதனையால்  அதிர்ச்சியில் ரசிகர்கள் !

ஆனால் ஐபிஎல் தொடரிலும் சூரியகுமார் பார்ம் இன்றி தவித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது வரை ஐபிஎல் தொடரில் 3 போட்டிகளில் விளையாடியுள்ள சூரியகுமார், 16 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். இதில் நேற்று நடைபெற்ற டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் டக் அவுட்டாகி அதிர்ச்சியளித்துள்ளார். இதே பார்ம் தொடர்ந்தாள் இந்தியாவில் நடைபெறும் 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் அவரின் பெயர் நிச்சயம் இடம்பெறாது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories