விளையாட்டு

4 ஓவர் வீசினா முட்டியை பிடித்து உக்காந்துடுறாங்க, இவங்க எல்லா பந்துவீச்சாளரா ? - ரவி சாஸ்திரி காட்டம் !

வீரர்கள் 4 போட்டியில் விளையாடி இப்படி அடிக்கடி காயமடைவதை கண்டாலே வெறுப்பாக இருக்கிறது என முன்னாள் இந்திய அணி பயிற்சியாளர் ரவி சாஸ்திரி விமர்சித்துள்ளார்.

4 ஓவர் வீசினா முட்டியை பிடித்து உக்காந்துடுறாங்க, இவங்க எல்லா பந்துவீச்சாளரா ? - ரவி சாஸ்திரி காட்டம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ஐபிஎல் மும்பை அணிக்காக அறிமுகமான பும்ரா அதன்பின்னர் தனது அபார செயல்பாடு காரணமாக இந்திய அணியின் இடம்பிடித்தார். அதோடு குறுகிய காலத்தில் இந்தியாவின் முதன்மை பந்துவீச்சளராகவும் உயர்ந்தார். முதலில் அவர் லீமிடெட் போட்டிகளுக்கு மட்டுமே தகுதியான வீரர் என கூறப்பட்ட நிலையில், டெஸ்ட் போட்டிகளில் களமிறங்கி அங்கும் தன்னால் ஜொலிக்க முடியும் என்பதை நிரூபித்தார்.

தொடர்ந்து இந்திய அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பும்ரா அடிக்கடி ஏற்படும் காயத்தால் அவதிப்பட்டு வந்தார். இறுதியாக கடந்த ஆண்டு தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான தொடரின் போது காயமடைந்த பும்ரா, தற்போது வரை அவர் எந்த போட்டியிலும் விளையாடவில்லை.

4 ஓவர் வீசினா முட்டியை பிடித்து உக்காந்துடுறாங்க, இவங்க எல்லா பந்துவீச்சாளரா ? - ரவி சாஸ்திரி காட்டம் !

பும்ரா இனி நேரடியாக ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக தான் களமிறங்குவார் என தகவல் வெளியான நிலையில் ஐபிஎல் தொடரிலும் பும்ரா விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டது. இவர் தவிர நவ்தீப் சைனி, குல்தீப் சென், மோசின் கான் ஆகியோரும் தொடர்ந்து காயத்தால் விளையாடமுடியாத நிலை இருந்து வருகிறது.

கடைசியாக ஐபிஎல் தொடரில் சென்னை மும்பை அணிகள் மோதிய போட்டியில் கூட முதல் ஓவரை வீசிய தீபக் சஹர் காயமடைந்து போட்டியில் இருந்து வெளியேறினார். கடந்த ஐபிஎல் தொடரிலும் அவர் காயமடைந்து விளையாடாத நிலையில் தற்போது மூன்றாவது போட்டியிலேயே அவர் காயம் அடைந்தது சென்னை அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

4 ஓவர் வீசினா முட்டியை பிடித்து உக்காந்துடுறாங்க, இவங்க எல்லா பந்துவீச்சாளரா ? - ரவி சாஸ்திரி காட்டம் !

இந்த நிலையில், வீரர்கள் 4 போட்டியில் விளையாடி இப்படி அடிக்கடி காயமடைவதை கண்டாலே வெறுப்பாக இருக்கிறது என முன்னாள் இந்திய அணி பயிற்சியாளர் ரவி சாஸ்திரி விமர்சித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், கடந்த 3 அல்லது 4 ஆண்டுகளாக சில பவுலர்கள் காயமடைந்து தேசிய கிரிக்கெட் அகாடமியிலேயே (என்.சி.ஏ) இருக்கிறார்கள். இவர்களுக்கு என்.சி.ஏ ஏன் சான்றிதழ் கொடுக்கிறது என்றே தெரியவில்லை. நான்கு ஆட்டத்தில் ஆடினாலே காயமடைகிறார்கள். இவ்ர்கள் எல்லாம் எந்த பந்துவீச்சாளர்கள்?

4 ஓவர் வீசினா முட்டியை பிடித்து உக்காந்துடுறாங்க, இவங்க எல்லா பந்துவீச்சாளரா ? - ரவி சாஸ்திரி காட்டம் !

இது போன்ற நிகழ்வுகள் வெறுப்பை ஏற்படுத்துகிறது. இது அவர்களுக்கு மட்டும் பின்னடைவல்ல, பிசிசிஐ, ஐபிஎல் அணிகள் என்று அனைவருக்கும் பெரிய பிரச்சனையாக இருக்கிறது. 3-4 போட்டிகளில் ஆடிவிட்டு தொடையைப் பிடித்துக் கொள்வது, தோள்பட்டையைப் பிடித்துக் கொள்வது, முழங்காலை பிடித்துக் கொள்வது என்று இருந்தால் என்ன செய்வது? இவர்கள் என்ன பயிற்சி எடுக்கிறார்கள்? " எனக் காட்டமாக விமர்சித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories