விளையாட்டு

FIFA டாப் 10 அணிகளுக்கு எதிராக அதிக கோல் அடித்தது மெஸ்ஸியா ? ரொனால்டோவா ? -வெளியான புள்ளிவிவரம் !

பிஃபா தரவரிசையில் டாப் 10 அணிகளுக்கு எதிராக மெஸ்ஸி, ரொனால்டோ அடித்த கோல் விவரங்கள் வெளியாகியுள்ளது.

FIFA  டாப் 10 அணிகளுக்கு எதிராக அதிக கோல் அடித்தது மெஸ்ஸியா ? ரொனால்டோவா ? -வெளியான புள்ளிவிவரம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

நடந்து முடிந்த கால்பந்து உலகக்கோப்பை போட்டியின் இறுதிப்போட்டியில் மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணி பிரான்ஸ் அணியை பெனால்டி சூட் அவுட்டில் வீழ்த்தி உலகக்கோப்பையை கைப்பற்றியது.ஆனால், கடந்த 15 ஆண்டுகளாக மெஸ்ஸியின் கடுமையான போட்டியாளராக இருந்த நட்சத்திர வீரர் போர்த்துக்கல் அணி இந்த உலகக்கோப்பையின் காலிறுதியில் மொரோக்கோ அணியிடம் தோல்வியைத் தழுவி வெளியேறியது. அந்த போட்டியில் ரொனால்டோ கண்ணீரோடு வெளியேறியது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து ரொனால்டோவை சவுதி அரேபியா கால்பந்து கிளப்பான அல் நாசர் அணி ஆண்டுக்கு சுமார் 1,700 கோடி ரூபாய் என்ற மிக பெரிய தொகைக்கு ஒப்பந்தம் செய்தது. ரொனால்டோவின் அந்த ஒப்பந்தம் 2025ஆம் ஆண்டு வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

FIFA  டாப் 10 அணிகளுக்கு எதிராக அதிக கோல் அடித்தது மெஸ்ஸியா ? ரொனால்டோவா ? -வெளியான புள்ளிவிவரம் !

கால்பந்தின் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக ரொனால்டோவும் மெஸ்ஸியும் சிறந்த வீரர்களாக கொண்டாடப்படுகின்றனர். மேலும், இந்த இரு வீரர்களுக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்த இருவர் மோதும் போட்டியில் இந்த இரு அணி ரசிகர்களும் அடித்துக்கொள்ளாத குறையாக வார்த்தை போரில் ஈடுபடுவர்.

இருவருக்கும் இடையில் யார் சிறந்தவர் என்ற போட்டி தொடர்ந்து நடைபெற்ற நிலையில், மெஸ்ஸி உலகக்கோப்பையை வென்றதும் இந்த மோதல் முடிவுக்கு வந்ததாக கூறப்பட்டது. ரொனால்டோவை விட அதிக பிபா விருதுகள், 'பாலன் டி ஓர்' விருதுகளை வாங்கியுள்ள மெஸ்ஸி உலகக்கோப்பையை வென்றதன் மூலம் ரொனால்டோவை விட சிறந்த வீரர் என்பதை நிரூபித்து விட்டார் என கூறப்பட்டது.

FIFA  டாப் 10 அணிகளுக்கு எதிராக அதிக கோல் அடித்தது மெஸ்ஸியா ? ரொனால்டோவா ? -வெளியான புள்ளிவிவரம் !

மெஸ்ஸி உலகக்கோப்பையை வென்ற நிலையில் அவரின் ரசிகர்கள் ரொனால்டோவை கிண்டல் செய்து வந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ரொனால்டோ ரசிகர்களும் ரொனால்டோவின் சாதனைகளை கூறி வந்தனர். இந்த வாரம் நடைபெற்ற போட்டியில் போர்த்துக்கல் அணிக்கு ஆடிய ரொனால்டோ லிச்சென்ஸ்டைன் என்ற சிறிய அணிக்கு எதிராக 2 கோல் அடித்த நிலையில், மெஸ்ஸி குரசவ் என்ற சிறிய அணிக்கு எதிராக ஹாட்-ட்ரிக் கோல் அடித்து அசத்தினார். இதனால் இந்த இரு வீரர்களும் சிறிய அணிக்கு எதிராகதான் கோல் அடிப்பார்கள் என இரு தரப்பு ரசிகர்களும் வார்த்தை போரில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், தற்போது பிஃபா தரவரிசையில் டாப் 10 அணிகளுக்கு எதிராக மெஸ்ஸி, ரொனால்டோ அடித்த கோல் விவரங்கள் வெளியாகியுள்ளது. அதன்படி மெஸ்ஸி டாப் 10 அணிகளான பிரேசிலுக்கு எதிராக 5 கோல், பிரான்ஸ் அணிக்கு எதிராக 3 கோல், குரோஷியா அணிக்கு எதிராக 4 கோல், ஸ்பெயின் அணிக்கு எதிராக 2 கோல், நெதர்லாந்து மற்றும் போர்த்துக்கல் அணிக்கு எதிராக தலா ஒரு கோல் என மொத்தம் 15 கோல்கள் அடித்துள்ளார்.

FIFA  டாப் 10 அணிகளுக்கு எதிராக அதிக கோல் அடித்தது மெஸ்ஸியா ? ரொனால்டோவா ? -வெளியான புள்ளிவிவரம் !

அதேபோல ரொனால்டோ நெதர்லாந்து அணிக்கு எதிராக 4கோல், பெல்ஜியம் அணிக்கு எதிராக 3 கோல்,ஸ்பெயின் அணிக்கு எதிராக 3 கோல், பிரான்ஸ் அணிக்கு எதிராக 2 கோல், அர்ஜென்டினா மற்றும் குரோஷியா அணிகளுக்கு எதிராக தலா ஒருகோல் என்று மொத்தம் 14 கோல்கள் அடித்துள்ளார். இதன் மூலம் ரொனால்டோவை விட மெஸ்ஸி ஒரு கோல் அதிகம் அடித்துள்ளார். அதே நேரம் ரொனால்டோ டாப் 10 அணிகளுக்கு எதிராக அதிக போட்டிகளில் விளையாடியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories