விளையாட்டு

நாட்டுக்காக 100-வது கோல் அடித்த மெஸ்ஸி.. சர்வதேச அளவில் படைத்த புதிய சாதனை என்ன தெரியுமா ?

இது வரை சர்வதேச அரங்கில் கிறிஸ்டியானோ ரொனால்டோ (120 கோல்கள்), ஈரானின் அலி டேய் (109 கோல்கள்) ஆகியோர் மட்டுமே 100 கோல் அடித்துள்ளனர்.

நாட்டுக்காக 100-வது கோல் அடித்த மெஸ்ஸி.. சர்வதேச அளவில் படைத்த புதிய சாதனை என்ன தெரியுமா ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

அதன்பலமாக 23வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில் மெஸ்ஸி கோல் அடித்து அசத்த, அதனை அடுத்து 36-வது நிமிடத்தில் டி மரியா கோல் அடித்தார். ஆட்டத்தின் முதல் பாதியில் 2-0 என அர்ஜென்டினா அணி முன்னிலையில் இருந்த நிலையில், இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கியது.

முதல் 70 நிமிடம் ஆடுவது பிரான்ஸ் அணிதானா என்ற கேள்வி எழும் வகையில் அந்த அணி மிகமோசமாக ஆடியது. அர்ஜென்டினாவில் அதிரடிக்கு முன்னர் பிரான்ஸ் அணியால் நிற்கவே முடியவில்லை. ஆனால், அதன்பின்னர் இறுதி சில நிமிடங்களில் அடுத்தடுத்து 2 கோள்களை அடித்து பிரான்ஸ் அணி அதிர்ச்சியளித்தது.

நாட்டுக்காக 100-வது கோல் அடித்த மெஸ்ஸி.. சர்வதேச அளவில் படைத்த புதிய சாதனை என்ன தெரியுமா ?

90 நிமிட ஆட்ட நேர முடிவில் இரண்டு அணிகளும் 2-2 கோல் கணக்கில் சம நிலையில் இருந்ததை அடுத்து, போட்டி கூடுதல் நேர ஆட்டத்திற்கு சென்றது. அதில் இரண்டு அணிகளும் தலா ஒரு கோல் அடித்த நிலையில், போட்டி பெனால்டி கிக் முறைக்கு சென்றது. இதில் பிரான்ஸ் அணியை 4-2 என்ற கணக்கில் உலகமே எதிர்பார்த்த மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணி வென்றது.உலகமே எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணி வென்றதில் உலகத்தில் உள்ள மூளை முடுக்கில் உள்ள ரசிகர்கள் அனைவரும் கொண்டாடினர்.

அர்ஜென்டினாவிலும் கொண்டாட்டம் உச்சத்தை அடைந்தது. கோப்பையை வென்றபின்னர் அர்ஜென்டினா வீரர்கள் தங்கள் தாயகம் திரும்பியதும் அவர்களுக்கு பல லட்சம் வீரர்கள் சாலையில் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். அதனைத் தொடர்ந்து இந்த வாரம் நடைபெற்ற சர்வதேச போட்டியிலும் அர்ஜென்டினா வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

நாட்டுக்காக 100-வது கோல் அடித்த மெஸ்ஸி.. சர்வதேச அளவில் படைத்த புதிய சாதனை என்ன தெரியுமா ?

இந்த நிலையில் நேற்று அர்ஜென்டினா அணி நட்புரீதியிலான போட்டியில் குரசவ் அணியை சந்தித்தது. இந்த போட்டியில் ஆரம்பத்தில் இருந்தே அசத்திய அர்ஜென்டினா அணி கோல் மழையை பொழிந்தது. இந்த போட்டியில் முதல் கோலை மெஸ்ஸி அடிக்க அது சர்வதேச போட்டிகளில் அர்ஜென்டினா அணிக்காக மெஸ்ஸி அடித்த 100-வது கோலாக மாறியது. இதன் மூலம் குறைந்த போட்டிகளில் 100 கோல்கள் அடித்து சாதனை படைத்தார்.

நாட்டுக்காக 100-வது கோல் அடித்த மெஸ்ஸி.. சர்வதேச அளவில் படைத்த புதிய சாதனை என்ன தெரியுமா ?

அதனைத் தொடர்ந்து மெஸ்ஸி மேலும் இரு கோல்கள் அடித்து ஹட் ட்ரிக் கோல் அடித்து அசத்தினார். ஆட்டத்தின் முடிவில் அர்ஜென்டினா அணி 7-0 என்ற கணக்கில் குரசவ் அணியை வீழ்த்தியது. இது வரை சர்வதேச அரங்கில் கிறிஸ்டியானோ ரொனால்டோ (120 கோல்கள்), ஈரானின் அலி டேய் (109 கோல்கள்) ஆகியோர் மட்டுமே 100 கோல் அடித்துள்ளனர். இதில் அலி டேய் ஓய்வு பெற்றுள்ள நிலையில் மெஸ்ஸி அவரை விரைவில் முந்துவார் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

banner

Related Stories

Related Stories