விளையாட்டு

"இந்திய அணியில் நாங்கள் மிகவும் பயந்த வீரர் சச்சின் கிடையாது, இவர்தான்" -பாக். முன்னாள் வீரர் கருத்து !

இந்திய அணியில் நாங்கள் பார்த்து மிகவும் பயந்த வீரர் என்றால் அது சேவாக்தான் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் அப்துல் ரசாக் கூறியுள்ளார்.

"இந்திய அணியில் நாங்கள் மிகவும் பயந்த வீரர் சச்சின் கிடையாது, இவர்தான்" -பாக். முன்னாள் வீரர் கருத்து !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

நவீன இந்திய அணியை கட்டமைத்தவர் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலியை குறிப்பிடுவார்கள். அவர் கண்டெடுத்து இந்திய அணியில் அறிமுகப்படுத்திய சேவாக், யுவராஜ், தோனி,ஹர்பஜன் போன்ற வீரர்கள்தான் இந்திய அணியை அடுத்த கட்டத்துக்கு கொண்டுசெல்ல வைத்தனர்.

அதிலும் கங்குலியால் கண்டெடுக்கப்பட்ட முத்து என அதிரடி வீரர் வீரேந்திர சேவாக்கை சொல்லலாம். விவியன் ரிச்சர்ட் போல ஒரு ஆட்டக்காரர் நமக்கு கிடக்கமாட்டாரா என ஏங்கிக்கொண்டிருந்தபோது வந்தவர்தான் சேவாக். டெஸ்ட் போட்டிகளை கூட டி20 போல விறுவிறுப்பாகிய பெருமை சேவாக்குக்கு மட்டுமே உண்டு.

"இந்திய அணியில் நாங்கள் மிகவும் பயந்த வீரர் சச்சின் கிடையாது, இவர்தான்" -பாக். முன்னாள் வீரர் கருத்து !

சச்சினுக்கே எட்டாக்கனியாக இருந்த டெஸ்ட் முச்சதத்தை இருமுறை எட்டி முச்சதம் அடித்த முதல் இந்தியவர் என்ற சாதனையை படைத்தார். அதோடு ஒருநாள் போட்டிகளில் சச்சினுக்கு பின்னர் இரட்டை சதத்தை அடித்த இரண்டாவது இந்தியர் என்ற சாதனையையும் படைத்தார். ஒருநாள் போட்டிகளில் சச்சின்-சேவாக் இணையை கண்டு உலகமே பயந்து நடுங்கிய காலம் ஒன்றும் இருந்தது.

இந்த நிலையில், இந்திய அணியில் நாங்கள் பார்த்து மிகவும் பயந்த வீரர் என்றால் அது சேவாக்தான் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் அப்துல் ரசாக் கூறியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், "நாங்கள் எதிர்கொண்டுதிலேயே மிகவும் ஆபத்தான ஒரு வீரர் சேவாக்தான். சச்சின் டெண்டுல்கர்க்கு பிறகு நாங்கள் அதிகம் திட்டமிடுவது சேவாக் பற்றி தான்.

"இந்திய அணியில் நாங்கள் மிகவும் பயந்த வீரர் சச்சின் கிடையாது, இவர்தான்" -பாக். முன்னாள் வீரர் கருத்து !

எங்களுடைய முழு திட்டமே சேவாக் மற்றும் டெண்டுல்கர் ஆகிய இருவரின் விக்கெட்டை வீழ்த்த வேண்டும் என்பதில்தான் இருக்கும். இந்த இருவரின் விக்கெட்டை வீழ்த்தி விட்டால் எங்களுக்கு வெற்றி உறுதியாகிவிடும்.

இவர்கள் தவிர ஜாகிர் கான், இர்பான் பதான், ஹர்பஜன் சிங் ஆகியோரும் ஆபத்தான வீரர்கள். எங்கள் பேட்ஸ்மேன்கள் ஜாகிர் கான் , இர்பான் பதானுக்கு எதிராக கவனமாக இருப்பார்கள். நாங்கள் விளையாடிய காலத்தில் இந்த வீரர்கள்தான் இந்திய அணியின் மிகப்பெரிய வீரர்களாகவும் மற்றும் இந்திய அணிக்காக வெற்றிகளை குவிக்க கூடிய வீரர்களாகவும் இருந்தனர் " என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories