விளையாட்டு

"டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் களமிறங்குவீர்களா ?" -ஹர்திக் பாண்டியாவின் பதில் என்ன தெரியுமா ?

டெஸ்ட் அணிக்கு தற்போதைக்கு வர மாட்டேன் என ஹர்திக் பாண்தியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

 "டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் களமிறங்குவீர்களா ?" -ஹர்திக் பாண்டியாவின் பதில் என்ன தெரியுமா ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

டி20, டி10 என கிரிக்கெட் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு பரிணாமம் அடைந்திருக்கிறது. ஆனால், இதற்கெல்லாம் ஆரம்பப்புள்ளி டெஸ்ட் போட்டிகள்தான். கிரிக்கெட்டின் 'ஆன்மா' குலையாமல் காத்து வருபவை டெஸ்ட் போட்டிகள் மட்டுமே. அப்பேற்பட்ட டெஸ்ட் போட்டிகளுக்கென உருவாக்கப்பட்ட 'உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்' ன் இறுதிப்போட்டிக்கு இரண்டாவது முறையாக இந்திய அணி முன்னேறியுள்ளது.

லார்ட்ஸ் மைதானத்தில் வரும் ஜூன் மாதம் நடக்கும் இறுதிப்போட்டியில் இந்திய அணியும் ஆஸ்திரேலிய அணியும் சாம்பியன் பட்டத்திற்காக முட்டி மோத போகின்றனர். கடந்த முறை இறுதிப்போட்டியில் நியூஸிலாந்து அணியிடம் தோல்வியடைந்து சாம்பியன் பட்டத்தை இழந்த இந்திய அணி இந்த முறையாவது அதனை வெல்லுமா என ரசிகர்கள் எதிர்நோக்கியுள்ளனர்.

 "டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் களமிறங்குவீர்களா ?" -ஹர்திக் பாண்டியாவின் பதில் என்ன தெரியுமா ?

இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானம் ஸ்விங் மற்றும் வேகப்பந்து வீச்சுக்கே எப்போதும் சாதகமாக இருந்து வந்துள்ளது. இதனால் அங்கு இந்தியாவின் பலமாக சுழற்பந்து கூட்டணி பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாது. இதனால் இந்திய அணி வேகப்பந்துவீச்சை நம்பியே அங்கு களம்காண வேண்டிய நிலையில் இருக்கிறது.

இதனால் இந்தியாவின் நட்சத்திர வேகப்பந்து ஆல் ரௌண்டரான ஹர்திக் பாண்டியா இந்த தொடரில் களமிறங்க வேண்டும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், இந்தியா ஒரு வேகப்பந்து ஆல் ரௌண்டரோடு களமிறங்கினால் கூடுதல் ஒரு பேட்ஸ்மேனோடு இந்திய அணி களமிறங்கி வாய்ப்பு கிடைக்கும்.

 "டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் களமிறங்குவீர்களா ?" -ஹர்திக் பாண்டியாவின் பதில் என்ன தெரியுமா ?

இந்த நிலையில், டெஸ்ட் அணிக்கு தற்போதைக்கு வர மாட்டேன் என ஹர்திக் பாண்ட்யா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், "நான் நல்ல ஃபார்மில் தான் இருக்கிறேன். ஆனால் டெஸ்ட் அணிக்கு செல்வதற்காக 10 சதவீதம் கூட தகுதிப்பெறவில்லை. ஏன், ஒரு சதவீதம் கூட தயாராகவில்லை. மேலும், குதியுடன் உள்ள வேறு ஒரு வீரரின் இடத்தை பறிப்பது சரியாக இருக்காது.

இதன் காரணமாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியிலும் நான் விளையாட மாட்டேன். எனக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் வர வேண்டும் என்று தோன்றினால், நான் அதற்காக கடுமையான முயற்சிகளை செய்து, எனக்கான இடத்தை நானே உருவாக்கிக்கொள்வேன். அதுவரையில் இந்தியாவின் எந்தவொரு டெஸ்ட் தொடரிலும் நான் விளையாட மாட்டேன்" என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories