விளையாட்டு

50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த டாப் பேட்ஸ்மேன்கள்.. இந்திய அணி படைத்த அரிய சாதனை என்ன தெரியுமா ?

இந்தியா ஆஸ்திரேலிய அணிகள் மோதிய அஹமதாபாத் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஒரு அரியசாதனை ஒன்றை படைத்துள்ளது.

 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த டாப் பேட்ஸ்மேன்கள்..  இந்திய அணி படைத்த அரிய சாதனை என்ன தெரியுமா ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் மோதும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரின் முதல் போட்டி நாக்பூரில் நடைபெற்றது. இதில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

அதைத் தொடர்ந்து இரண்டாவது டெஸ்ட் போட்டி டெல்லியில் தொடங்கியது. இந்த போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று பார்டர் கவாஸ்கர் டிராபியை தக்கவைத்தது. மேலும் 4 போட்டிகள் கொண்ட தொடரிலும் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது

 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த டாப் பேட்ஸ்மேன்கள்..  இந்திய அணி படைத்த அரிய சாதனை என்ன தெரியுமா ?

பின்னர் மூன்றாவது டெஸ்ட் போட்டி நடைபெற்ற இந்தூரில் தோல்வியின்பிடியில் இருந்து மீண்டு இந்த டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் இருந்தே அபாரமாக செயல்பட்ட ஆஸ்திரேலிய அணி இந்தியாவை அனைத்து சந்தர்ப்பங்களிலும் ஆதிக்கம் செலுத்தியது.மூன்றே நாளில் முடிந்த இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது.

அதன் பின்னர் நான்காவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி தற்போது அஹமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி 480 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கவாஜா 180 ரன்கள் குவித்தார். பின்னர் ஆடிய இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 571 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த டாப் பேட்ஸ்மேன்கள்..  இந்திய அணி படைத்த அரிய சாதனை என்ன தெரியுமா ?

இந்திய அணியில் அதிகபட்சமாக இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலி 186 ரன்களும், சுப்மன் கில் 128 ரன்களும் குவித்தனர். மேலும், இந்த போட்டியில் இந்திய அணி ஒரு அரியசாதனை ஒன்றையும் படைத்துள்ளது. அதாவது, இந்திய அணி முதல் விக்கெட்டுக்கு 74 ரன்கள் பார்ட்னெர்ஷிப்பும், இரண்டாவது விக்கெட்டுக்கு 114 ரன்களும், மூன்றாவது விக்கெட்டுக்கு 58 ரன்களும், நான்காவது விக்கெட்டுக்கு 64 ரன்களும், ஐந்தாவது விக்கெட்டுக்கு 84 ரன்களும், ஆறாவது விக்கெட்டுக்கு 66 ரன்களும் குவித்துள்ளது.

இதன் மூலம் ர்வதேச டெஸ்டில் முதல் 6 விக்கெட்டுகள் வரை விளையாடிய வீரர்கள் பார்ட்னர்ஷிப்பில் 50 ரன்களுக்கு மேல் குவித்து அரிய சாதனை ஒன்றை படைத்துள்ளனர். இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ்க்கு பிறகு ஆடிய ஆஸ்திரேலிய அணி நான்காவது நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 3 ரன்கள் குவித்துள்ளனர். நாளை இறுதி நாள் போட்டி நடைபெறவுள்ளது.

banner

Related Stories

Related Stories