விளையாட்டு

ISL: சுனில் சேத்ரியின் சர்ச்சை கோல்.. போட்டியிலிருந்து பாதியிலேயே வெளியேறிய கேரள அணியினர்.. நடந்தது என்ன?

கேரளா பிளாஸ்ட்டர்ஸ் அணியின் பயிற்சியாளர் தங்களது அணி வீரர்களை போட்டியிலிருந்து விலகுமாறு கூறியதை அடுத்து அந்த வீரர்கள் மைதானத்தில் இருந்து வெளியேறியது பரபரப்பை ஏற்படுத்தியது.

ISL: சுனில் சேத்ரியின் சர்ச்சை கோல்.. போட்டியிலிருந்து பாதியிலேயே வெளியேறிய கேரள அணியினர்.. நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இந்தியாவின் உயரிய கால்பந்து தொடரான ஐ.எஸ்.எல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. குரூப் பிரிவில் ஆரம்பத்தில் இருந்தே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மும்பை சிட்டி அணி 46 புள்ளிகளுடன் குரூப் பிரிவுக்கான கவசத்தை வெல்ல அடுத்ததாக நாக் அவுட் சுற்று போட்டிகள் நடைபெறவுள்ளது.

குரூப் பிரிவில் முதல் இரண்டு இரண்டளை பிடித்த மும்பை சிட்டி , ஹைதராபாத் அணிகள் நேரடியாக அரையிறுதிக்கு முன்னேற, அடுத்தடுத்த இடங்களை பிடித்த, மோஹன் பகான், பெங்களூரு, கேரளா பிளாஸ்ட்டர்ஸ், ஒடிசா ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றில் விளையாடி வருகிறது.

ISL: சுனில் சேத்ரியின் சர்ச்சை கோல்.. போட்டியிலிருந்து பாதியிலேயே வெளியேறிய கேரள அணியினர்.. நடந்தது என்ன?

இதில் நேற்று நடைபெற்ற முதல் பிளே ஆப் சுற்றில் பெங்களூரு மற்றும் கேரளா பிளாஸ்ட்டர்ஸ் அணிகள் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியின் முதல் 90 நிமிடங்களில் இரு அணிகளும் கோல் அடிக்காத நிலையில், ஆட்டம் கூடுதல் நேரத்துக்கு சென்றது.

கூடுதல் நேரத்தின் 96 வது நிமிடத்தில் பெங்களூர் அணிக்கு பிரி கீக் வாய்ப்பு ஒன்று கிடைத்தது. இதனால் கேரளா பிளாஸ்ட்டர்ஸ் அணி வீரர்கள் பிரி கீக் வாய்ப்புக்காக தாயாராகிக்கொண்டிருந்த நிலையில், அதற்குள் பெங்களூர் அணியின் நட்சத்திர வீரர் சுனில்ஷேத்ரி கோல் போஸ்ட்டை நோக்கி பந்தை உதைத்து கோலாக்கி அணியை முன்னிலை பெற்று தந்தார்.

ஆனால், நடுவர் விசில் அடிக்கும் முன்னரே சுனில்ஷேத்ரி கோல் போஸ்ட்டை நோக்கி பந்தை உதைத்ததாகவும், தங்கள் கோல் கீப்பர் உள்ளிட்ட யாரும் இதற்கு தயாராக இல்லாத நிலையில், இந்த கோலை ஏற்க கூடாது என கேரளா வீரர்கள் நடுவரிடம் வாதிட்டனர். ஆனால் நடுவர் அதை ஏற்றுக்கொள்ளாமல் அதை கோல் என அறிவித்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த கேரளா பிளாஸ்ட்டர்ஸ் அணியின் பயிற்சியாளர் தங்களது அணி வீரர்களை போட்டியிலிருந்து விலகுமாறு கூறியதை அடுத்து கேரள வீரர்கள் மைதானத்தில் இருந்து வெளியேறினர். ஆனால், நடுவர் தனது முடிவில் உறுதியாக இருந்த நிலையில், கேரளா அணி போட்டியில் இருந்து விலகிக்கொள்வதாக அறிவித்தது. ஆட்டம் முடிய இன்னும் 24 நிமிடங்கள் இருந்த நிலையில், அந்த அணி போட்டியிலிருந்து வெளியேறுவதாக அறிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதன் காரணமாக பெங்களூரு அணி 1-0 என்ற கணக்கில் போட்டியில் வெற்றிபெற்று அரையிறுதிக்கு முன்னேறியதாக அறிவிக்கப்பட்டது. இந்த கோல் சரியா தவறா என்ற விவாதம் ஒருபுறம் சமூகவலைத்தளங்களில் ஓடிக்கொண்டிருந்த போட்டியை நடுவில் புறக்கணித்த கேரளா அணி மீதும் அதன் பயிற்சியாளர் மீதும் ஐ.எஸ்.எல் நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் என கூறப்படுகிறது.

banner

Related Stories

Related Stories