விளையாட்டு

போட்டியை மூன்று நாளில் முடிக்க காரணம் என்ன ? -ரசிகர்களை கடுப்பேற்றும் விதமாக பதில் சொன்ன ரோகித் சர்மா !

முதல் இன்னிங்ஸில் முறையாக பேட் செய்திருந்தால் சில விஷயங்கள் எங்களுக்கு சாதகமாக இந்தப் போட்டியில் மாறி இருக்கும் என இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார்.

போட்டியை மூன்று நாளில் முடிக்க காரணம் என்ன ? -ரசிகர்களை கடுப்பேற்றும் விதமாக பதில் சொன்ன ரோகித் சர்மா !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் மோதும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரின் முதல் போட்டி நாக்பூரில் நடைபெற்றது. இதில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

அதைத் தொடர்ந்து இரண்டாவது டெஸ்ட் போட்டி டெல்லியில் தொடங்கியது. இந்த போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று பார்டர் கவாஸ்கர் டிராபியை தக்கவைத்தது. மேலும் 4 போட்டிகள் கொண்ட தொடரிலும் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது

போட்டியை மூன்று நாளில் முடிக்க காரணம் என்ன ? -ரசிகர்களை கடுப்பேற்றும் விதமாக பதில் சொன்ன ரோகித் சர்மா !

அதனைத் தொடர்ந்து, மூன்றாவது டெஸ்ட் போட்டி இந்தூரில் நடைபெற்றது. தோல்வியின்பிடியில் இருந்து மீண்டு இந்த டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் இருந்தே அபாரமாக செயல்பட்ட ஆஸ்திரேலிய அணி இந்தியாவை அனைத்து சந்தர்ப்பங்களிலும் ஆதிக்கம் செலுத்தியது.

மூன்றே நாளில் முடிந்த இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது. இந்த போட்டியில் அபாரமாக பந்துவீசிய ஆஸ்திரேலிய வீரர் நாதன் லியோன் ஆட்டநாயகன் விருது பெற்றார். இதன் மூலம் இந்த தொடரை இழக்காமல் ஆஸ்திரேலிய அணி போட்டியில் தொடருகிறது. மேலும், டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு அதிகாரபூர்வமாக தகுதி பெற்றுள்ளது.

போட்டியை மூன்று நாளில் முடிக்க காரணம் என்ன ? -ரசிகர்களை கடுப்பேற்றும் விதமாக பதில் சொன்ன ரோகித் சர்மா !

இந்த நிலையில், இந்த போட்டி முடிந்தபின்னர் பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, "முதல் இன்னிங்ஸில் முறையாக பேட் செய்திருந்தால் சில விஷயங்கள் எங்களுக்கு சாதகமாக இந்தப் போட்டியில் மாறி இருக்கும்.இப்போதைக்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி குறித்து நாங்கள் யோசிக்கவில்லை. எங்கள் எண்ணமெல்லாம் அகமதாபாத் டெஸ்டில் என்ன செய்யலாம் என்பதுதான்.

சவாலான ஆடுகளங்களில் விளையாடும்போது நமக்கு துணிச்சல் வேண்டும். இந்தப் போட்டியில் நாதன் லயன் பந்து வீச்சை துணிச்சலுடன் எதிர்கொள்ளவில்லை என நினைக்கிறேன். இந்தப் போட்டியில் எங்கள் திட்டங்கள் கைகூடவில்லை.டெஸ்ட் போட்டிகள் 5 நாட்கள் வரை நீடிக்க வீரர்கள் சிறப்பாக விளையாட வேண்டும். தென்னாப்பிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி மூன்று நாட்கள்தான் நடந்தது. பாகிஸ்தானில் ஐந்து நாட்கள் நடைபெறும் டெஸ்ட் போட்டிகள் சலிப்பை தருவதாக மக்கள் சொல்லியுள்ளனர். நாங்கள் சுவாரஸ்யம் ஆக்குகிறோம்" என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories