விளையாட்டு

"விபத்திற்குப் பிறகு இந்த சின்ன செயல்கூட எனக்கு சாதனையாக தெரிகிறது" - ரிஷப் பண்ட் நெகிழ்ச்சி !

விபத்திற்குப் பிறகு தற்போது என்னால் பல் துலக்க முடிவதையே நான் மகிழ்ச்சியாக கருதுகிறேன் என விபத்தில் சிக்கிய இந்திய வீரர் ரிஷப் பண்ட் கூறியுள்ளார்.

"விபத்திற்குப் பிறகு இந்த சின்ன செயல்கூட எனக்கு சாதனையாக தெரிகிறது" - ரிஷப் பண்ட் நெகிழ்ச்சி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த இளம் வீரர் ரிஷப் பண்ட் இந்திய அணியில் விக்கெட் கீப்பராகவும், பேட்ஸ்மேனாகவும் இருந்து வருகிறார். இவர் கடந்த டிசம்பர் 30ம் தேதி கார் விபத்தில் சிக்கினார். தனது வீட்டிற்கு காரில் சென்றுகொண்டிருந்தபோது, நிலைதடுமாறி சாலையிலிருந்த டிவைடரில் கார் மோதியது. இதனால் காரும் உடனே தீப்பற்றி எரிந்தது.

இதனை கண்ட பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறைக்கும் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் விரைந்து வந்த அவர்கள் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர்.

"விபத்திற்குப் பிறகு இந்த சின்ன செயல்கூட எனக்கு சாதனையாக தெரிகிறது" - ரிஷப் பண்ட் நெகிழ்ச்சி !

விபத்தில் படுகாயமடைந்த ரிஷப், டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் மும்பையில் உள்ள கோகிலாபென் மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக கொண்டுசெல்லப்பட்டார். அங்கு முழங்காலில் பாதிக்கப்பட்டுள்ள தசைநார் கிழிப்பிற்கும் 'ஆப்பரேஷன்' செய்யப்பட்டது.இதன் காரணமாக இந்த காயத்தில் இருந்து மீண்டு இவர் பயிற்சியில் ஈடுபட சுமார் ஒரு ஆண்டு தேவைப்படும் என கூறப்படுகிறது.

தற்போது கொஞ்சம் கொஞ்சமாக உடல்நலம் பெற்றுவரும் ரிஷப் பண்ட் தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் பேசியுள்ள அவர், நான் இப்போதும் நன்றாக இருக்கிறேன். என் உடல் நலத்தில் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற்றம் ஏற்படுகிறது. விபத்துக்கு பிறகு வாழ்க்கை மீதான கண்ணோட்டமே எனக்கு மாறிவிட்டது. உயிரோடு இருப்பதே பெரியது என்ற எண்ணம் தான் தற்போது மேலோங்கி இருக்கிறது. இதனால் என் வாழ்க்கையில் நான் இப்போது செய்யும் சின்ன சின்ன விஷயம் கூட எனக்கு பெரிய சாதனையாக தெரிகிறது.

"விபத்திற்குப் பிறகு இந்த சின்ன செயல்கூட எனக்கு சாதனையாக தெரிகிறது" - ரிஷப் பண்ட் நெகிழ்ச்சி !

விபத்திற்குப் பிறகு தற்போது என்னால் பல் துலக்க முடிவதையே நான் மகிழ்ச்சியாக கருதுகிறேன்.தற்போது மருத்துவ நிபுணர்கள் கொடுத்துள்ள அட்டவணைப்படி தான் என் வாழ்க்கையை நகர்த்தி வருகிறேன்.காலையில் எழுந்து முதலில் பிசியோதெரபி பயிற்சியை செய்கிறேன்.அதன் பிறகு கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொண்டு பிறகு மீண்டும் உடற்பயிற்சி செய்ய தொடங்குகிறேன்.

என்னால் எவ்வளவு வலியை பொறுத்துக் கொள்ள முடியும் என்பதை பொறுத்து இந்த பயிற்சி அமையும். எனக்காக இவ்வளவு பேர் பிரார்த்தனை செய்கிறார்கள் என்பதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன். என்னுடைய ரசிகர்கள் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணிக்கும் டெல்லி கேப்பிட்டல் அணிக்கும் ஆதரவளியுங்கள். உங்களை மீண்டும் நான் வந்து சந்திக்கிறேன்" என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories