விளையாட்டு

இது ஸ்கோரா இல்லை செல்போன் நம்பரா என்றே தெரியவில்லை -ஆஸ்திரேலிய அணியை விமர்சித்த முன்னாள் பாக். வீரர் !

ஆஸ்திரேலியா வீரர்களுக்கு எப்படி விளையாடுவது என்றே தெரியவில்லை என பாகிஸ்தான் முன்னாள் டேனிஷ் கனேரியா விமர்சித்துள்ளார்.

இது ஸ்கோரா இல்லை செல்போன் நம்பரா என்றே தெரியவில்லை -ஆஸ்திரேலிய அணியை விமர்சித்த முன்னாள் பாக். வீரர் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

புகழ்பெற்ற பழமைவாய்ந்த ஆஷஸ் தொடருக்கு பின்னர் முக்கியத்துவம் வாய்ந்த டெஸ்ட் தொடராக ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் மோதும் பார்டர் கவாஸ்கர் டிராபி மாறியுள்ளதால் இது கிரிக்கெட் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.

கடைசியாக ஆஸ்திரேலியாவில் நடந்த பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரை 2-1 என்ற கணக்கில் வென்று கோப்பையை தக்கவைத்துக்கொண்டது. மேலும், கடைசியாக நடந்த 3 தொடர்களிலும் இந்த கோப்பையை இந்திய அணியே வென்றுள்ளது. இதன் காரணமாக இந்த முறை இந்த தொடரை வென்று இந்திய அணிக்கு பதிலடி கொடுக்க ஆஸ்திரேலிய அணி தீவிரம் காட்டி வருகிறது.

இது ஸ்கோரா இல்லை செல்போன் நம்பரா என்றே தெரியவில்லை -ஆஸ்திரேலிய அணியை விமர்சித்த முன்னாள் பாக். வீரர் !

ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் மோதும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரின் முதல் போட்டி நாக்பூரில் நடைபெற்றது. இதில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. அதைத் தொடர்ந்து இரண்டாவது டெஸ்ட் போட்டி டெல்லியில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணி ஒரு கட்டத்தில் 91-1 என்ற நல்ல நிலையில் இருந்தது.

ஆனால், ஒரே ஓவரில் இந்திய வீரர் அஸ்வின் உலகின் நம்பர் 1 வீரர் லபுசேனையும் உலகின் நம்பர் 2 வீரர் ஸ்மித்தையும் அடுத்தடுத்து வீழ்த்தி ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தினார். எனினும் ஆஸ்திரேலிய அணியில் கவாஜா மற்றும் ஹன்ட்ஸ்காப் ஆகியோர் சிறப்பாக ஆடியதால் அந்த அணி 263 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய தரப்பில் சமி 4 விக்கெட்டுகளையும், அஸ்வின், ஜடேஜா தலா 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இது ஸ்கோரா இல்லை செல்போன் நம்பரா என்றே தெரியவில்லை -ஆஸ்திரேலிய அணியை விமர்சித்த முன்னாள் பாக். வீரர் !

பின்னர் ஆடிய இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 137-7 என்ற பரிதாப நிலையில் இந்திய அணி இருந்தது. ஆனால், பின்னர் ஜோடி சேர்ந்த அக்சர் படேல் -அஸ்வின் இணை 114 ரன்கள் குவித்து இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டது. இறுதியில் இந்திய அணி 262 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.பின்னர் இரண்டாம் இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணி வெறும் 114 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.ஜடேஜா 7 விக்கெட்டுகளும், அஸ்வின் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர்.இந்த போட்டியில் ஜடேஜாவுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

இந்த நிலையில் ஆஸ்திரேலியா வீரர்களுக்கு எப்படி விளையாடுவது என்றே தெரியவில்லை என பாகிஸ்தான் முன்னாள் டேனிஷ் கனேரியா விமர்சித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், "ஆஸ்திரேலியா வீரர்கள் அனைவரும் ஸ்வீப் ஷாட் விளையாட முயற்சி செய்து ஆட்டம் இழந்தார்கள். கம்மின்ஸ் ஒரு கேப்டனாக இப்படித்தான் விளையாடி ஆட்டம் இழக்க வேண்டுமா? அவர் களத்திற்குள் வந்து முதல் பந்திலையே ஸ்லாக் ஸ்வீப் விளையாடி ஆட்டம் இழந்தார். ஆடுகளத்தில் பந்து நன்றாக திரும்பியதைக் கேள்விப்பட்டு பயந்து போய்விட்டார் என்று நினைக்கிறேன். இவர் செய்ததை இந்தியா அல்லது பாகிஸ்தான் கேப்டன் செய்திருந்தால் அவர் நேராக நாடு திரும்ப வேண்டியதுதான்.

இது ஸ்கோரா இல்லை செல்போன் நம்பரா என்றே தெரியவில்லை -ஆஸ்திரேலிய அணியை விமர்சித்த முன்னாள் பாக். வீரர் !

இந்தத் தோல்வி ஆஸ்திரேலியாவை அழ வைக்கும். அவர்களை மீண்டு வர விடாது. ஒரு கட்டத்தில் அவர்கள் இந்திய அணியை விட மேலாதிக்கம் செலுத்தினார்கள். இருப்பினும் இந்திய சுழற் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களிடம் பதில் இல்லை. அதனால் அவர்கள் கண்டபடி ஸ்வீப் விளையாடி ஆட்டம் இழந்தார்கள். இந்திய சுழற்பந்துவீச்சாளர்கள் இருவரும் அற்புதமாக பந்து வீசினார்கள். ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் கார்டை பார்க்கும் பொழுது யாரோ ஒருவரின் செல்போன் நம்பர் போல் இருந்தது" என விமர்சித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories