விளையாட்டு

ஒரே ஓவரில் மாறிய ஆட்டம்.. உலகின் சிறந்த இரு வீரர்களை அடுத்தடுத்து தூக்கிய அஸ்வின் !

ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 263 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

ஒரே ஓவரில் மாறிய ஆட்டம்.. உலகின் சிறந்த இரு வீரர்களை அடுத்தடுத்து தூக்கிய அஸ்வின் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

புகழ்பெற்ற பழமைவாய்ந்த ஆஷஸ் தொடருக்கு பின்னர் முக்கியத்துவம் வாய்ந்த டெஸ்ட் தொடராக ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் மோதும் பார்டர் கவாஸ்கர் டிராபி மாறியுள்ளதால் இது கிரிக்கெட் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.

கடைசியாக ஆஸ்திரேலியாவில் நடந்த பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரை 2-1 என்ற கணக்கில் வென்று கோப்பையை தக்கவைத்துக்கொண்டது. மேலும், கடைசியாக நடந்த 3 தொடர்களிலும் இந்த கோப்பையை இந்திய அணியே வென்றுள்ளது. இதன் காரணமாக இந்த முறை இந்த தொடரை வென்று இந்திய அணிக்கு பதிலடி கொடுக்க ஆஸ்திரேலிய அணி தீவிரம் காட்டி வருகிறது.

ஒரே ஓவரில் மாறிய ஆட்டம்.. உலகின் சிறந்த இரு வீரர்களை அடுத்தடுத்து தூக்கிய அஸ்வின் !

ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் மோதும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரின் முதல் போட்டி நாக்பூரில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் 177 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

அதன்பின்னர் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 400 ரன்கள் குவித்தது. இந்திய அணி சார்பில் ரோஹித் சர்மா 120 ரன்கள், அக்சர் படேல் 84, ரவீந்திர ஜடேஜா 70 ரன்கள் குவித்தனர். பின்னர் தனது இரண்டாம் இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி அஸ்வினின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததோடு இரண்டாம் இன்னிங்ஸில் 91 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்து.

ஒரே ஓவரில் மாறிய ஆட்டம்.. உலகின் சிறந்த இரு வீரர்களை அடுத்தடுத்து தூக்கிய அஸ்வின் !

இந்த நிலையில் இன்று இரண்டாவது டெஸ்ட் போட்டி டெல்லியில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணி ஒரு கட்டத்தில் 91-1 என்ற நல்ல நிலையில் இருந்தது.

ஆனால், ஒரே ஓவரில் இந்திய வீரர் அஸ்வின் உலகின் நம்பர் 1 வீரர் லபுசேனையும் உலகின் நம்பர் 2 வீரர் ஸ்மித்தையும் அடுத்தடுத்து வீழ்த்தி ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தினார். எனினும் ஆஸ்திரேலிய அணியில் கவாஜா மற்றும் ஹன்ட்ஸ்காப் ஆகியோர் சிறப்பாக ஆடியதால் அந்த அணி 263 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய தரப்பில் சமி 4 விக்கெட்டுகளையும், அஸ்வின், ஜடேஜா தலா 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

banner

Related Stories

Related Stories