விளையாட்டு

அஸ்வினுக்கு எப்போதும் விக்கெட் கிடைக்க காரணம் என்ன தெரியுமா ? -முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் விளக்கம் !

அஸ்வின் எப்போதும் சிறந்த ஆப் ஸ்பின் லெஜன்ட் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.

அஸ்வினுக்கு எப்போதும் விக்கெட் கிடைக்க காரணம் என்ன தெரியுமா ?  -முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் விளக்கம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

புகழ்பெற்ற பழமைவாய்ந்த ஆஷஸ் தொடருக்கு பின்னர் முக்கியத்துவம் வாய்ந்த டெஸ்ட் தொடராக ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் மோதும் பார்டர் கவாஸ்கர் டிராபி மாறியுள்ளதால் இது கிரிக்கெட் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.

கடைசியாக ஆஸ்திரேலியாவில் நடந்த பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரை 2-1 என்ற கணக்கில் வென்று கோப்பையை தக்கவைத்துக்கொண்டது. மேலும், கடைசியாக நடந்த 3 தொடர்களிலும் இந்த கோப்பையை இந்திய அணியே வென்றுள்ளது. இதன் காரணமாக இந்த முறை இந்த தொடரை வென்று இந்திய அணிக்கு பதிலடி கொடுக்க ஆஸ்திரேலிய அணி தீவிரம் காட்டி வருகிறது.

அஸ்வினுக்கு எப்போதும் விக்கெட் கிடைக்க காரணம் என்ன தெரியுமா ?  -முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் விளக்கம் !

ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் மோதும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரின் முதல் போட்டி நாக்பூரில் நடைபெற்றது. இதில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. அடுத்ததாக இரண்டாவது டெஸ்ட் போட்டி டெல்லியில் வரும் 17-ம் தேதி தொடங்கவுள்ளது.

இந்த டெஸ்ட் தொடர் தொடங்கும் முன்னரே சுழலுக்கு ஏற்ற இந்திய மைதானங்களை போலவே சிட்னியில் மைதானத்தை தயாரித்து ஆஸ்திரேலியா அணி பயிற்சியில் ஈடுபட்டது. இந்தியாவுக்கு வந்த பின்னரும் சுழல் பந்துவீச்சுக்கு தயாராகும் வகையில் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறது. மேலும், அந்த அணியின் கவனம் முழுவதும் இந்திய அணியின் சுழல்பந்துவீச்சாளர் அஸ்வினின் மீதே இருக்கிறது என்பது அந்த அணியின் பேச்சின் மூலம் அனைவர்க்கும் தெரிந்தது.

அஸ்வினுக்கு எப்போதும் விக்கெட் கிடைக்க காரணம் என்ன தெரியுமா ?  -முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் விளக்கம் !

இந்திய மைதானத்தில் அஸ்வின் அபாயகரமான வீரர் என்பதால் அவரை சமாளிக்க அவரை போலவே பந்துவீசும் பரோடா ரஞ்சி அணிக்கு ஆடும் 21 வயது நிரம்பிய மகேஷ் பிதியா என்ற இளம் ஆஃப் ஸ்பின்னரை வரவழைத்து பந்துவீச்சு பயிற்சி எடுத்தது. எனினும் போட்டியில் அஸ்வினின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஆஸ்திரேலிய வீரர்கள் அடுத்தடுத்து தங்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். நாக்பூர் டெஸ்ட் போட்டியில் மட்டும் அஸ்வின் 8 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

இந்த நிலையில், அஸ்வின் எப்போதும் சிறந்த ஆப் ஸ்பின் லெஜன்ட் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், நான் எப்போதும் அஸ்வினை சிறந்த ஆப் ஸ்பின் லெஜன்ட் என்று கருதுகிறேன். ஆஸ்திரேலியாவில் நாதன் லயன் வெற்றிகரமாக இருந்தாலும், அஸ்வின் ஒரு பந்துவீச்சாளராக ஒரு பேட்ஸ்மேனை முழுமையாக படித்து, ஒரு பேட்ஸ்மேனுக்கு எங்கெங்கு ஃபீல்டிங் இருக்க வேண்டும் என்கின்ற அளவுக்கு தெளிவானவர்.

அஸ்வினுக்கு எப்போதும் விக்கெட் கிடைக்க காரணம் என்ன தெரியுமா ?  -முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் விளக்கம் !

அதற்கு உதாரணமாக கவாஜாவின் விக்கெட்டை சொல்லலாம், அஸ்வின் பந்தில் உஸ்மான் கவாஜா பவுண்டரி அடித்தாலும் மீண்டும் அப்படி ஒரு பந்தை வீசி அவரின் விக்கெட்டை அஸ்வின் வீழ்த்தினார். ஒரு விக்கெட்டை பெற வேண்டுமென்றால் முதலில் ரன்னையும் தர வேண்டும். கவாஜாவுக்கு முதலில் வீசிய பந்து ஆஃப் வாலி. ஆனால் இரண்டாவது வீசிய பந்து அப்படி கிடையாது ஆனால் அப்படி என்பது போல தெரிந்த பந்து. அந்த பந்தை கொஞ்சம் தள்ளி வீச அஸ்வினுக்கு விக்கெட் கிடைக்கிறது. இது போன்ற காரணத்தால்தான் அஸ்வின் விக்கெட்டுகளை அள்ளுகிறார்" என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories