விளையாட்டு

”இப்போது தெரிகிறதா இவருக்கு ஏன் வாய்ப்பளித்தோம் என்று” -விமர்சகர்களுக்கு இந்திய அணி பயிற்சியாளர் பதில் !

குல்தீப் யாதவிற்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு அக்சர் படேலுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது ஏன் என்பது குறித்து இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் பதிலளித்துள்ளார்.

”இப்போது தெரிகிறதா இவருக்கு ஏன் வாய்ப்பளித்தோம் என்று” -விமர்சகர்களுக்கு இந்திய அணி பயிற்சியாளர் பதில் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

புகழ்பெற்ற பழமைவாய்ந்த ஆஷஸ் தொடருக்கு பின்னர் முக்கியத்துவம் வாய்ந்த டெஸ்ட் தொடராக ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் மோதும் பார்டர் கவாஸ்கர் டிராபி மாறியுள்ளதால் இது கிரிக்கெட் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.

கடைசியாக ஆஸ்திரேலியாவில் நடந்த பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரை 2-1 என்ற கணக்கில் வென்று கோப்பையை தக்கவைத்துக்கொண்டது. மேலும், கடைசியாக நடந்த 3 தொடர்களிலும் இந்த கோப்பையை இந்திய அணியே வென்றுள்ளது. இதன் காரணமாக இந்த முறை இந்த தொடரை வென்று இந்திய அணிக்கு பதிலடி கொடுக்க ஆஸ்திரேலிய அணி தீவிரம் காட்டி வருகிறது.

”இப்போது தெரிகிறதா இவருக்கு ஏன் வாய்ப்பளித்தோம் என்று” -விமர்சகர்களுக்கு இந்திய அணி பயிற்சியாளர் பதில் !

ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் மோதும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரின் முதல் போட்டி நாக்பூரில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் 177 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி தரப்பில் ஜடேஜா 5 விக்கெட்டுகளும், அஸ்வின் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தி அசத்தினர்.

அதன்பின்னர் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 400 ரன்கள் குவித்தது. இந்திய அணி சார்பில் ரோஹித் சர்மா 120 ரன்கள், அக்சர் படேல் 84, ரவீந்திர ஜடேஜா 70 ரன்கள் குவித்தனர். ஆஸ்திரேலிய அணி சார்பில் அறிமுக பந்துவீச்சாளர் முர்பி 7 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

”இப்போது தெரிகிறதா இவருக்கு ஏன் வாய்ப்பளித்தோம் என்று” -விமர்சகர்களுக்கு இந்திய அணி பயிற்சியாளர் பதில் !

பின்னர் தனது இரண்டாம் இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி அஸ்வினின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. பின்னர் ஜடேஜா,அக்சர் படேல், சமி ஆகியோரும் விக்கெட் வேட்டையை நடத்த இரண்டாம் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா அணி 91 ரன களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்து.

இந்த போட்டி தொடங்கும் முன்னல் அணியில் இடம்பெறபோவது அக்சர் படேலா அல்லது குல்திப் யாதவா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் இந்திய அணியில் அக்சர் படேல் இடம்பிடித்தார். அப்போது சிலர் குல்திப் யாதவ் தற்போது சிறந்த பார்ம்மில் இருக்கிறார். அதனால் அவருக்குதான் அணியில் இடம் வழங்கப்பட்டிருக்க வேண்டும் என கூறி அணி தேர்வை விமர்சித்திருந்தனர். ஆனால் போட்டியில் முக்கிய கட்டத்தில் களமிறங்கிய அக்சர் படேல் 84 ரன்கள் குவித்து இந்திய அணி 400 ரன்களை எட்ட உதவினார். இதன் மூலம் தனது தேர்வு மீது வைக்கப்பட்ட விமரசனங்களுக்கு அக்சர் படேல் பதிலளித்துள்ளார்.

”இப்போது தெரிகிறதா இவருக்கு ஏன் வாய்ப்பளித்தோம் என்று” -விமர்சகர்களுக்கு இந்திய அணி பயிற்சியாளர் பதில் !

இந்த நிலையில், குல்தீப் யாதவிற்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு அக்சர் படேலுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது ஏன் என்பது குறித்து இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் பதிலளித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், ” இந்த போட்டியில் மூன்று ஸ்பின்னர்களுடன் விளையாட வேண்டும் என்று முடிவு செய்து யாரை விளையாட வைப்பது என்று யோசித்தபோது அக்சர் பட்டேலின் பேட்டிங் அவருக்கு ஒரு போனஸாக அமைந்தது. இது தவிர அவர் இந்திய மண்ணில் ஆறு முதல் ஏழு போட்டியில் மட்டுமே விளையாடி 40-க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். இதனால் ன்றாக பேட்டிங்கும் செய்து, பந்து வீச்சிலும் சிறப்பாக செயல்பட்டதால் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. தனது வாய்ப்பை நன்றாக பயன்படுத்திய அவர் தனது தேர்வு சரிதான் என்பதை தற்போது அனைவருக்கும் தெரியபடுத்தியுள்ளார்” என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories