விளையாட்டு

”இதை செய்யாவிட்டால் இந்திய அணி நரகத்துக்குத்தான் செல்லும்” -பாகிஸ்தான் முன்னாள் ஜாம்பவான் சாபம் !

பாகிஸ்தான் முன்னால் வீரர் ஜாவெட் மியன்டாட் பாகிஸ்தானுக்கு இந்திய அணி வரவில்லை என்றால் நரகத்திற்கு தான் அவர்கள் செல்வார்கள் என காட்டமாக கூறியுள்ளார்.

”இதை செய்யாவிட்டால் இந்திய அணி நரகத்துக்குத்தான் செல்லும்” -பாகிஸ்தான் முன்னாள் ஜாம்பவான் சாபம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கடந்த 2008-ம் ஆண்டு மும்பை தாக்குதலுக்கு பின்னர் இந்தியா பாகிஸ்தான் இடையே மோதல்போக்கு நிலவி வருகிறது. அதன்பின்னர் இந்திய அணி பாகிஸ்தான் சென்று விளையாட தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது. அதேபோல அரசியல் காரணங்களுக்காக இரு நாடுகள் இடையே எந்த தொடரும் நடைபெறவில்லை. ஐசிசி நடத்தும் தொடரில் மட்டுமே இரு அணிகளும் விளையாடி வருகிறது.

சமீபத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தும் ஆசிய கோப்பை தொடர் நடந்து முடிந்தது. அதைத் தொடர்ந்து அடுத்த ஆசிய கோப்பை தொடர் பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது. அதில் இந்தியா கலந்துகொள்ளுமா என்ற மிகப்பெரிய கேள்வி ஒன்று நிலவு வந்தது.

”இதை செய்யாவிட்டால் இந்திய அணி நரகத்துக்குத்தான் செல்லும்” -பாகிஸ்தான் முன்னாள் ஜாம்பவான் சாபம் !

இந்த சூழலில் 2022-2023 ஆம் ஆண்டிற்கான பிசிசிஐ பொதுக்குழு கூட்டத்தில் அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற உள்ள ஆசிய கோப்பை தொடரை வேறு பொதுவான இடத்திற்கு மாற்ற சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி-யிடம் கோரிக்கை வைக்க முடிவு செய்யப்பட்டது. அந்த கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்றால் அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறும் தொடரில் இந்திய அணி பங்கேற்க வேண்டாம் எனவும் முடிவு செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், " ஆசிய கோப்பை தொடரை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டுமென ஒருதலைபட்சமாக பிசிசிஐ கருத்து தெரிவித்துள்ளது. 2023 ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை மற்றும் 2024-2031 சுழற்சியில் இந்தியாவில் நடைபெறவிருக்கும் ஐசிசி தொடர்களின் பாகிஸ்தான் பங்கேற்பதை இக்கருத்துகள் பாதிக்கலாம்." என தெரிவிக்கப்பட்டது.

”இதை செய்யாவிட்டால் இந்திய அணி நரகத்துக்குத்தான் செல்லும்” -பாகிஸ்தான் முன்னாள் ஜாம்பவான் சாபம் !

அதோடு அப்போதைய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ரமீஸ் ராஜா ஆசிய கோப்பைக்கு இந்திய அணி பாகிஸ்தானுக்கு வரவில்லை என்றால்,இந்தியாவில் நடைபெறூம் உலகக் கோப்பைக்கு பாகிஸ்தான் அணி இந்தியாவுக்குப் பயணம் செய்ய மாட்டார்கள் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.

இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் முன்னால் வீரர் ஜாவெட் மியன்டாட் பாகிஸ்தானுக்கு இந்திய அணி வரவில்லை என்றால் நரகத்திற்கு தான் அவர்கள் செல்வார்கள் என காட்டமாக கூறியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், ”பாகிஸ்தான் மண்ணில் விளையாடுவதற்கு இந்தியா ஏன் இவ்வளவு பயப்படுகிறது? பாகிஸ்தானிடம் தோற்றால் இந்திய ரசிகர்கள் எளிதில் விட்டுவிட மாட்டார்கள் என்பது பிசிசிஐ-க்கு தெரிவதனால்தான் இப்படி பயப்படுகிறார்கள்.

”இதை செய்யாவிட்டால் இந்திய அணி நரகத்துக்குத்தான் செல்லும்” -பாகிஸ்தான் முன்னாள் ஜாம்பவான் சாபம் !

பாகிஸ்தானுக்கு இந்திய அணி வரவில்லை என்றால் நரகத்திற்குதான் அவர்கள் செல்வார்கள்.நாங்கள் எதற்காகவும் பயப்பட மாட்டோம். இந்தியாவை நம்பி நாங்கள் இல்லை. எங்களிடம் போட்டியை நடத்தும் உரிமை உள்ளது. அனைத்து வாரியங்களையும் கட்டுப்படுத்துவதற்கு தான் ஐசிசி உள்ளது. எனவே இந்த விவகாரத்தில் ஐசிசி தலையிட்டே தீர வேண்டும். ஐசிசியில் அனைவருக்கும் ஒரே மாதிரியான விதிமுறைகள் தான். ஆனால் இந்தியா இதுபோன்று வரமுடியாது எனக் கூறிக்கொண்டு இருந்தால் இந்தியாவை ஐசிசி கவுன்சிலில் இருந்தே நீக்கிவிட வேண்டும்” என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories