விளையாட்டு

"டி20க்கு தகுதி இல்லாதது" - போட்டியில் வென்றாலும் மைதானத்தை காட்டமாக விமர்சித்த கேப்டன் ஹர்திக் பாண்டியா!

நியூஸிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டி நடைபெற்ற லக்னோ மைதானம் டி20 போட்டிக்கு உகந்தது அல்ல என இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா விமர்சித்துள்ளார்.

"டி20க்கு தகுதி இல்லாதது" - போட்டியில் வென்றாலும் மைதானத்தை காட்டமாக விமர்சித்த கேப்டன் ஹர்திக் பாண்டியா!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

நியூஸிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. இந்த போட்டியில் முதலில் ஆடிய நியூஸிலாந்து அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய இந்திய அணி தொடக்கத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

பின்னர் சூரியகுமார் கேப்டன் ஹர்திக் பாண்டியா ஆகியோர் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த வீரர்களில் வாஷிங்டன் சுந்தர் மட்டுமே இறுதிவரை போராடி அரைசதம் அடித்து கடைசி ஒவரில் ஆட்டமிழந்தார். இறுதியில் இந்திய அணி 155 ரன்கள் மட்டுமே குடித்து தோல்வியைத் தழுவியது.

"டி20க்கு தகுதி இல்லாதது" - போட்டியில் வென்றாலும் மைதானத்தை காட்டமாக விமர்சித்த கேப்டன் ஹர்திக் பாண்டியா!

அதன்பின்னர் நேற்று நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் முதலில் ஆடிய நியூஸிலாந்து அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 99 ரன்கள் மட்டுமே குவித்தது. 100 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கோடு களமிறங்கிய இந்திய அணி ஆரம்பத்தில் இருந்தே தடுமாறியது.

6 ஒவரில் வெறும் 33 ரன்கள் மட்டுமே எடுத்து இரண்டு விக்கெட்டுகளை இழந்த இந்தியா அணி 50 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது. அப்போது களத்துக்கு வந்த வாஷிங்டன் சுந்தர் சூரியகுமார் யாதவுடன் ஜோடி சேர்ந்து நிதானமாக ரன்களை குவித்து வந்தார்.

"டி20க்கு தகுதி இல்லாதது" - போட்டியில் வென்றாலும் மைதானத்தை காட்டமாக விமர்சித்த கேப்டன் ஹர்திக் பாண்டியா!

அப்போது சூரியகுமார் செய்த தவறால் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் பரிதாபமாக ரன்அவுட் செய்யப்பட்டார். பின்னர் சூரியகுமார் -ஹர்திக் பாண்டியா ஆகியோர் ஜோடி சேர்ந்த அணியை இறுதிஓவரில் வெற்றிபெற வைத்தனர்.

இந்த நிலையில் இந்த போட்டி நடைபெற்ற லக்னோ மைதானம் கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. இந்த போட்டியில் ஒரு சிக்சர் கூட அடிக்கப்படாதா நிலையில், பந்து சுழன்று எழும்பி பேட்டிங் செய்ய கடினமாக இருந்தது. இதனால் பந்துகளை கணிக்க பேட்ஸ்மேன்கள் கடும் சிரமத்தை சந்தித்தனர்.

இந்த மைதானம் குறித்து பேசிய இந்திய அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா, " இந்த மைதானம் டி20 போட்டிக்கு உகந்தது அல்ல, உண்மையைச் சொல்லப் போனால், இது அதிரவைக்கும் விக்கெட்டாக இருந்தது. பந்துகள் அதிகமாகச் சுழன்று வந்ததால் நல்ல வாய்ப்பை மட்டுமே பயன்படுத்திக் கொள்ள வேண்டியிருந்தது" என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories