விளையாட்டு

"மெதுவாக விளையாடியதால் தோல்வி.. தோனியை திட்டிய ரவி சாஸ்திரி..பீல்டிங் பயிற்சியாளரின் கருத்தால் சர்ச்சை !

இந்திய அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி இருந்தபோது மெதுவாக விளையாடியதற்காக தோனியை மறைமுகமாக திட்டியதாக அப்போதைய பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

"மெதுவாக விளையாடியதால் தோல்வி.. தோனியை திட்டிய ரவி சாஸ்திரி..பீல்டிங் பயிற்சியாளரின் கருத்தால் சர்ச்சை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இந்திய கிரிக்கெட் அணியில் சச்சின், கங்குலி-க்கு பிறகு அடுத்து நட்சத்திர வீரராக யார் வருவார்கள் என்ற கேள்வி எழுந்தபோது தனது அமைதியாலும், அதிரடி ஆட்டத்தாலும் அந்த கேள்விகளுக்கு பதில் கொடுத்தவர்தான் எம்.எஸ்.தோனி. இந்திய அணியில் இப்படி ஒரு வீரரா என பலரும் வியந்து பார்க்கும் அளவுக்கு தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய இவர், சச்சின் அவுட் ஆனால், இந்திய அணி தோற்றுவிடும் என கருதப்பட்ட நிலையையம் மாற்றிக்காட்டினார்.

அதனால் எம்.எஸ்.தோனி களத்திலிருந்தால் அது எவ்வளவு பெரிய ரன்னாக இருந்தாலும் அடித்து இந்திய அணிக்கு வெற்றியைத் தேடி கொடுத்துவிடுவார் என்ற நம்பிக்கையைப் இந்திய ரசிகர்களுக்கு விதைத்தார். அதன்பின்னர் இந்திய அணிக்கு கேப்டனாகி முதல் டி20 உலகக்கோப்பை தொடரிலேயே இந்திய அணிக்கு கோப்பையை வென்று கொடுத்தார்.

"மெதுவாக விளையாடியதால் தோல்வி.. தோனியை திட்டிய ரவி சாஸ்திரி..பீல்டிங் பயிற்சியாளரின் கருத்தால் சர்ச்சை !

இவர் கேப்டனாக இருந்து மூன்று விதமான உலகக் கோப்பை வென்று இந்திய அணியின் கிரிக்கெட் வரலாற்றில் சரித்த சாதனையைப் படைத்தது. மேலும், மைதானத்தில் எந்தவித ஆக்ரோஷத்தையும் காட்டாமல் களத்தில் தனது பேட்டால் பதிலடி கொடுப்பார். இதனாலேயே இவரை இந்திய ரசிகர்களைத் தாண்டி உலகம் முழுவதும் ரசிகர்களை சம்பாதித்தார்.

அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்தும் ஓய்வு பெற்ற தோனி தற்போது ஐ.பி.எல் தொடரில் மட்டும் சென்னை அணியை வழிநடத்தி வருகிறார். பல்வேறு ஜாம்பவான்களை போலவே இவர் தனது சர்வதேச கிரிக்கெட் காலத்தின் இறுதிக்கட்டத்தில் கரும் விமர்சனங்களை எதிர்கொண்டார். மெதுவாக ஆடுகிறார், அணிக்கு தேவையான கட்டத்தில் மெதுவாக ஆடி அணியின் தோல்விக்கு காரணமாக இருக்கிறார் என விமர்சிக்கப்பட்டார்.

"மெதுவாக விளையாடியதால் தோல்வி.. தோனியை திட்டிய ரவி சாஸ்திரி..பீல்டிங் பயிற்சியாளரின் கருத்தால் சர்ச்சை !

இந்த நிலையில், இந்திய அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி இருந்தபோது மெதுவாக விளையாடியதற்காக தோனியை மறைமுகமாக திட்டியதாக அப்போதைய பீல்டிங் பயிற்சியாளர் ஆர் ஸ்ரீதர் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2018-ம் ஆண்டு இந்திய அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் செய்தது. அப்போது இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 323 ரன்களை துரத்தியது. அப்போது தோனி களத்துக்கு வந்த தோனி அதிரடி காட்டாமல் 37 (59) ரன்கள் எடுத்து மெதுவாக ஆடியது இந்திய அணியின் தோல்விக்கு ஒரு காரணமாக பேசப்பட்டது. இதனால் அப்போதைய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தோனியை மறைமுகமாக திட்டியதாக அப்போதைய பீல்டிங் பயிற்சியாளர் ஆர் ஸ்ரீதர் தனது சுயசரிதையில் கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories