விளையாட்டு

பாகிஸ்தான் ஆண்கள் லீக்கை ஓரம் கட்டிய மகளிர் IPL.. ரூ.951 கோடிக்கு ஏலம் போன உரிமை.. ஏலத்தில் வென்றது யார்?

மகளிர் ஐபிஎல் தொடருக்கான ஒளிபரப்பு உரிமையை ரூ.951 கோடிக்கு வயகாம் 18 நிறுவனம் ஏலத்தில் எடுத்துள்ளது.

பாகிஸ்தான் ஆண்கள் லீக்கை ஓரம் கட்டிய மகளிர் IPL.. ரூ.951 கோடிக்கு ஏலம் போன உரிமை.. ஏலத்தில் வென்றது யார்?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

உலக அளவில் பிரபலமான கிரிக்கெட் தொடர் என்றால் அது இந்தியாவில் நடக்கும் ஐ.பி.எல் தொடர்தான். ஐ.பி.எல் தொடர் ஆரம்பிக்கும் வரை சாதாரண கிரிக்கெட் அமைப்பாக இருந்த பி.சி.சிஐ இதன்பின்னர் பெரும் வலிமை வாய்ந்த பணக்கார கிரிக்கெட் அமைப்பாக மாறியது.

ஆரம்பத்தில் லாபம் கிடைக்குமா? என தயங்கி ஐ.பி.எல்.லில் முதலீடு செய்த அணி உரிமையாளர்கள் இப்போது போட்டதை விட பல மடங்கு லாபம் பார்த்துள்ளனர். அதோடு இதில் முதலீடு செய்யும் ஸ்பான்சர்களும் வணிக ரீதியாக லாபம் அடைந்து வருகின்றனர்.

பாகிஸ்தான் ஆண்கள் லீக்கை ஓரம் கட்டிய மகளிர் IPL.. ரூ.951 கோடிக்கு ஏலம் போன உரிமை.. ஏலத்தில் வென்றது யார்?

ஐ.பி.எல் தொடரின் வெற்றியைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை,வங்கதேசம் போன்ற பல்வேறு நாடுகளில் ஐ.பி.எல் பாணியில் கிரிக்கெட் தொடர்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அங்கும் அவை வணிக ரீதியாக வெற்றியை பெற்றுவருகின்றன.

ஆண்களுக்கான ஐபிஎல் பாணியில் பெண்களுக்கான ஐபிஎல் தொடரை நடத்தவும் பிசிசிஐ அமைப்பு திட்டமிட்டு அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 5 அணிகள் கலந்து கொள்ளும் இந்ததொடரின் அனைத்து ஆட்டங்களும் மும்பையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போட்டிகளை மார்ச் முதல் வாரத்தில் நடத்துவதற்கான முன்னேற்பாடுகளும் நடந்து வருகிறது.

பாகிஸ்தான் ஆண்கள் லீக்கை ஓரம் கட்டிய மகளிர் IPL.. ரூ.951 கோடிக்கு ஏலம் போன உரிமை.. ஏலத்தில் வென்றது யார்?

இந்த நிலையில், மகளிர் ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் ஒளிபரப்பு உரிமைக்கான ஏலம் நேற்று நடைபெற்றது. ஏலத்தில் வயகாம் 18, டிஸ்னி ஸ்டார், சோனி ஆகிய நிறுவனங்கள் கலந்துகொண்ட நிலையில், போட்டி உரிமையை வயகாம் 18 நிறுவனம் கைப்பற்றியுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளுக்கு போட்டிகளை ஒளிபரப்புவதற்கான டிவி மற்றும் டிஜிட்டல் உரிமையை வயகாம் 18 நிறுவனம் ரூ.951 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வகையில் மகளிர் ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் ஒரு ஆட்டத்துக்கு ரூ. 7.09 கோடியை பிசிசிஐ-க்கு, வயகாம் 18 நிறுவனம் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் உலகளவில் அதிக மதிப்புடைய பெண்கள் கிரிக்கெட் விளையாட்டு தொடராக மகளிர் ஐபிஎல் மாறியுள்ளது. இது ஆண்கள் பாகிஸ்தான் பிரீமியர் லீக்கின் மதிப்பை விட சுமார் 3 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆண்களுக்கான ஐபிஎல் கிரிக்கெட் உரிமம் ரூ.48,390.05 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories