விளையாட்டு

கடந்த போட்டியில் 200 அடித்த வீரருக்கே இந்த நிலையா ? இவரை விட KL ராகுல் என்ன ஒசத்தி? -ரசிகர்கள் விமர்சனம்!

கடைசி ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் விளாசிய இஷான் கிஷன் வெளியே அமரவைக்கப்பட்டிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த போட்டியில் 200 அடித்த வீரருக்கே இந்த நிலையா ? இவரை விட KL ராகுல் என்ன ஒசத்தி? -ரசிகர்கள் விமர்சனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

சமீபத்தில் முடிவடைந்த வங்கதேச அணிக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்ய இந்திய அணி முதலில் களமிறங்கியது. தொடர்க வீரர் தவான் 3 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து இறங்கிய கோலியும், இஷான் கிஷனும் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அதிலும் இஷான் கிஷன் வங்கதேச வீரர்களின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். அவருக்கு உறுதுணையாக கோலியும் சிறப்பாக ஆடிய நிலையில் இந்த ஜோடி வங்கதேச பந்துவீச்சை எளிதாக சமாளித்து சிதறடித்தது.

அறிமுக ஒருநாள் போட்டியில் சதமடித்த இஷான் கிஷன் அடுத்தடுத்தும் தனது அதிரடியைத் தொடர்ந்து இரட்டை சதம் விளாசி 210 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இறுதியில் இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 409 ரன்கள் குவித்தது. இதன்மூலம் இந்திய அணி 6 -வது முறையாக 400 ரன்களை தாண்டி அதிகமுறை 400 ரன்கள் குவித்த தென்னாபிரிக்க அணியின் சாதனையை சமன் செய்தது.

கடந்த போட்டியில் 200 அடித்த வீரருக்கே இந்த நிலையா ? இவரை விட KL ராகுல் என்ன ஒசத்தி? -ரசிகர்கள் விமர்சனம்!

அடுத்ததாக களமிறங்கிய வங்கதேச அணி 182 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன்மூலம் இந்திய அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இஷான் கிஷனின் அதிரடியை பார்த்த முன்னாள் வீரர்கள் பலர் அவரை புகழ்ந்து தள்ளி இருந்தனர்.

மேலும்,உலகக்கோப்பைக்கு இஷான் கிஷன் இல்லாமல் செல்லக்கூடாது என பல முன்னாள் வீரர்களும் கருத்து தெரிவித்தனர். இந்த நிலையில், தற்போது இந்திய அணி இலங்கை அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. இதன் முதல் ஒருநாள் போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில், அதில் டாஸ் போட்டு இந்த போட்டியில் ஆடும் வீரர்கள் அறிவிக்கப்பட்டனர்.

கடந்த போட்டியில் 200 அடித்த வீரருக்கே இந்த நிலையா ? இவரை விட KL ராகுல் என்ன ஒசத்தி? -ரசிகர்கள் விமர்சனம்!

ஆனால், இதில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக கடைசி ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் விளாசிய இஷான் கிஷன் வெளியே அமரவைக்கப்பட்டிருந்தார். அதிலும் அதிர்ச்சியாக கடைசியாக இலங்கை அணிக்கு எதிரான டி20 போட்டியில் சதம் அடித்த சூரியகுமார் யாதவும் வெளியே அமரவைக்கப்பட்டார். அதே நேரம் தொடர்ந்து சொதப்பி வரும் கே.எல்.ராகுல் ஆடும் லெவனில் இடம்பிடித்தார். இந்த செயலுக்கு ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories