விளையாட்டு

நாட்டுக்காக வரமாட்டார்.. IPL என்றால் வந்துவிடுவார் -இந்திய அணியின் மூத்த வீரரை விமர்சிக்கும் ரசிகர்கள் !

இனி ஐபிஎல் தொடருக்கு தான் பும்ரா விளையாட வருவார் என ரசிகர்கள் அவரை விமர்சித்து வருகின்றனர்.

நாட்டுக்காக வரமாட்டார்.. IPL என்றால் வந்துவிடுவார் -இந்திய அணியின் மூத்த வீரரை விமர்சிக்கும் ரசிகர்கள் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ஆஸ்திரேலியாவில் நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி நிச்சயம் கோப்பை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியுடன் மோசமாக தோல்வியடைந்தது.இந்த தோல்வியை அடுத்து இந்திய அணியை முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

உலகக்கோப்பை தோல்விக்கு அணி நிலையாக இல்லாததே காரணமாக கூறப்பட்டது. உலகக்கோப்பை தொடருக்கு முன்னர் இந்திய அணியில் இருந்து ரோஹித் ஷர்மா, ஜஸ்ப்ரித் பும்ரா, விராட் கோலி, ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட் உள்ளிட்ட பல முன்னணி வீரர்களுக்கு அடிக்கடி ஓய்வு கொடுக்கப்பட்டது.

நாட்டுக்காக வரமாட்டார்.. IPL என்றால் வந்துவிடுவார் -இந்திய அணியின் மூத்த வீரரை விமர்சிக்கும் ரசிகர்கள் !

அதோடு கே.எல்.ராகுல், பும்ரா போன்ற மூத்த வீரர்கள் அடுத்தடுத்து ஏற்பட்ட காயம் காரணமாக அணியில் சேர்ந்து விளையாட முடியாமல் இருந்தது. அதே நேரம் இப்படி இந்திய அணிக்காக ஆடும் வீரர்கள் ஐபிஎல் தொடரில் ஓய்வு எடுக்காமல் தொடர்ந்து விளையாடுவது ரசிகர்கள் மத்தியில் விமர்சனத்தை ஏற்படுத்தியது.

தற்போதைய நிலையில், 29 வயதான பும்ரா காயத்தால் இருந்து மீண்டதாக கூறப்பட்டது. இந்தியா டி20 உலகக்கோப்பையில் தோல்வியைத் தழுவ அவரின் காயமும் ஒரு காரணமாக கூறப்பட்டது. அதேநேரம் பும்ரா இந்தியாவுக்காக ஆடினால்தான் காயமடைவார், ஐபிஎல் வந்தால் நன்றாகி விடுவார் என ரசிகர்கள் விமரிசித்து வருகின்றனர்.

நாட்டுக்காக வரமாட்டார்.. IPL என்றால் வந்துவிடுவார் -இந்திய அணியின் மூத்த வீரரை விமர்சிக்கும் ரசிகர்கள் !

ஏற்கனவே தற்போது நடந்து வரும் இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் பும்ரா களமிறங்கப்படுவார் என தகவல்கள் கசிந்த நிலையில், முதுகுப் பகுதியில் தொடர்ந்து பிடிப்பு இருப்பதால் இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து பும்ரா விலகியுள்ளார்.

இலங்கைக்கு எதிரான தொடருக்கு பின்னர் பின்னர் இந்திய அணி முக்கியமான ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறும். ஆனால், இந்த தொடரிலும் பும்ரா பங்கேற்க மாட்டார் என தகவல் வெளியாகியுள்ள நிலையில், அடுத்து ஐபிஎல் தொடருக்கு தான் பும்ரா வருவார் என ரசிகர்கள் அவரை விமர்சித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories